Stock News: இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்; பங்குச்சந்தை பலவீனம் - சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிவு!
தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு நல்ல ஏற்றம் கண்டு, 516 புள்ளிகள் உயர்ந்து 42,278.80 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (04-10-2024) சரிவு கண்டுள்ளன. இந்திய பங்குச்சந்தையின் பிரதான சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 250 புள்ளிகள் வரை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:30 மணி நிலவரப்படி, 145.13 புள்ளிகள் சரிந்து 82,352 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 50 புள்ளிகள் சரிந்து 25,200.25 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு நிப்டி ஸ்மால் கேப் குறியீடுகள் சிகப்பில் சரிவு நிலை காட்ட, தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடுகள் நல்ல ஏற்றம் கண்டு, 516 புள்ளிகள் உயர்ந்து 42,278.80 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளன.
காரணம்:
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட சிக்கல்களினால் பங்குச் சந்தைகள் பலவீனமாக தொடங்கியுள்ளன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
ஓ.என்.ஜி.சி.
டாடா மோட்டார்ஸ்
விப்ரோ
மாருதி சுசூகி
இறக்கம் கண்ட பங்குகள்:
ரிலையன்ஸ்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
அவென்யு சூப்பர் மார்க்கெட்
பீபிசிஎல்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.97ஆக உள்ளது.