Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க இலவச ‘ஸ்டீல் பாத்திரங்கள் வங்கி’ அமைத்துள்ள மத்திய அரசு ஊழியர்!

முகநூல் பக்கம் வாயிலாக இவரின் வங்கியில் இருக்கும் ஸ்டீல் பாத்திரங்களை வாடகைக்குப் எடுத்துக் கொண்டு பயன்பாட்டிற்குப் பிறகு சுத்தப்படுத்தி திருப்பி அளிக்கலாம்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க இலவச ‘ஸ்டீல் பாத்திரங்கள் வங்கி’ அமைத்துள்ள மத்திய அரசு ஊழியர்!

Thursday November 14, 2019 , 2 min Read

இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும் சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துகிடப்பதை பார்க்கமுடிகிறது. இருப்பினும் பிளாஸ்டிக் பைகள், கட்லெரி போன்ற அப்புறப்படுத்தக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுவது ஓரளவிற்கு குறைந்துள்ளது.


பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதில் மிகப்பெரிய அளவில் முயற்சி எடுத்து வருகிறார் 45 வயதான சமீரா சடீஜா. குருகிராமைச் சேர்ந்த இவர் மத்திய அரசு ஊழியர். இவர் ஸ்டீல் பாத்திரம் வங்கி ஒன்றை அமைத்துள்ளார்.

1

ஸ்பூன், தட்டு என இவரது Crockery Bank For Everyone வங்கியில் அனைத்து விதமான பாத்திரங்களும் உள்ளன. பெரியளவில் சமூக மற்றும் மத சம்பந்தமான நிகழ்வுகளுக்கு சேவையளிப்பதில் இந்த வங்கி கவனம் செலுத்தி வருகிறது.


இங்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பாத்திரங்களுக்கான தேவை இருப்போர் இதன் முகநூல் பக்கம் வாயிலாக தகவல் அனுப்பினால் போதும். அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளைக் காட்டி வங்கியில் இருந்து தேவையான பாத்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பயனர்கள் பாத்திரங்களைப் பயன்படுத்திய பிறகு சுத்தப்படுத்தி காய வைத்த பின்னர் திருப்பியளிக்கவேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.


’குருகிராம் மாம்ஸ்’ உடனான உரையாடலில் சமீரா கூறும்போது,

“பாத்திரங்கள் தேவைப்படுவோர் தேவையான பொருட்கள், தேதி, எத்தனை நாட்கள் தேவைப்படும் போன்ற தகவல்களை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு RWA அல்லது வார்டு கவுன்சிலரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும். இது சாத்தியமில்லாத பட்சத்தில் குழுவில் உள்ள யாரேனும் இருவரின் இரு அடையாள அட்டைகளின் நகல்களைக் கொடுக்கவேண்டும். இரு அடையாள சான்றுகளில் ஒன்றாக ஆதார் அட்டையை சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயமாகும்,” என்றார்.
2

சமீரா 2018-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி சீக்கிய மதத்தில் இலவசமாக தண்ணீர் வழங்கப்படும் நிகழ்வில் ஸ்டீல் டம்ளர்களில் மட்டுமே தண்ணீர் வழங்கத் தொடங்கினார். அதேபோல் சமூகத்தினருக்கு இலவசமாக உணவளிக்கும் சேவையின்போது ஸ்டீல் தட்டுகளையே பயன்படுத்தினார். இந்த சமயத்தில்தான் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக ஸ்டீல் பாத்திரங்களை வழங்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது.


சமீராவின் இந்த முயற்சி மற்ற சமூகங்களுக்கும் உந்துதளித்தது. நகரில் பல்வேறு இடங்களில் மக்கள் கிளைகள் திறக்கத் தொடங்கினார்கள். இந்த கிளைகளை சமீரா போன்ற தனிநபர்கள் தாமாக முன்வந்து நடத்துகின்றனர். இந்த முயற்சிக்கு ஏன் கட்டணம் வசூலிப்பதில்லை என ’ஷீரோஸ்’ கேட்டபோது சமீரா,

“பலர் இந்த வங்கியைப் பயன்படுத்தவேண்டும். பயனர்கள் பணத்தை சேமிப்பதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வும் ஏற்படவேண்டும். இதுவே எனது விருப்பம். பயன்பாட்டிற்குப் பிறகு அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவேண்டும் என்பதற்காகவே இந்த இலவசச் சேவையை வழங்கத் தொடங்கினேன். இதை அறிமுகப்படுத்திய நான்கு மாதங்களில் என்னால் 1,00,000 பிளாஸ்டிக் பொருட்களை சேமிக்க முடிந்தது. குருகிராம் மற்றும் டெல்லியில் சுமார் ஒன்பது கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது,“ என பதிலளித்தார்.
3

இந்த முயற்சி சிறந்த பலனளித்துள்ளது. பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு திருப்பியளிப்பவர்கள் கூடுதல் பாத்திரங்களையும் வங்கிக்கு வழங்குவதாக சமீரா தெரிவிக்கிறார்.


இந்தப் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது மிகப்பெரிய பணியாக இருக்கும் நிலையில் பாத்திரங்களை சுத்தப்படுத்தி பாதுகாக்க இந்த வங்கி ஆர்கானிக் சோப்நட் பயன்படுத்துகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஒருபடி மேலே சென்று கழிவுநீரை செடிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.


கட்டுரை: THINK CHANGE INDIA