Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் நாகர்கோவில் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப்: அசத்தும் அருண் ராஜீவ்!

2018ல் தொடங்கப்பட்ட நாகர்கோவிலில் இருந்து செயல்படும் FinOs சாஸ் நிறுவனம், இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு மென்பொருள் தீர்வுகள் அளிக்கிறது.

ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் நாகர்கோவில் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப்: அசத்தும் அருண் ராஜீவ்!

Tuesday September 28, 2021 , 3 min Read

எந்த ஊரில் இருந்தாலும் டெக்னாலஜி நிறுவனத்தைத் தொடங்க முடியும் என்பது பல உதாரணங்களை உள்ளது. சமீபத்தில் 'FinOS Technologies' 'ஃபின்ஓஎஸ் டெக்னாலஜீஸ்' நிறுவனத்தின் நிறுவனர் அருண் ராஜீவ் சங்கரன் உடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.


சர்வதேச அளவில் 11 நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் நிறுவனம் செயல்படுவது நாகர்கோவிலில். தற்போது நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால், முதலீட்டாளர்களுடன் உரையாடுவதற்கு வசதியாக சென்னையில் கிளையைத் தொடங்கியுள்ளனர்.


நம்மை பொறுத்தவரை பணம் சார்ந்த விஷயங்கள் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியவைதான். ஆனால், கூட்டுறவு வங்கிகளை நாம் பெரிதும் கவனிப்பதில்லை.

arun rajiv

ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு கூட்டுறவு வங்கிகளின் பங்கும் தவிர்க்க முடியாதது. இந்த வங்கிகளுக்குத் தேவையான மென்பொருளை வடிவமைத்து 11 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது 'FinOS Technologies'. அருண் ராஜீவ் உடன் உரையாடியதில் இருந்து இந்தத் துறைக்கு உள்ள வாய்ப்புகளை புரிந்துகொள்ள முடிந்தது.

ஆரம்பகாலம்

சொந்த ஊர் நாகர்கோவில். தாத்தா, மாமா என அனைவரும் ஊரில் தொழில்துறையில் இருந்தனர். விண்ட்மில், சைக்கிள் மார்ட் கட்டுமானம் என பலதுறைகளில் இருந்தனர். அதனால் சிறு வயதில் இருந்து தொழிலில் மீது ஆர்வம் இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஜினீயரிங் படித்த பிறகு டெக்னாலஜி சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்னும் திட்டம் இருந்ததே தவிர என்ன நிறுவனம் என்பது குறித்து ஐடியா எதுவும் இல்லை.


இதனை தொடர்ந்து எம்பிஏ படித்தபோது What is the financial inclusion? என்னும் கேள்வியை உறவினர் கேட்டிருக்கிறார். அப்போது பைனான்ஸியல் இன்குளுஷன் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்கிறார் அருண் ராஜீவ். சிறு நகரங்களில் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பங்கு என்ன என்பது அப்போது அவருக்குப் புரிகிறது. ஆனால் இந்த வங்கிகள் பெரும்பாலும் கணிணிமயமாக்கம் செயய்ப்படவில்லை. ஒரு வேளை டிஜிட்டல் செய்யப்பட்டிருந்தாலும் எக்ஸெல் ஷீட்களிலே மொத்த வங்கியும் செயல்பட்டது. அவர்களுக்கு என பிரத்யேகமாக எந்த சாப்ட்வேரும் இல்லை என்பது தெரியவந்தது.


வங்கிகளில் பயன்படுத்தபடும் சாப்ட்வேர் கூட்டுறவு வங்கிகளால் பயன்படுத்த முடியாது. அதனால் அவர்களுக்கு ஏற்ற வகையில் சாப்ட்வேர் இருக்க வேண்டும் என தொடங்கப்பட்டதுதான் ’ஃபின்ஓஎஸ் டெக்னாலஜீஸ்’ நிறுவனம்.

சாஸ் மாடல்

கூட்டுறவு வங்கிகளில் இரு பிரிவு இருக்கிறது. கம்யூட்டர் இருக்கும் ஆனால் பிரத்யேக சாப்ட்வேர் இருக்காது, எக்ஸெல் ஷீட்களை பயன்படுத்துவது ஒரு வகை. கம்யூட்டரே இருக்காது லெட்ஜர் புத்தகத்தில் கணக்கு எழுதும் நிறுவனங்கள் மற்றொரு வகை. லெட்ஜர் புத்தகத்தில் கணக்கு எழுதும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக மாற்ற நினைப்பதில்லை. அவர்களுக்கு மூலதன செலவு அதிகம் என்பதால் அவர்களை மாற்றுவதற்கு அதிக காலம் எடுக்கும்.

ஆனால் எக்ஸெல் ஷீட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. அவர்கள் மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 11 நாடுகளில் 36 வாடிக்கையாளர்கள் உள்ளன.

இந்தியாவில் கூட்டுறவு வங்கி என்று அழைப்பதுபோல ஆப்ரிக்காவில் SACCO (Savings and Credit Cooperatives) என்றும், அமெரிக்காவில் Credit Unions என்றும், ஐரோப்பாவில் Building Societies என்றும் அழைக்கப்படுகின்றன. தற்போது இந்தியா தவிர எங்களுடைய வாடிக்கையாளர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ளனர். கென்யா, மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


இவர்களுக்கு சாஸ் மாடலில் பில்லிங் செய்கிறோம். எங்களுடைய கோர் பேங்கிங் சாப்ட்வேரை ஒரு பணியாளர் பயன்படுத்துவதற்கு மாதம் ரூ.1000 வசூல் செய்கிறோம். இருந்தாலும் குறைந்த பட்சம் இவ்வளவு யூசர் வாங்க வேண்டும் (குறைந்தபட்சம் ரூ.10000 கட்டணம் வசூலிக்கிறோம். வெளிநாடுகளுக்கு டாலரில் வசூல் செய்கிறோம்) என்பதையும் அடிப்படையாக வைத்திருக்கிறோம்.

நிதி சார்ந்த தகவல்கள்

2018-ம் ஆண்டு எங்களது செயல்பாட்டினைத் தொடங்கினோம். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கினோம். தற்போது 15 பணியாளர்கள் உள்ளனர். அனைவரும் நாகர்கோவிலில் உள்ளனர்.  

முதல் ஆண்டில் ரூ.8.3 லட்சம் அளவுக்கு வருமானம் இருந்தது. கடந்த நிதி ஆண்டில் ரூ.48 லட்சம் அளவுக்கு வருமானம் ஈட்டினோம். நடப்பு நிதி ஆண்டில் தற்போதே 1 கோடி ரூபாய் வருமானத்தை தாண்டிவிட்டோம். நிதி ஆண்டு முடிவதற்குள் ரூ.2.50 கோடி வருமானம் எதிர்பார்க்கிறோம்,” என்றார் அருண் ராஜீவ்.
finos

FinOS குழுவினர்

National Science and technology entrepreneurship development fund எங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கி இருக்கிறது. இதுதவிர பல ஸ்டார்ட் அப் அமைப்புகள் எங்களை அங்கீகரித்திருக்கின்றன. தற்போது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக நிதி திரட்டும் பணியில் இருக்கிறோம். இதற்காக முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அதனால் சென்னையில் ஒரு அலுவலகத்தை தொடங்கி இருக்கிறோம். நிதி கிடைத்தபிறகு அடுத்த கட்ட நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் வைத்திருக்கிறோம் என அருண் கூறினார்.


மக்கள் கூட்டுறவு வங்கிகளில் இருந்து அடுத்தகட்டமாக கமர்சியல் வங்கிகளுக்கு மாறிவிடுவார்கள் என்பதால் கூட்டுறவு வங்கிகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா? அவற்றை மட்டுமே நம்பி இருக்க முடியுமா என்று கேட்டதற்கு,

“கூட்டுறவு வங்கிகளுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இந்தியாவில் 100 கிளைகளுடன் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் கூட உள்ளன. கிராமங்களில் உள்ளவர்களுக்கு வர்த்தக வங்கிகள் இன்னும் எட்டும் தொலைவில் இல்லை. வங்கிச்சேவை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை போன்றவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள்தான் ஏற்றவை என்பதால் கூட்டுறவு வங்கிகளுக்கான தேவைகள் குறையாது,” என தெரிவித்தார்.

சிறு நகரங்களில் தொழிலைத் தொடங்கலாம். ஆனால் தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல பெரு நகரங்களுக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது என்பதை அருணுடன் உரையாடும்போது புரிந்துகொள்ள முடிந்தது.