‘ஃபிளிப்கார்ட் உதவியால் ஒரு ப்ராண்ட் உருவாக்க முடிந்தது’ - ஆண்கள் ஆடை பிராண்டை உருவாக்கிய திருப்பூர் இளைஞர்!
ஆன்லைன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைவது தவிர வேறு பல சாதகமான அம்சங்களும் இருக்கின்றன என்கிறார் திருப்பூர் தொழில்முனைவோர் இம்ரான்.
முகமது இம்ரானின் ஆண்கள் ஆடை பிராண்ட் ஆண்டுதோறும் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் ஒரு மாத வருவாய்க்கு நிகரான வருவாய் ஈட்டுகிறது. இந்த ஆண்டு, பிராண்டின் விற்பனை கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
“பிக் பில்லியன் விற்பனை மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த காலத்தில் எங்கள் வாடிக்கையாளர் பரப்பை மிக எளிதாக விரிவாக்க முடிகிறது. ஃபிளிப்கார்ட் தன் பங்கிற்கு பிராண்ட் செயல்பாடு மற்றும் மார்க்கெட்டிங்கை தீவிரமாக்குவது நுகர்வோர் எங்களைப்போன்ற பிராண்ட்களை கண்டறிய உதவுகிறது,” என்கிறார் இம்ரான்.
பெரும்பாலான ஃபிளிப்கார்ட் விற்பனையாளர்கள் போல, இந்த ஆண்டு போதிய கையிருப்பை உறுதி செய்வதற்காக இம்ரான் மற்றும் குழுவினர் ஜூன் மாதமே தங்கள் முன் தயாரிப்பைத் துவங்கிவிட்டனர். ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வேர்ஹவுசை அணுக வழி செய்யப்பட்டது.
“அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றியதால் மற்றும் விற்பனைக்காக முன்னதாகவே தயரானதாலும் ஐந்து நாட்களில், ஒரு லட்சம் ஆர்டர்களுக்கு மேல் நிறைவேற்ற முடிந்தது,” என்கிறார் அவர்.
ஆன்லைன் விற்பனை
திருப்பூரைச்சேர்ந்த இம்ரான் இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோர். அவரது குடும்பம் ஜவுளித்துறையில் ஈடுபட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் ஆடை வர்த்தக்த்தில் அனுபவ்ம் கொண்டிருக்கிறார்.
“துவக்கத்தில், பணம் செலுத்துவதை பின் தொடர வேண்டியிருக்கும் என்பதால், விற்பனை என்பது சீரான ரொக்க வரத்தாக மாறாது என்பதை தெரிந்து கொண்டேன். ஒரு பிராண்டை உருவாக்குவது எத்தனை கடினம் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஆனால், சந்தையில் நிலைபெறாமல் விநியோகிஸ்தர்கள் ஆதரவை பெறுவதும் கடினம் என்பதையும் கண்டு கொண்டேன்,” என்கிறார்.
குடும்ப வர்த்தகத்தை கடந்து செயல்பட விரும்பியவருக்கு இது பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையில் தான் பட்டமளிப்பு விழாவின் போது, அவரது பேராசிரியர் ஆன்லைன் விற்பனை மாற்றம் பற்றி கூறினார்.
“அந்த நொடியில் எனக்கு உண்மை புரிந்தது. அந்த கணத்தில் சொந்தமாக பிராண்டை உருவாக்கும் வழியை கண்டறிய வேண்டும் என தெரிந்து கொண்டேன்,” என்கிறார் இம்ரான்.
ஆனால், ஆன்லைனில் பிராண்டை உருவாக்க அவருக்கு கற்றுத்தர அல்லது வழிகாட்ட யாரும் இல்லை. அனுபவம் வாய்ந்தவர்கள் அவரைப்போன்ற இளையவருக்கு உதவ தயாராக இல்லை. ஆனால் இம்ரான் உறுதியாக இருந்தார்.
2015ல் பட்டப்படிப்பை முடித்ததும், இம்ரான், ஆண்களுக்கான ஆடை ரகமான Maniaclife–ஐ ஃபிளிப்கார்ட்டில் துவக்கினார். “21 வயதில் என்னால் செய்ய முடிந்த ஆய்வுக்கு ஏற்ப, பேஷன் பிரிவில் ஃபிளிப்கார்ட் சிறந்த சந்தை பிரிவை கொண்டிருப்பதை உணர்ந்தேன்,” என்கிறார்.
குடும்ப வர்த்தகத்தால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட ஆடைகள் விற்பனை செய்த நிலையிலும் ஆரம்ப நாட்கள் எளிதாக இருக்கவில்லை.
“என் குடும்பத்தினர் ஆன்லைன் வர்த்தக வாய்ப்பை சோதித்து பார்க்க விரும்பவில்லை. நான் இது பற்றி பேசிய போது அவர்கள் தயக்கம் காட்டியதோடு, இந்தப் பிரிவில் என்னால் சிறப்பாகச் செய்ய முடியாது என நினைத்தனர். ஆரம்ப நாட்களில் மிகக் குறைவான ஆர்டர்களே கிடைத்த போது, இந்த எண்ணத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆன்லைன் வர்த்தகத்தை தொடர்வதில் பயனில்லை என நினைத்தனர்,” என்கிறார் இம்ரான்.
பிராண்ட் வளர்ச்சி
எனினும், ஃபிளிப்கார்ட் விற்பனையாளர் பிரிவில் இருந்து உதவி வந்தது.
“வர்த்தகத்தை அடியில் இருந்து கட்டியெழுப்ப இந்தக்குழு உதவியது. ஆன்லைன் விற்பனை அடிப்படைகளை புரிந்து கொள்ள உதவியதோடு, கொள்முதல் மற்றும் விலையில் மாற்றம் செய்ய ஏற்ற வகையில் விற்பனை அலசல் மற்றும் விலை பரிந்துரைகளை ஃபிளிப்கார்ட் வழங்கியது. மேலும், மேம்பட்ட விற்பனைக்காக எந்த பொருட்களை எப்படி பட்டியலிடலாம் என வழிகாட்டினர்,” என்கிறார் இம்ரான்.
இவை எல்லாம் வர்த்தகத்தை உருவாக்க உதவின. அடுத்த சில மாதங்களில் ஆர்டர்கள் அதிகரிக்கத்துவங்கிய போது, ஆன்லைன் விற்பனை அதிகரிக்கத்துவங்கியது. ஃபிளிப்கார்ட் ஆதரவால் உண்டான விற்பனை ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக இம்ரான் குடும்பத்தினர் மனதில் இருந்த சந்தேகத்தை போக்கியது.
“வர்த்தகத்தை துவக்கிய போது, நான் டி-ஷர்ட் மற்றும் விற்பனை செய்தேன். பின்னர் ஃபிளிப்கார்ட் வழிகாட்டுதலில், டிராக்ஸ், சட்டைகள், ஜாக்கெட் போன்றவற்றிற்கு விரிவாக்கம் செய்தேன். வாடிக்கையாளர் எங்களிடம் இருந்து டி-ஷர்ட் வாங்கினால், அவர்கள் மற்ற பொருட்களையும் வாங்குவார்கள் என நினைத்து விரிவாக்கம் செய்தோம்,” என்கிறார்.
பேஷன் பிரிவில் செயல்படுவது என்பது வாடிக்கையாளர்கள் ரசனைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை அவசியமாக்குகிறது. இந்த விஷயத்தில் ஃபிளிப்கார்ட் அளிக்கும் வர்த்தக அலசல் தகவல்கள் வாடிக்கையாளர்கள் ரசனையை அறிய உதவியது.
இன்று Maniaclife ஃபிளிப்கார்ட்டில் நன்கறிந்த பிராண்டாக வளர்ந்திருக்கிறது. “வாங்கக் கூடிய விலையில் தரமான ஆடைகளை அளிப்பது எங்கள் யு.எஸ்.பியாக இருக்கிறது. விசுவாசமான வாடிக்கையாளர்களை பெறுவதே எங்கள் நோக்கமாக இருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நேர்நிறை பின்னூட்டம் பெற்றிருப்பதே எங்கள் பிராண்ட் செல்வாக்கிற்கு சான்று,” என்கிறார் இம்ரான்.
“வாடிக்கையாளர் கருத்தறிவது, ஆன்லைன் விற்பனை அளிக்கும் சாதகமாகும். நேரடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் கருத்தறிய விரும்பினால், அதற்கான செயல்முறை சிக்கலானது மற்றும் அதன் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியானது”.
ஆண்கள் ஆடைப் பிரிவில் இருப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பிராண்ட் விளையாட்டு மற்றும் பின்னலாடை பிரிவுகளில் விரிவாக்கம் செய்ய விரும்புகிறது.
“மேலும் அதிக வாடிக்கையாளர்கள் பின்னலாடைகளை நாடுவதால் இந்தப் போக்கை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். மேலும் திருப்பூர் பின்னலாடைகளுக்காக அறியப்படுவது எங்கள் பலமாகும்,” என்கிறார் இம்ரான்.
புதிய திட்டம்
பாரம்பரிய வர்த்தகம், ஆன்லைன் விற்பனையில் ஈடுபடுவது தொடர்பாக குடும்பத்தினர் கொண்டிருந்த சந்தேகங்களை இம்ரான் அகற்றிவிட்டார். இப்போது ஃபிளிப்கார்ட்டில் அவர் விற்பனை செய்யும் ஆடைகள், அவரது சகோதரர்கள் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
“குடும்ப வர்த்தகம் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் இடையே சமநிலை காண விரும்புகிறோம். இ-காமர்ஸ் வழியை நாடாவிட்டால் இந்த நிலையை என்னால் அடைந்திருக்க முடியாது,” என்கிறார் இம்ரான்.
மற்ற ஆப்லைன் வர்த்தகங்களும் ஆன்லைனுக்கு மாற வேண்டும் என்கிறார். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இணைந்து செயல்பட முடியும் என்றும் கருதுகிறார். ஆன்லைனில் கிடைக்கும் வீச்சு மட்டும் அல்ல, நேரத்தில் கிடைக்கும் பணம், இடைத்தரகர் இல்லாதது ஆகியவையும் சாதகமாக அம்சங்கள் என்கிறார்.
(இது ஒரு ஃப்ளிப்கார்ட் ப்ராண்ட் ஸ்டோரி)