Stock News: கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை; பலத்த அடி வாங்கிய பங்குகள் எவை?
இந்திய பங்குச்சந்தையானது இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (30/01/2023):
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று மாற்றத்தை எதிர்பார்த்து கார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்றும் இந்திய பங்குச்சந்தையானது கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 132.45 புள்ளிகள் சரிந்து 59,213 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 46.30 புள்ளிகள் சரிந்து 17,563 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?
அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களை அடுத்து பங்குச்சந்தையானது கடந்த புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் கடுமையான சரிவை சந்தித்தது. ஆனால், இன்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சற்றே ஏற்றம் கண்டுள்ள போதும், வங்கி நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இண்டஸ்இண்ட் வங்கி (2.46 சதவீதம் சரிவு), ஐசிஐசிஐ வங்கி (0.96 சதவீதம் சரிவு), ஹெச்டிஎஃப்சி வங்கி (0.77 சதவீதம் சரிவு), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (0.68 சதவீதம் சரிவு) மற்றும் ஆக்சிஸ் வங்கி (0.65 சதவீதம் சரிவு) ஆகியவை அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக வங்கி நிஃப்டியை பொறுத்தவரை 0.63 சதவீதம் சரிந்து 40,093 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
என்டிபிசி
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
எஸ்பிஐ லைஃப்
பவர் கிரிட்
ஹெச்டிஎஃப்சி
ஐசிஐசிஐ வங்கி
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து 81.69 ஆக உள்ளது.

Gold Rate Chennai: என்ன ஒரு ஆச்சர்யம்; இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை!