Forbes List: இந்தியாவின் வயது முதிர்ந்த பில்லியனர் - 91 வயதில் சுப்பம்மா ஜஸ்தி பில்லியனர் ஆனது எப்படி?
இந்தியாவின் முதிய வயது பில்லியனர் சுப்பம்மா ஜஸ்தி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 2,650வது இடத்தில் இருக்கிறார். இவரது நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள்
உலகின் ரியல் டைம் பில்லியனர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 91 வயது நிரம்பிய இந்திய முதிய பெண்மணி சுப்பம்மா ஜஸ்தி இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவின் முதிய வயது பில்லியனர் சுப்பம்மா ஜஸ்தி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 2,650வது இடத்தில் இருக்கிறார். இவரது நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் கணக்கிற்கு ரூ.91,787,837,900.00).
ஹைதராபாத்தைச் சேர்ந்த சுப்பம்மா ஜஸ்தியின் இந்த சொத்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 'சுவன் பார்மசியூட்டிக்கல்'ஸில் இருந்த பெரிய அளவிலான பங்குகளை 2022-ம் ஆண்டில் தனியார் உலக பங்கு நிறுவனமான அட்வெண்ட் இண்டெர்னேஷனலிடம் விற்றதிலிருந்து பெறப்பட்டதாகும். இதோடு, பிப்ரவரி 2023ல் இறந்த அவரது கணவர் சுப்பா ராவ் ஜஸ்தியின் சொத்துக்களும் சுப்பம்மாவுக்கு வந்து சேர்ந்தது.
சுவென் பார்மசூட்டிக்கல்ஸ் 1989-ம் ஆண்டு இவரது மகன் வெங்கடேஸ்வரலு ஜஸ்தியால் தொடங்கப்பட்டது. அவர் 1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் ஆறு மருந்தகங்களை நடத்தினார்.
இந்நிலையில், நரம்பியல் சிகிச்சைகளில் கவனம் செலுத்தும் Suven Life Sciences நிறுவனம் பங்குச்சந்தையில் தனியாகப் பட்டியலிடப்பட்டதையடுத்து ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட சுவென் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தனியாகப் பிரிக்கப்பட்டது.
ஜஸ்தியைத் தவிர, 2024ம் ஆண்டு ஃபோர்ப்ஸின் உலக பில்லியனர்கள் பட்டியலில் 35.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், சாவித்ரி ஜிண்டால் என்னும் பணக்கார இந்தியப் பெண்மணியும் இடம்பிடித்துள்ளார்.
இந்திய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 116 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்திலும், கௌதம் அதானி 84 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஜிண்டால் இந்தியாவின் நான்காவது பணக்காரர் ஆவார். உலக அளவில் 46வது இடத்தில் உள்ளார் ஜிண்டால்.
2024 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் தனது பட்டியலில் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கையை 169-இலிருந்து 200 ஆக அதிகரித்துள்ளது, கூடுதலாக, பெண் கோடீஸ்வரர்களின் விகிதம் 13.3% ஆக உயர்ந்துள்ளது, 2,781 பில்லியனர்களில் 369 பேர் பெண்களாக உள்ளனர், 2023-ல் 12.8% ஆக இருந்த போது பெண் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 337 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
5.5 பில்லியன் சொத்து மதிப்பு; ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளம் பணக்காரரான நிகில் காமத்!