பெண்களுக்கான 'ஸ்டார்ட் அப் திட்டங்கள்’ மத்திய அரசு செய்துள்ளது என்னென்ன?
நமது பொருளாதார வளர்ச்சியையும், பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
நமது பொருளாதார வளர்ச்சியையும், பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் “ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி” தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் துறையில் பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்தல் மற்றும் நெட்வொர்க்கை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் கீழ், G.S.R இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளின்படி, நிறுவனங்கள் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் (DPIIT) ஸ்டார்ட்அப்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, 660க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 86,713 ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் டிபிஐஐடி எனப்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அங்கீகரித்துள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் இருந்து குறைந்தது ஒரு ஸ்டார்ட்அப் உள்ளது.
இவர்களில், 46% க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரைக் கொண்டுள்ளனர்.
பெண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு:
நாட்டில் பெண்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்க அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
• பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காக, சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் ஸ்டார்ட்அப்களுக்கான நிதித் திட்டத்தில் 10 சதவீத நிதி (ரூ.1000 கோடி) பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
• பெண் தொழில்முனைவோருக்கான தொழில் பாதுகாப்பகத் திட்டம் 20 பெண்கள் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
• ஸ்டார்ட்அப் இந்தியா இணையதளத்தில் பெண் தொழில்முனைவோருக்காக சிறப்பு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் தொழில்முனைவோருக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் இந்த பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
• பெண்களுக்காக விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
• பெண் தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் ஜனவரி 2020 இல் அசாமின் கவுகாத்தி மற்றும் நாகாலாந்தின் கோஹிமாவில் நடத்தப்பட்டது. இதில் 114 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.
• அரசு நடத்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் வளர்ப்பு நிகழ்ச்சிகள் மூலமாகவும், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பெண் தொழில் முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போதுள்ள திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது.
ஸ்டார்அப் நிறுவனங்களுக்கான திட்டங்கள்:
- ஸ்டார்ட்அப் இந்தியா செயல் திட்டம் - நிதி ஆதரவு மற்றும் ஊக்கத்தொகை", "தொழில்-கல்வி கூட்டாண்மை போன்ற உதவிகள் வழங்கப்படுகிறது.
- ஸ்டார்ட்அப்களுக்கான நிதி நிதி (FFS) திட்டம் - நிதியுதவி மட்டுமின்றி உள்நாட்டு மூலதனத்தை எளிதாக்குதல், வெளிநாட்டு மூலதனத்தை சார்ந்திருப்பதை குறைத்தல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
- ஸ்டார்ட்அப்-களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS) - அங்கீகரிப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு கடன் உத்தரவாதங்களை வழங்குகிறது.
- அறிவுசார் சொத்துப் பாதுகாப்பிற்கான ஆதரவு - ஸ்டார்ட்-அப்கள் அறிவுசார் சொத்துப் பாதுகாப்பை அளிக்கிறது.
- தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் சுய-சான்றிதழ்: ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 3 முதல் 5 ஆண்டுகளுக்கு 9 தொழிலாளர் மற்றும் 3 சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் தங்கள் இணக்கத்தை சுய-சான்றளிக்க அனுமதிக்கப்படுகிறது.
- வருமான வரி விலக்கு: ஏப்ரல் 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு இணைக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் ஸ்டார்ட்அப்கள் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.