கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் பவளப்பாறை உருவாக்கிய மாணவர்!

மும்பையைச் சேர்ந்த சித்தார்த் கூட்டுநிதி மூலம் இரண்டு லட்ச ரூபாய் நிதி திரட்டி கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க 20 மீட்டர் நீள பவளப்பாறையை உருவாக்கியுள்ளார்.

13th Aug 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு அலாஸ்காவில் உள்ள பனிப்பாறைகள் நூறு மடங்கு வேகமாக உருகி வருகிறது. உலக வெப்பமயமாதலின் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.


பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு தங்குமிடமாக விளங்கும் பவளப்பாறைகள் கடல் அரிப்பைக் குறைக்கிறது. ஆனால் மாசு காரணமாகவும் மீன்பிடிப்பு அதிகரிப்பதாலும் கடல் வெப்பநிலை அதிகரிப்பதாலும் ஏற்படும் மாசு காரணமாக பவளப்பாறைகளும் அழிந்து வருகிறது.

இந்தியாவில் பவளப்பாறைகளுக்கு உள்ள ஆபத்தைத் தடுக்கும் வகையில் 3டி பிரிண்டட் செயற்கை பவளப்பாறையை உருவாக்கியுள்ளார் மும்பை பிடி சோமானி பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவரான பதினேழு வயது சித்தார்த் பிள்ளை.

லின்கின் பார்க் இசைக்குழுவின் பாடகரான மறைந்த செஸ்டர் பென்னிங்டன் பெயரில் உருவாகும் இந்த பவளப்பாறை இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் மாட்யூலர் செயற்கை பவளப்பாறை என்கிற பெருமைக்குரியது.

1

சித்தார்த் ஓராண்டிற்கும் மேலாக இதன் வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிளாக்குகள் கொண்ட இவரது அமைப்பிற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். 20 மீட்டர் நீளம் கொண்ட 3டி பிரிண்டட் பவளப்பாறை புதுச்சேரி கடற்கரையில் அமைக்கப்படும்.


ஸ்கூபா டைவரான சித்தார்த் கடந்த ஐந்தாண்டுகளாக டைவ் செய்து வருகிறார். ஸ்கூபா டைவிங்கில் பட்டம் பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த சமயத்தில் கடல் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப்பாறைகள் வெளிறிப் போவதைக் கண்டார்.

”அவை நிறத்தை இழந்து, நொறுங்கி 30 நாட்களில் அழிந்து போகிறது. கடல் தளத்தில் அழிந்த பவளப்பாறையைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது,” என்றார்.

’இந்தியா டுடே’ உடனான உரையாடலில் சித்தார்த் கூறும்போது,

“என்னுடைய பதினாறாவது வயதில் அந்தமானில் ஸ்கூபா டைவ் செய்தபோது பவளப்பாறைகள் வெளிவருவது குறித்தும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை உலகளவில் நிலையற்ற தன்மை இருப்பதையும் அறிந்தேன். அப்போதிருந்து இந்த கடல்வாழ் உயிரினங்களை மீட்பதற்கு என்னால் இயன்ற வகையில் பங்களிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன்,” என்றார்.
2

இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண சித்தார்த் 3டி பிரிண்டட் பவளப்பாறைகளை உருவாக்க முடிவு செய்தார். அவர் கூறும்போது,

”பவளம் படிவதற்கு உதவும் வகையில் துளைகள் கொண்ட மாதிரியை உருவாக்குவது தொடர்பாக தெரிந்துகொள்ள 2018ம் ஆண்டு மே மாதம் 45 நாட்கள் பயிற்சி எடுத்தேன்,” என சித்தார்த் தெரிவித்ததாக ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ குறிப்பிடுகிறது.

முதல் முன்வடிவத்தை சிமெண்ட் கலவையுடன்கூடிய அச்சாக வீட்டிலேயே உருவாக்கினார். கடலோரப் பகுதிகளில் பயன்படுத்தவேண்டியிருப்பதால் மாதிரி பெரியதாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்.


எனவே சித்தார்த் கூட்டுநிதி வாயிலாக 2 லட்ச ரூபாய் திரட்டி 11 கிலோ ப்ளாக்குகளாக சுமார் 200 என்கிற எண்ணிக்கையில் உருவாக்கினார். 3டி பிரிண்டட் ப்ளாக்குகள் தயாரானதும் புதுச்சேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்குள்ள இவரது டைவ் மையமான ‘டெம்ப்பிள் அட்வென்சர்ஸ்’ கடலில் மாதிரியை அமைக்க உதவியது.


இந்த செயற்கை பவளப்பாறை கடல்சார் உயிரினங்களுக்கு பயனுள்ளதாக அமையும். மீன்கள் வலையிலிருந்து தப்பிக்கவும் உதவுகிறது. கடல் உயிரியலாளர் சுனேஹா ஜகன்னாதன் ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான உரையாடலில் கூறும்போது,

“செயற்கை பவளப்பாறைகள் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் இதுவே முதல் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மென் பவளப்பாறை வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை உணர்த்துகிறது. ஒரு புதிய சுற்றுச்சூழல் எவ்வாறு வளர்ச்சியடைகிறது, எது முதலில் வளர்கிறது, எப்படி படிப்படியாக வளர்கிறது, கடல்சார் உயிரினங்கள் எவ்வாறு தனக்குத் தானே ஆதரவளித்துக்கொள்கிறது போன்றவற்றைக் கவனிக்க வாய்ப்பாக அமையும்,” என்றார்.

செயற்கை பவளப்பாறை வெறும் அடிப்படை கட்டமைப்பு மட்டுமே. இதில் பாலிப்புகள் வளரக்கூடும். ஆனால் பவளப்பாறைகள் வெளிரும் தன்மையை இதனால் தடுக்கமுடியாது என்கிறார் சித்தார்த்.


கடல் வெப்பமயமாதலைத் தடுத்தால் மட்டுமே அது சாத்தியம் என்கிறார். தற்போது பவளப்பாறை மறு உருவாக்கம் செய்யும் திட்டத்தைத் தொடங்க டெம்ப்பிள் அட்வென்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் சித்தார்த். இதன் மூலம் டைவ் செய்பவர்கள் செயற்கை பவளப்பாறைகளை பாதுகாப்பதிலும் உருவாக்குவதிலும் பங்களிக்கலாம். மேலும் இந்த ஆண்டு கோலாலம்பூரில் நடக்க உள்ள International Congress of Conservation Biology-யில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.

கட்டுரை: THINK CHANGE INDIA
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India