Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

உலகம் முழுவதும் உறவுப் பாலம் அமைத்து நம்பிக்கையை பரப்பிய ‘டி-ஷர்ட்’

தில்லியில் இருந்து, டோக்கியோவுக்கு, அங்கிருந்து கேப்டவுனுக்கு என நகரங்கள வழியே அமைந்த சித்தாந்த் அகர்வாலின் டி-ஷர்ட்டின் பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் உறவுப் பாலம் அமைத்து நம்பிக்கையை பரப்பிய ‘டி-ஷர்ட்’

Thursday January 28, 2021 , 3 min Read

கடந்த ஆண்டு செப்டம்பரில், ஒற்றை கருப்பு டி-ஷர்ட் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணத்தை துவங்கியது. அது நம்பிக்கை எனும் எளிய செய்தியை தாங்கிச்சென்றது. இந்த சாதாரண டி-ஷர்ட் பின்னே இருக்கும் அசாதாரண கதை பொது முடக்கத்தின் மத்தியில் பரேலியில் உள்ள மாடியில் இருந்து ஜூன் மாதம் அதிகாலை 2 மணிக்குத் துவங்கியது.


பிராஜக்ட் ஹோப் (@originalnewdelhi), திட்டத்தின் பின்னே இருந்த சித்தாந்த் அகர்வால் சரியாக மூச்சு விட முடியாத உணர்வில் கண் விழித்தார். தில்லி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், சம்பளம் இல்லாத விடுப்பில் நிறுவனத்தால் வீட்டிற்கு அனுப்ப பட்டிருந்தார்.

டிஷர்ட்
“என் வாழ்க்கையில் முதல் முறையாக வேலை இல்லாமல் இருந்தேன். 10ம் வகுப்பு முதல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் ஈடுப்பட்டிருந்தேன்,” என்கிறார் சித்தாந்த்.

கவலையால் உண்டான மூச்சுத்திணறல் அவரை மேலும் வருத்தியது. ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

“சில வாரங்கள் எதையும் நினைக்காமல் இருந்தேன். இசை மற்றும் படங்களைப் பார்த்தபடி அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என நினைத்தேன். என்னால் இந்தச் சூழலை வெல்ல முடியும் என்றால், மற்றவர்களுக்கும் உதவ முடியும் என நினைத்தேன்,” என்கிறார் சித்தாந்த்.

தொடர்பு பாலம்

பயணத்தை மையமாக வைத்து ஏதேனும் செய்ய விரும்பினார். கோவிட்-19 பாதிப்பு புதிய இடங்களை கண்டறிவதை கட்டுப்படுத்தியிருந்ததால், சித்தாந்த் தான் செல்ல விரும்பும் இடங்களின் பட்டியலை தயாரித்தார். அந்த இடங்களுக்கு எல்லாம் நம்பிக்கையின் செய்தியை அனுப்பி வைக்க விரும்பினார்,

“என்னால் நேரில் செல்ல முடியவில்லை எனில், டி-ஷர்ட் செல்லும் என நினைத்தேன். டி-ஷர்ட் செல்லும் ஒவ்வொரு நகரிலும் இருக்கும் உள்ளடக்க உருவாக்குனர்கள், இந்த டி-ஷர்ட்டை அணிந்து நகரின் தனித்தன்மையான இடங்களில் இருந்து வீடியோ எடுத்து பகிர்வார்கள்.”

“பறவை பார்வையில் எல்லா நகரங்களும் ஒன்றாக தான் இருக்கும். நகரங்களின் இதயத்தை அணுக விரும்பினோம்” என்கிறார்.


டி-ஷர்ட் பயணத்தை வீடியோவில் பதிவு செய்தார்.“யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்த விரும்பினேன். வீடியோ உருவாக்குனர்கள், சுவரெழுத்து கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள் உள்ளிட்டோரை அணுகினேன். நான் அணுகிய எல்லோரும் இதை இலவசமாக செய்தனர். ஒரு செயலில் தொடர்பு கொள்ள முடியும் போது மற்றும் உங்கள் ஈடுபாட்டை அறியும் போது மற்றவர்கள் இலவசமாக செய்யத்தயாராக இருக்கின்றனர் என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் சித்தாந்த்.


சிங்கப்பூர், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் இருந்து டி-ஷர்ட் நியூயார்க் நகரம் சென்றது. இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் இது 18,000 கிமீ பயணித்திருந்தது. ஒவ்வொரு பங்கேற்பாளரும், டி-ஷர்ட் அணிந்து. தங்கள் நகரின் தனித்தன்மையை பதிவு செய்கின்றனர்.

“ஒரு சிலர் ஒரே மாதிரி டி-ஷர்ட்டை அணியத் தயங்கியதால், லோகோவை அவர்களுக்கு அனுப்பினேன். அந்த லோகோவை கொண்டு அவர்கள் டி-ஷர்ட்டை உருவாக்கிக் கொண்டனர். நான் பகிரும் முகவரிக்கு இந்த நம்பிக்கை டி-ஷர்ட் அனுப்பி வைக்கப்படும்.”

பலர் இதற்கான கட்டணத்தை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்களுக்கு சித்தாந்த் கட்டணம் செலுத்தினார்.

டி-ஷர்ட்ஸ்

உருவாக்கும் சுதந்திரம்

பங்கேற்பாளர்களை அணுகிய போது அவர்களுக்கு தன்னால் ஊதியம் தர முடியாது என்பதை அறிந்திருந்தார். “அவர்களுக்கு என்னால் அளிக்க முடிந்தது எல்லாம் படைப்புச் சுதந்திரம் மட்டும் தான். அவர்கள் விரும்பியதை உருவாக்கலாம். எனவே தான் பலவகையான மனிதர்களை அணுக விரும்பினேன். சிங்கப்பூர், ஹாங்காங்கில் வீடியோ கலைஞர்கள் இருந்தனர் என்றால், ஹாலிவுட்டில் பிரிகிலைம்பர்கள் இருந்தனர். டி-ஷர்ட் ஆல்பர்டா சென்றது. வீடியோகிராபர்கள் அதை பனி மலைக்கும் கொண்டு சென்றனர்” என்கிறார் சித்தாந்த்.


அடுத்து லண்டன், பாரீஸ், ஆம்ஸ்டர்டாம், கேப்டவுன், மும்பை, தில்லி ஆகிய நகரங்கள் திட்டமிட்டட்டுள்ளன.

“கலாச்சார வேறுபாடுகளுக்காக இந்த நகரங்கள் தேர்வாயின. ஷங்காய், ரோம், பாங்காங், சியோல், மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களையும் சேர்க்க விரும்பினாலும் அதற்கான நிதி ஆதாரம் இல்லை. இதை இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளலாம்,” என்கிறார்.

இந்த டி-ஷர்ட்டை இன்னொரு உலகப் பயணத்திற்கு அனுப்பி வைக்க விரும்புவதாக கூறுகிறார். டி-ஷர்ட்டை எல்லாம் விட்டு நிதி திரட்டவும் விரும்புகிறார்.


இந்த வடிவமைப்பு நம்பிக்கையின் அடையாளமாக அமைகிறது.

“நான் சோர்வாகவும், கவலையாகவும் உணர்ந்த காலத்தில் எதிர்கொண்டதை இது பிரதிபலிக்கிறது. ஒரு கட்டத்தில் கவலை இருந்தாலும் அதன் பிறகு நம்பிக்கை உண்டானது. எனவே இதில் உள்ள இரண்டு சதுர கோடுகள் என் வாழ்க்கையின் கட்டத்தை உணர்த்துகின்றன,” என்கிறார்.

“அதிகமானவர்கள் இதனுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். இது மிகவும் திறந்த தன்மை கொண்டது. பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள் இதனுடன் தொடர்பு கொள்ள முடியும். ஏனெனில் நான் அறிந்த பலரும் இது போன்ற நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே தான், இந்தத் திட்டம் மூலம் நம்பிக்கையை பகிர விரும்புகிறேன்,” என்கிறார் சித்தாந்த்.  


ஆங்கிலத்தில்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்- சைபர்சிம்மன்