Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

படித்தது எம்.பி.ஏ., செய்வது மாட்டுத் தீவனம் தயாரிப்பு...

தாத்தா சிறிய அளவில் தொடங்கிய கால்நடைத் தீவன ஆலையை இன்று தனது அப்பாவோடு இணைந்து மிகப்பெறிய ஆலையாக வளர்த்து, ஆண்டுக்கு 90 கோடி விற்றுமுதல் காண்கின்றார் ஈரோடு ராமமூர்த்தி.

படித்தது எம்.பி.ஏ., செய்வது மாட்டுத் தீவனம் தயாரிப்பு...

Thursday November 28, 2019 , 5 min Read

மெத்தப் படித்துவிட்டு, வெளிநாட்டுக்காரனுக்குக் கீழ் பணிபுரிந்து லட்சங்களில் சம்பாதிக்க ஆசைப்படும் பலர் மத்தியில், மேனேஜ்மெண்ட் படிப்பை படித்துவிட்டு கால்நடைத் தொழிலில் தன்னை இணைத்துக்கொண்டு, இன்று நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறையிலிருக்கும் இவர், அந்த நிறுவனத்தை உச்சாணிக்கொம்பில் கொண்டு நிறுத்தி இருக்கிறார் என்றால் அவரின் உழைப்பை பாராட்டாமல் இருக்கமுடியுமா...


ஈரோட்டைச் சேர்ந்த கணபதி செட்டியார் 1979ல் தமிழ்நாட்டில் முதன்முதலில் சிறிய ஆலையாகத் தொடங்கியதே ‘R.G.Sundar & Co’. இந்நிறுவனம் ‘காமதேனு’ என்ற ப்ராண்ட் பெயரில் மாட்டுத்தீவனம் தயாரித்து வந்தது. அவரின் மகன் சுந்தர் அதை செவ்வனே எடுத்து நடத்த, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ராமமூர்த்தியும் தனது குடும்பத் தொழிலில் சேர்ந்த பின், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மாட்டுத்தீவன விற்பனையில் முன்னணி ப்ராண்டாக விளங்குகிறார்கள்.


மாட்டுத்தீவன ஆலை நடத்துபவர்கள் பலர், அதை ஒரு வளர்ச்சித் தொழிலாக பார்க்காத சமயத்தில், அதையும் இக்காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் புகுத்தி, ஆயிரங்களில் வருவாய் ஈட்டிய நிலையை மாற்றி, அதை லட்சங்களாய் பெருக்கி, இன்று கோடிகளைத் தொட்டு மிகப்பெரிய நிறுவனமாக்க முக்கியக் காரணமாக இருக்கும் எஸ்.ராமமூர்த்தி உடன் நடத்திய பேட்டியில் இருந்து அவரின் வெற்றிக் கதை...


சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் முடித்துவிட்டு, எம்.பி.ஏ. படித்திருக்கும் எஸ்.ராமமூர்த்தி ஈரோட்டில் பிறந்தவர். சொந்தமாகத் தொழில் செய்ய விரும்பி, புத்தக வியாபரம் ஒன்றை ஆரம்பித்து செய்து வந்துள்ளார். அதைச் சரியாக செய்ய முடியாததால், குடும்பத் தொழிலையே தனது முன்னோர் அனுபவங்களைக் கொண்டு சிறப்பாக நடத்தலாம் என்ற எண்ணத்தில் அத்தொழிலில் இணைந்தார்.

ராமமூர்த்தி

எம்பிஏ படித்துவிட்டு, கால்நடை தொடர்பான தொழிலா? என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு ராமமூர்த்தி கூறியது,

“நான் சி.கே.பிரஹலாத் அவர்களின் ’Bottom of the Pyramids’ என்கிற நூலின் பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக கால்நடை சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் அறிமுகப்படுத்த ஆர்வம் கொண்டு இந்தத் தொழிலுக்கு வந்தேன்,” என்கிறார்.

மேலும் இந்த பால்பண்ணை தொழிலிற்கு வளமான எதிர்காலம் தொடர்ந்து இருக்கின்ற காரணத்தாலும், இந்தத் தொழிலை முன்னெடுக்க முடிவெத்தார். எனது இத்துறை சார்ந்த புதுமையான யோசனைகளுக்கு எனது அப்பா, அம்மா ஊக்கம் அளித்து உற்சாகப்படுத்தியதும் இத்தொழிலின் மேல் எனக்கு இருந்த ஆர்வம் அதிகரித்து இதில் முழு வீச்சில் ஈடுபட வைத்தது, என தனது தொடக்கத்தை விவரித்தார் ராமமூர்த்தி.


’காமதேனு மாட்டுத்தீவனம்’ தயாரிப்பு இவரது தாத்தா காலத்தில் ஈரோட்டில் தொடங்கப்பட்டது. இந்தத் தீவன ஆலையில் நாள் ஓன்றுக்கு 5 டன் உற்பத்தித் திறனில் தொடங்கி, பின்னர் இவரது அப்பா அவரின் சீரிய முயற்சியினால் நாள் ஒன்றுக்கு 50 டன் உற்பத்தித் திறன் கொண்ட தீவன ஆலையாக விரிவுப்படுத்தினார்.

ராமமூர்த்தி தீவன ஆலைத் தொழிலில் இணைந்த 15 ஆண்டுகளில் நாள் ஓன்றுக்கு 400 டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையாக வளர்ச்சி அடையச் செய்துள்ளார்.

RGS Feeds கால்நடை தீவனங்கள் தயாரிப்பில் தொழில்நுட்பம்

எந்தப் பொருளும் அதிகமான அளவில் உட்பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்து தயாரிக்கும் பொழுது அவற்றில் சில கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று. இத்தகைய சூழ்நிலையில் எற்படும் சிறிய அளவிலான பிரச்சினை கூட மிகுந்த பாதிப்பை உண்டாக்கக்கூடும். எனவே,

இம்மாதிரியான சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே உயர் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன பரிசோதனைக் கூடங்களை நிறுவி அவற்றின் மூலம் அனைத்து மூலப்பொருட்களையும் பரிசோதித்து முடிவுகளைப் பார்த்த பின்னரே அவை உற்பத்திக்காக எடுத்துக் கொள்ளப் படுகின்றது, என்கிறார் ராமமூர்த்தி.

அவ்வாறு சேர்க்கப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரித்த தீவனம் முற்றிலும் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் தரம் கடுமையாக கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. இதுவே இதர கம்பெனி தீவனங்களிலிருந்து ’காமதேனு’ (தீவன ப்ராண்ட்) தனிச்சிறப்போடு விளங்குகிறது.

ஆர்ஜிஎஸ்

RGS feeds நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுந்தரம் மற்றும் ராமமூர்த்தி

எங்களது கால்நடை தீவனங்களின் 'Live Yeast Culture' கலந்து இருப்பதால் கால்நடையில் இருந்து வெளியேற்றப்படும் தீங்கு பயக்கும் மீத்தேன் வாயு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு அதன் மூலம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க தொலைநோக்கு பார்வையுடனான நடவடிக்கையை எடுத்துள்ளேன், என்றும் பகிர்கிறார்.

வளர்ச்சி, வருவாய், லாபம்

ராமமூர்த்தியின் தாத்தா தொடங்கிய சிறிய தீவன ஆலை, மெல்ல வளர்ச்சி அடைந்து உற்பத்தித் திறனை அதிகரித்தது. இன்று இந்தத் தீவன ஆலை நல்ல லாபத்துடனும், காலத்துக்கேற்ற மாற்றங்களுடனும் வெற்றிகரமாக உயர்ந்துள்ளது.


கடந்த 15 ஆண்டுகளில் நானும் எனது அப்பாவும் சேர்ந்து, நாள் ஒன்றுக்கு 400 டன் உற்பத்தித் திறன் கொண்ட நவீன அம்சங்கள் உடன் கூடிய முற்றிலும் ஐரோப்பிய தொழில் நுட்பங்களை கொண்ட ஆலையாக விரிவுப்படுத்தி இயங்கிக் கொண்டு வருகிறோம்.”

”ஆரம்பத்தில் வருடாந்திர விற்றுமுதல் 50 லட்சமாக இருந்தது. மெல்ல வாடிக்கையாளர்களை அதிகரித்ததன் மூலம் வியாபாரப் பகுதிகளை விரிவாக்கி வருடாந்திர விற்றுமுதல் 90 கோடிகளுக்கும் மேலாக உயர்ந்து இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

வருங்காலத் திட்டம்

2025ஆம் ஆண்டுக்குள் வருடாந்திர விற்றுமுதல் (Turnover) ஆயிரம் கோடிகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து அதை நோக்கித் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ராமமூர்த்தி பகிர்ந்தார். இதற்காக தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இவர்களது தீவனம் கிடைக்கின்ற வகையில் விரிவான முயற்சிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


கால்நடைகளுக்குத் தேவையான அனைத்தும் - கருவூசி முதல் கால்நடை தீவனம் வரை எல்லா கால்நடைகளுக்கும் எல்லா காலகட்டத்திற்கும் ஏற்றவகையில் தயாரித்து வழங்குவதே எங்கள் தலையாய நோக்கம். அந்த வகையில் வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கிராமப்புற கறவை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இதுவே ’Think - Global Act Local’ எங்கிற எங்களின் நோக்கம்.

சந்தித்த சவால்கள்: சமாளித்த விதங்கள்

தொன்றுதொட்டு கறவை விவசாயிகள் தாங்கள் செய்வதே சரி என்ற நம்பிக்கையில் அரிசி தவுடு, கோதுமை தவுடு தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்கள். அவர்களுக்கு தொடர்ந்து பலவகையான கடுமையான முயற்சிகளினால் விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடைகளுக்கு அடர் தீவனம் வழங்குவதனால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் பழக்க வழக்கங்களை மாற்றினோம்.

இதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைத் தவிர்த்தோம். தீவனத்தில் சரிவிகிதமாக புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய தீவனமாக கொடுத்து ஒன்றரை வருடத்திற்கு ஒரு கன்று என்று இருந்த சூழ்நிலையை மாற்றி வருடத்திற்கு ஒரு கன்று என மாற்றி விவசாயிகளுக்கு அணுகூலமான சூழலை எற்படுத்தினோம்.

எங்கள் போட்டியாளர்களை சமாளிப்பதற்காக நாங்கள் எப்பொழுதும் அவர்கள் வியாபார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அதற்கு மாறாக சிறப்பு மற்றும் தனித்தன்மை வாய்ந்த தயாரிப்புகளை வழங்கி வெற்றி கண்டு வருகிறோம், என்கிறார் தன்னம்பிக்கையோடு.


உதாரணமாக ஜல்லிகட்டுக் காளைகளுக்கு ’நந்தீஸ் பவர்’, கோவில் கோசாலைகளில் பராமரிக்கபடும் பசுக்களுக்காக ‘கோ ஸ்வஸ்தி’, என்ற வகைகளில் தீவனத்தை பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்வதால் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.


கால்நடைகளுக்கு எளிதில் ஜீரணிக்கும் வகையில் தயாரிக்கபடும் தூள் தீவனங்களில் Milky Mash என்ற Multi Grain தீவனம் முதல்முறையாக Live Yeast மற்றும் Enzyme கலந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மத்தியில் நல்ல விற்பனை ஆவதாகக் கூறுகிறார்.

முன்மாதிரிகள்

இந்தியாவில் முன்னனி பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் அவர்களின் ’வாங்க சாதிக்கலாம்’ என்கிற நூலின் மூலமாக அவர் பகிர்ந்த ஒரு வியாபாரி Forward Integration and Backward Integration என்னை யோசிக்க வைத்து அவரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வைத்தது. மேலும் ’Marketing Techniques' மூலமாக சி.கே.ரங்கநாதன் அவர்களும் தனது சிறப்பான சிந்தனைகளால் ராமமூர்த்தியின் முன்மாதிரியாக திகழ்கிறார்.


இளம் தொழில்முனைவர்களுக்கு இவர் சொல்வதெல்லாம், ‘நாம் செய்யும் தொழில் எப்பொழுதுமே Out Of Box Thinking இருக்கவேண்டும்,’ என்பதே.

முன்னோர்களின் அனுபவங்களைக் கற்றுக் கொண்டு அவற்றோடு குடும்பத் தொழிலில் நவீன தொழில் நுட்பங்களைப் பன்படுத்தி கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும். காலநிலைக்கு தகுந்தவாறு மாற்றங்களை செய்து சிறப்பான மற்றும் வலுவான ’Branding Creation’ செய்தால் வளர்ச்சியும், வெற்றியும் நிச்சயம்,” என்கிறார்.
kamadhenu

RGS Feeds நிறுவன ஆலை (இடது)

விவசாயம் சார்ந்த தொழில் மீதான ஆர்வம்

இந்தியப் பொருளாதாரம் இந்திய கிரமாங்களில் தான் உள்ளது என்பதை நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் இந்தத் தொழிலை விவசாயிகள் மத்தியில் பரவலாக்க பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டேன், என்கிறார் ராமமூர்த்தி. இதற்காக விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவற்றுள் சில:


  • பால் பண்ணை தொழிலில் ஈடுபடத் தேவையான தொழில் நுட்பங்கள்.
  • எந்த எந்த இடங்களுக்கு எந்த எந்த இனம் தோதானது என்கிற விழிப்புணர்வு.
  • பால் உற்பத்தி அதிகரிக்கத் தேவையான ஆலோசனைகள்.
  • பாலின் புரதச்சத்து கொழுப்புச்சத்து உயர நுண்ணூட்டங்கள் தயாரித்து வழங்கியது.
  • கோமாரி போன்ற கொடிய நோய்கள் தாக்கும் சமயங்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவ முகாம்கள் அமைப்பு.
  • கிருமிகள் மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் பெர்மாங்னேட் பவுடர் விலையின்றி அதிக அளவில் வினியோகிக்கபட்டது.


இவரின் இந்த செயல்பாடுகளினால் விவசாயிகள் பெரும் அளவில் திருப்தியும் ஆதாயமும் அடைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“இதுவே எனக்கும் இந்தத் தொழிலின் மீது ஒரு ஆத்ம திருப்தியை எற்படுத்துகிறது. அதனால் தொடர்ந்து ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன்.”

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் பால் கொள்முதல் நிறுவனங்களுடன் நடத்தும் ’Dairy Connect’ எனும் நிகழ்ச்சியில் பால் பண்ணையாளர்கள் கலந்து கொள்கின்றனர். இது இவர்களுக்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாக அமைந்து பால் உற்பத்தித் தொழில் வேகமாக வளர உறுதுணை புரிகிறது.


அக்காலத்தில் நுண்ணூட்ட தயாரிப்புகள் பெரும்பாலும் வட இந்திய நிறுவனங்களின் மூலமாகவே தயாரித்து சப்ளை செய்யப்பட்டு வந்தது. அவை நம் தமிழ்நாட்டு கால்நடைகளுக்கு உகந்ததாக இல்லாதிருந்தது. எனவே தனது நிறுவனத்திலேயே மேற்படி நுண்ணூட்ட வகைகள் மற்றும் கால்சியம் டானிக்குகளை தயாரித்து சிறப்பான முறையில் விநியோகித்து பாலில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து மற்றும் பால் அடர்த்தி அதிகரிக்கச் செய்தது, கால்சியம் சத்து பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ததாக கூறினார்.


மேலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பால் நுகரப்படுவதால், அதைத் தீங்கு இல்லாமல் வழங்க அனைத்து சீரிய நடவடிக்கைகளும் எடுத்து, அதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயம் தழைக்க உறுதியான அஸ்திவாரத்தை ஏற்படுத்தி வருவதாக முடிக்கிறார் நம்மூர் நாயகன்.