ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் ஏலத்தில் விலை என்ன தெரியுமா?
குயின் எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் ஒன்று இந்திய மதிப்பில் 9.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
குயின் எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் ஒன்று இந்திய மதிப்பில் 9.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
செப்டம்பர் 8, 2022 அன்று பிற்பகலில், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் யுனைடெட் கிங்டமை ஆட்சி செய்து வந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. பிரிட்டனை நீண்ட காலமாக ஆட்சி செய்த எலிசபெத் மகாராணியின் மரணம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1952ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் ஓய்வு எடுத்துவந்தார். இந்த நிலையில், தனது 96 வயதில் நேற்று காலமானார். இவரின் மரணம் இங்கிலாந்து மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராணி எலிசபெத்துக்குப் பிறகு அரச பதவியை 73 வயதான அவரின் மூத்த மகன் சார்லஸ் ஏற்கிறார்.
டீ பேட் ஏலத்தில்
வழக்கமாக அரசக் குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் லட்சக்கணக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஏலம் போவது வழக்கம். தற்போது இங்கிலாந்தின் மகாராணியாக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தியதாக கூறப்படும் டீபேக் ஒன்று ரூ.9.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.
1998ம் ஆண்டு வின்ட்சர் கோட்டையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக வந்த நபர்கள் இந்த டீ பேகை திருடிச்செல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. ராணி எலிசபெத் பயன்படுத்திய டீபேக் தற்போது ஆன்லைன் விற்பனை தளமான இ-பேயில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆன்லைன் தளத்தில் $12,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 9.5 லட்சத்திற்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
"இது 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் CNN இல் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இது ராணி எலிசபெத் II ரெஜினா பிரிட்டானியாவால் பயன்படுத்தப்பட்டது மற்றும் வின்ட்சர் கோட்டையிலிருந்து கரப்பான் பூச்சி தாக்குதல்களை சமாளிக்க உதவுவதற்காக அழைத்து வரப்பட்ட பூச்சி அழிப்பாளர்களால் எடுத்து வரப்பட்டது,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த "moo_4024" என்ற விற்பனையாளர், இது எலிசபெத் ராணி பயன்படுத்தியதா என்ற சந்தேகத்தை போக்குவதற்காக, இது அரச குடும்பத்தைச் சேர்ந்த பொருள் தான் என்பதை உறுதி செய்யக்கூடிய சான்றிதழையும் இணைந்துள்ளார். பிற இ-காமர்ஸ் தளங்களில் ராணி எலிசபெத் கையொப்பமிட்ட ஆட்டோகிராப், ராணியின் பார்பி பொம்மை போன்ற சில பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
தொகுப்பு - கனிமொழி