Stock News: மீண்டது பங்குச்சந்தை; சென்செக்ஸ் 700+ புள்ளிகள் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 777 புள்ளிகள் உயர்ந்து 78,115.72. புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 239.25 புள்ளிகள் உயர்ந்து 23,693 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையான இன்று (19-11-2024) மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 230 புள்ளிகளும் உயர்ந்தன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:15 மணி நிலவரப்படி, 777 புள்ளிகள் உயர்ந்து 78,115.72. புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 239.25 புள்ளிகள் உயர்ந்து 23,693 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 430 புள்ளிகள் உயர, நிப்டி ஐடி குறியீடு 755 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 960 புள்ளிகளும் உயர்வு கண்டன. மும்பைப் பங்குச் சந்தையின் மிட் கேப் குறியீடும் 1%க்கும் மேல் கண்டு உயர்வு கண்டுள்ளது.
காரணம்:
உலக அளவில் பங்குச் சந்தைகள் உறுதியாக உள்ளமையும், இந்தியாவில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடுகளினாலும் சந்தை மீண்டு முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ட்ரெண்ட்
பீபிசிஎல்
இன்போசிஸ்
என்.டி.பி.சி
அதானி போர்ட்ஸ்
ரிலையன்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
இறக்கம் கண்ட பங்குகள்:
டாக்டர் ரெட்டீஸ் லேப்
ஸ்ரீராம் பைனான்ஸ்
எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ்
ஏஷியன் பெயிண்ட்ஸ்
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்
ஐசிஐசிஐ வங்கி
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.40 ஆக உள்ளது.