Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.2500ல் 5000 லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு: 1 கோடி டர்ன்ஓவர் செய்யும் Instapure

2019ல் எம்வி.ராமசாமியால் துவக்கப்பட்ட இன்ஸ்டாபியூர், ஆண்டுக்கு ரூ.2,500 செலவில் 5,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் ரசாயணத்தை தயாரிக்கிறது.

ரூ.2500ல் 5000 லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு: 1 கோடி டர்ன்ஓவர் செய்யும் Instapure

Monday May 31, 2021 , 3 min Read

மோசமான குடிநீரால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதாரச் சுமைகள் கணிசமானவை. இந்தியாவில் 21 சதவீர பரவும் நோய்கள் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக உலக வங்கி தெரிவிக்கிறது. இந்தியாவில் தண்ணீரால் பரவும் நோய்கள், ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் பொருளாதார சுமையை அளிப்பதாக யூனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது.


வறட்சி மற்றும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் இது இன்னும் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் பாதுகாப்பன குடிநீர் வசதியைப் பெற்றுள்ளனர். 1.96 மில்லியன் வீடுகளில் தண்ணீரில் ரசாயண கலப்பு உள்ளது.


இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எம்.வி.ராமசாமி பெங்களூருவில் இன்ஸ்டாபியூர் Instapure நிறுவனத்தைத் துவக்கினார். மக்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க உதவும் வகையில், ஜப்பானின் ஷிகோகு கெமிகல் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து,  சோடியம் டைகுளோரோ ஐசோசயானரைட் (SDIC) –ரசாயனத்தை உரிமம் பெற்ற பெற்றுள்ள இந்திய பிராண்டாக இண்ஸ்டாபியூர் திகழ்கிறது.

Instapure
“சுத்திகரிக்கப்பட்ட பின் தண்ணீர் அனைத்து இயற்கையான தாதுக்களையும் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் எங்கள் தீர்வு அமைகிறது. தினசரி சுத்தமான குடிநீரை பெற முடியாத இந்தியர்களுக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் நகர்புற இந்தியர்களுக்கும் ஏற்றதாக விளங்குகிறது,” என்கிறார் ராமசாமி.

ஆண்டுதோறும் சராசரி இந்திய குடும்பத்திற்கு 5,000 லிட்டர் குடிநிர் தேவை. இந்த தண்ணீரை ஆண்டுக்கு ரூ.2,500 எனும் விலையில் எங்களால் தூய்மைப்படுத்தி தர முடியும் என்கிறார் அவர்.


இண்ஸ்டாபியூர் தனது ரசாயணத்தை 15,000 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கிறது. இதை 35,000 விற்பனை நிலையங்களாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் கிடைக்கிறது. விரைவில் இணையதளம் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஒரு மில்லியன் சாஷேக்களுக்கு மேல் விற்பனை செய்து, 2021 நிதியாண்டில் ரூ.1 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.10 கோடியை இலக்காகக் கொண்டுள்ளது.

துவக்கம்

பத்தாண்டுகளுக்கு முன் ஜப்பானின் ஷிகோகு கெமிக்கல் நிறுவனம் இந்தியர்கள் பாதுகாப்பான குடிநீர் பெற எப்படி உதவ முடியும் என கண்டறிய ஒரு குழுவை அனுப்பியது.

பல ஆண்டு ஆய்வுக்கு பிறகு இந்த குழு சோடியம் டைகுளோரோ ஐசோசயானரைட் ரசாயனத்தை இதற்கான பதிலாக முன்வைத்தது. சர்வதேச அமைப்பிடம் இருந்து இதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் பெற்றிருந்தது.


தண்ணீரில் இருந்து அனைத்து வகையான மாசுகளையும் அகற்ற இதுவே சிறந்த வழி என குழு கண்டறிந்திருந்தது. கிருமிகளையும் இது நீக்குகிறது. தற்போதுள்ள சுத்திகரிப்பு முறைகளில் ஆர்.ஓ முறை அத்தியாவசிய தாதுக்களையும் நீக்குவதாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்த ரசாயணத்தை தேசிய சானிடேஷன் பவுண்டேஷன் சோதனைக்கூடம் பரிசோதித்து சான்றிதழ் அளித்துள்ளது. இது உணவு தரத்திலானது மற்றும் நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றது என்றும் தெரிவித்துள்ளது.


முதலில் ஜப்பானிய நிறுவனம் தமிழக ஏஜெண்ட் மூலம் இதை விற்பனை செய்தது. எனினும் இதற்கான வரவேற்பு சரியாக இல்லை. இந்திய சந்தையை புரிந்து கொள்ள முடியாததால், நிறுவனம் இந்திய செயல்பாடுகளை மூடியது.


“இந்த கட்டத்தில் தான் நிறுவனம் என்னை தொடர்பு கொண்டு, சில்லறை விற்பனை அனுபவ அடிப்படையில் ஆலோசனை கேட்டது. ஆலோசனை கூறியதோடு, இந்த ஐடியா எனக்கு பிடித்திருந்தது. இந்த பிராண்டிற்கான பிரத்யேக உரிமம் தேவை என்று தெரிவித்தேன் என்கிறார் ராம்சாமி.

தயாரிப்பு

இதனையடுத்து ராமசாமி, பெங்களூருவில் உள்ள விற்பனை நிறுவனங்களை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி எடுத்துக்கூறினார். ஒரு முழு குடும்பம் 200 ரூபாயில் ஒரு ஆண்டுக்கு பாதுகாப்பான குடிநீர் பெற முடியும் என விளக்கினார்.

கர்நாடாகவில் 4 லட்சம் டாலருக்கு மேல் சோதனை மார்க்கெட்டிங்கிற்காக செலவிட்டார். இப்போது 15,000 விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது, இதை 35,000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

குடிநீர்

ஜப்பானில் தயாரிக்கப்பட்டு பெங்களூரு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விநியோகிஸ்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவைத் தொடர்ந்து, தெலுங்கானா, ஆந்திரா, கேராளா மற்றும் மகாராஷ்டிராவில் இரண்டு ஆண்டுகளுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

“இது உணவு பொருளாத வகைப்படுத்தப்பட்டுள்ளது. எந்த வகையான நீரையும் சுத்தம் செய்கிறது. தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டாம். ஒரு சாஷே 20 லிட்டர் தண்ணிரை சுத்தமாக்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 3 மாதங்கள் பயன்படுத்தலாம்,” என்கிறார் ராமசாமி.

தயாரிப்பு

ஜப்பானிய நிறுவனத்துடன், 14 ஆண்டு விற்பனை உரிமம் பெற்றிருப்பதாகவும் பிராண்ட் மீது முழு உரிமம் இருப்பதாகவும் கூறுகிறார்.


ஜப்பானிய நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவது மற்றும் விநியோகிஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு தொகையை அளிக்கும் வர்த்தக மாதிரியை நிறுவனம் பின்பற்றுகிறது. சாஷே பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாதம் ரூ.200 வரை செலவாகலாம்.

"60 சதவீத மொத்த லாபத்துடன், மூன்றாண்டுகளில் ரூ.100 கோடி விற்றுமுதல் அடையலாம் என்கிறார் ராமசாமி.

“தண்ணீரை சுத்திகரிக்க இதுவே சிறந்த வழி என வாடிக்கையாளர்களை ஏற்கச்செய்வது தான் சவாலானது. அனைத்து வருமான பிரிவினரையும் இலக்காகக் கொண்டுள்ளோம் என்கிறார்.


தற்போது இந்த பிராண்ட் 39 பேர் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் முறையையும் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஆன்லைனில் 20 சதவீதத்திற்கும் குறைவான விற்பனை அமைந்துள்ளது.

அனைத்துவிதமான தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களுடன் இந்த தயாரிப்பு போட்டியிடுகிறது.


ஆங்கில் கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்