டோக்கியோ ஒலிம்பிக் 2021: இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை; எந்த சேனல்களில் பார்க்கலாம்?
நேரடி ஒளிபரப்பு விவரங்கள்!
டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகள் இன்று அதிகாரபூர்வமாக துவங்குகிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் 33 நிகழ்வுகளில் 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில், 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாட இருக்கின்றனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை எப்படி, எதன்மூலம் பார்க்கலாம் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்!
இந்தியாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஒலிம்பிக் 2021 தொடக்க விழா இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும்.
ஒலிம்பிக் போட்டிகள் ஒளிப்பரப்படும் சேனல் விவரங்கள்:
* சோனி டென் 1 எச்டி / எஸ்டி (ஆங்கில வர்ணனை)
* சோனி டென் 2 எச்டி / எஸ்டி (ஆங்கில வர்ணனை)
* சோனி டென் 3 எச்டி / எஸ்டி (இந்தி வர்ணனை)
* சோனி டென் 4 (தமிழ் / தெலுங்கு)
* சோனி சிக்ஸ்
* டிடி தேசிய மற்றும் விளையாட்டு (இந்திய போட்டிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும்)
ஒலிம்பிக் 2021 நேரடி ஒளிபரப்பு செய்யும் சேனல்களின் சந்தா மற்றும் சேனல் நம்பர் விவரங்கள்!
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் - டாடா ஸ்கை (TataSky)
* சோனி டென் 1 எச்டி / எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.22.42 | சேனல் எண்: 470 (எச்டி) மற்றும் 471 (எஸ்டி)
* சோனி டென் 2 எச்டி: ரூ .20.06 / மாதம் மற்றும் எஸ்டி: 17.06 / மாதம் | சேனல் எண்: 473 (எச்டி) மற்றும் 474 (எஸ்டி)
* சோனி டென் 3 எச்டி / எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.20.06 | சேனல் எண்: 475 (எச்டி) மற்றும் 476 (எஸ்டி)
* சோனி சிக்ஸ் எச்டி: மாதத்திற்கு ரூ. 22.42 மற்றும் எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.177.7 | சேனல் எண்: 484 (எச்டி) மற்றும் 483 (எஸ்டி)
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் - ஏர்டெல் டிஜிட்டல் டிவி (Airtel Digital TV)
* சோனி டென் 1 எச்டி / எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.22.42 | சேனல் எண்: 286 (எச்டி) மற்றும் 285 (எஸ்டி)
* சோனி டென் 2 எச்டி: ரூ .20.06 / மாதம் மற்றும் எஸ்டி: 17.06 / மாதம் | சேனல் எண்: 288 (எச்டி) மற்றும் 287 (எஸ்டி)
* சோனி டென் 3 எச்டி / எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.20.06 | சேனல் எண்: 290 (எச்டி) மற்றும் 289 (எஸ்டி)
* சோனி சிக்ஸ் எச்டி: மாதத்திற்கு ரூ.22.42 மற்றும் எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.177.7 | சேனல் எண்: 292 (எச்டி) மற்றும் 291 (எஸ்டி)
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் - டிஷ் டிவி (Dish TV)
* சோனி டென் 1 எச்டி / எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.22.42 | சேனல் எண்: 610 (எச்டி) மற்றும் 611 (எஸ்டி)
* சோனி டென் 2 எச்டி: ரூ.20.06 / மாதம் மற்றும் எஸ்டி: 17.06 / மாதம் | சேனல் எண்: 612 (எச்டி) மற்றும் 613 (எஸ்டி)
* சோனி டென் 3 எச்டி / எஸ்டி விலை மாதத்திற்கு ரூ .20.06 | சேனல் எண்: 614 (எச்டி) மற்றும் 615 (எஸ்டி)
* சோனி சிக்ஸ் எச்டி: மாதத்திற்கு 22.42 / மற்றும் எஸ்டி விலை மாதத்திற்கு ரூ.177 / | சேனல் எண்: 622 (எச்டி) மற்றும் 623 (எஸ்டி)
* டி.டி நேஷனல் அண்ட் ஸ்போர்ட்ஸ் இலவசமாக ஒளிபரப்பக்கூடிய சேனல் என்பதால், அதற்கு கூடுதல் சந்தா தேவையில்லை.
இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் விவரங்கள்!
வில்வித்தை: ஜூலை 23 - ஜூலை 31 - காலை 5:30 மணி.
பூப்பந்து: ஜூலை 24 - ஆகஸ்ட் 2 - காலை 5:30 மணி.
கடற்கரை கைப்பந்து: ஜூலை 24 - ஆகஸ்ட் 7 - காலை 5:30 மணி.
குத்துச்சண்டை: ஜூலை 24 - ஆகஸ்ட் 8 - காலை 7:30 மணி.
ஃபென்சிங்: ஜூலை 24 - ஆகஸ்ட் 1 - காலை 5:30 மணி.
குதிரையேற்றம்: ஜூலை 24 - ஆகஸ்ட் 7 - மதியம் 1:30 மணி.
கூடைப்பந்து: ஜூலை 25 - ஆகஸ்ட் 8 - காலை 6:30 மணி.
கைப்பந்து: ஜூலை 24 - ஆகஸ்ட் 8 - காலை 5:30 மணி.
பீல்ட் ஹாக்கி: ஜூலை 24 - ஆகஸ்ட் 6 - காலை 6:00 மணி.
ஜிம்னாஸ்டிக்ஸ்: ஜூலை 24 - ஆகஸ்ட் 3 - காலை 6:30 மணி.
ஹேண்ட்பால்: ஜூலை 24 - ஆகஸ்ட் 8 - காலை 5:30 மணி.
ஜூடோ: ஜூலை 24 - ஜூலை 31 - காலை 7:30 மணி.
ரோயிங் (Rowing): ஜூலை 23 - ஜூலை 30 - காலை 5:00 மணி.
துப்பாக்கிச் சுடுதல்: ஜூலை 24 - ஆகஸ்ட் 2 - காலை 5:00 மணி.
சாப்ட்பால்: ஜூலை 21 - ஜூலை 27 - காலை 5:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை.
டென்னிஸ்: ஜூலை 24 - ஆகஸ்ட் 1 - காலை 7:30 மணி.
டேபிள் டென்னிஸ்: ஜூலை 24 - ஆகஸ்ட் 6 - காலை 5:30 மணி.
வாட்டர் போலோ: ஜூலை 24 - ஆகஸ்ட் 8 - காலை 10:30 மணி.
பளு தூக்குதல்: ஜூலை 24 - ஆகஸ்ட் 4 - காலை 6:20 மணி.
படகோட்டம்: ஜூலை 25 - ஆகஸ்ட் 4 - காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை.
ஸ்கேட்போர்டிங்: ஜூலை 25 - ஆகஸ்ட் 5 - காலை 5:30 முதல் 10:25.
கால்பந்து: ஜூலை 21 - ஆகஸ்ட் 7 - மதியம் 1:00 மணி.
சர்ஃபிங்: ஜூலை 25 - ஆகஸ்ட் 1 - அதிகாலை 3:30 மணி.
நீச்சல்: ஜூலை 24 - ஆகஸ்ட் 1 - மாலை 3:30 மணி.
சைக்கிளிங் ஆன் ரோட்: ஜூலை 24 - ஜூலை 28 - காலை 7:30 மணி.
டேக்வாண்டோ: ஜூலை 24 - ஜூலை 27 - காலை 6:30 மணி.
டைவிங்: ஜூலை 25 - ஆகஸ்ட் 7 - காலை 11:30 மணி.
டிரையத்லான்: ஜூலை 26 - ஜூலை 31 - அதிகாலை 3:00 மணி.
ரக்பி: ஜூலை 26 - ஜூலை 31 - காலை 5:30 மணி.
ட்ராக் அண்ட் ஃபீல்ட்: ஜூலை 30 - ஆகஸ்ட் 8 - காலை 5:30 மணி.
மல்யுத்தம்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை - காலை 7:30 மணி.
சைக்கிளிங் ஆன் டிராக்: ஆகஸ்ட் 2 - ஆகஸ்ட் 8 - மதியம் 12:00 மணி.
நீச்சல்: ஆகஸ்ட் 2 - ஆகஸ்ட் 7 - மாலை 4:00 மணி முதல் மாலை 6:15 மணி வரை.
ஸ்போர்ட் கிளிம்பிங்: ஆகஸ்ட் 3 - ஆகஸ்ட் 6 - மதியம் 1:30 மணி.
கராத்தே: ஆகஸ்ட் 5 - ஆகஸ்ட் 7 - காலை 6:30 மணி.