Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

1, 10, 1000? எத்தனை வேணும்? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப டி-சர்ட்ஸ் டிசைன் செய்து தரும் மதுரை Tee Labs

குறைந்தபட்ச ஆர்டர் எண்ணிக்கையை வலியுறுத்தாமல் தனித்தேவைக்கேற்ப டி-ஷர்ட் தயாரித்து வழங்கும் மதுரையைச் சேர்ந்த Tee Labs ஸ்டார்ட் அப் நாள் ஒன்றிற்கு சுமார் 600 டி-ஷர்ட் தயாரிக்கிறது.

1, 10, 1000? எத்தனை வேணும்? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப டி-சர்ட்ஸ் டிசைன் செய்து தரும் மதுரை Tee Labs

Thursday December 10, 2020 , 4 min Read

டி-சர்ட் என்பது 19-ம் நூற்றாண்டில் தோன்றியது. தொழிலாளர்கள் வெப்ப நாட்களில் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஜம்ப்சூட்களை இதுபோன்று மாற்றி பயன்படுத்தினார்கள். அப்போதிருந்து ஆடை வகைகளில் டி-ஷர்ட் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம்.

ஒவ்வொருவரின் விருப்பமும் மாறுபடும். ஆனால் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு டி-சர்ட் கிடைப்பதுண்டு. உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள டி-சர்ட் வகைகளில் ஒருவேளை நீங்கள் விரும்பும் பிரத்யேக வகை டி-சர்ட் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? கவலையை விடுங்கள். மதுரையைச் சேர்ந்த Tee Labs உங்கள் தனித்தேவைக்கேற்ற டி-சர்ட் வடிவமைத்து வழங்குகிறது.

2012-ம் ஆண்டு ராஜேஷ் கண்ணு Tee Labs தொடங்கினார். இந்நிறுவனம் ஆரம்பத்தில் டி-ஷர்ட் மொத்த விற்பனை விநியோகஸ்தராக செயல்பட்டது. ராஜேஷ் மூன்று பேர் அடங்கிய மார்கெட்டிங் குழுவினருக்கு லோகோவுடன்கூடிய டி-சர்ட் தயாரிக்க திட்டமிட்டார். அப்போதுதான் ஆடைத் துறையில் ஒரு பிரத்யேக டிசைன் வேண்டுமானால் குறைந்தபட்ச ஆர்டர் அளவு 100 பீஸ் இருக்கவேண்டும் என்பது தெரிந்தது.

2

உள்ளூர் டெய்லர் ஒருவர் தனித்தேவைக்கேற்ப ஷர்ட் தயாரித்து வந்தார். அவரைக் கண்டு உந்துதல் பெற்ற ராஜேஷ் குறைந்தபட்ச அளவு என்கிற கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் தனித்தேவைக்கேற்ப டி-ஷர்ட் தயாரிக்கத் தீர்மானித்தார். நண்பர் ஒருவரிடம் 40,000 ரூபாய் கடன் வாங்கி முதலீடு செய்தார்.


ஏற்கெனவே கோழி வளர்ப்பு, சூப்பர் மார்க்கெட் போன்ற பிரிவுகளில் செயல்பட்டார். இந்த இரு வணிக முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் மூன்றாவதாக டி-ஷர்ட் வணிகத்தில் முதலீடு செய்தார்.


டி-சர்ட் பிரிவில் இவருக்கு முன் அனுபவம் இல்லை. யூட்யூப் மற்றும் இதர சானல்கள் மூலம் டி-சர்ட் பிரிண்டிங் மற்றும் தனித்தேவைக்கேற்ற தயாரிப்பு குறித்து தெரிந்துகொண்டார். இவரது குழுவினர் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் Tee Labs லோகோவுடன் அதன் முதல் டி-ஷர்டை பிரிண்ட் செய்தது.

“உங்களுக்குத் தேவையான பிரத்யேக டி-ஷர்டை உருவாக்க உங்களுக்கு கிராஃபிக் டிசைன் திறன் தேவையில்லை. இந்த அடிப்படையிலேயே Tee Labs செயல்படுகிறது. எங்கள் டிசைனர்கள் இதை எளிமையாக செய்து முடித்துவிடுவார்கள். நீங்கள் ஒரு மெசேஜ் அனுப்பினால் உங்களது டி-சர்டை நீங்களே டிசைன் செய்துவிடலாம்,” என்கிறார் ராஜேஷ்.

ரப்பர் பிரிண்டிங், அதிக அடர்த்தி, பிக்மெண்ட் இங்க் பிரிண்ட், நேரடியாக துணியில் பிரிண்ட் செய்வது, வினைல் / ஸ்டிக்கர் பிரிண்ட், ஃபாயில், பளபளப்புடன்கூடிய பிரிண்ட், எம்பிராயிடரி என தனித்தேவைக்கேற்ற டி-ஷர்ட் தயாரிக்க பல்வேறு வகை பிரிண்டிங்கை இந்த ஸ்டார்ட் அப் பயன்படுத்துகிறது. நிறுவனத்திற்குள்ளேயே டிசைனர் குழு செயல்படுகிறது. ஸ்கிரீன், டிஜிட்டல் மற்றும் சப்ளிமேஷன் பிரிண்டிங் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

“நாங்கள் தரமான தயாரிப்புகளை வழங்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம். 10 அல்லது 1,000 என உங்களுக்குத் தேவைப்படும் டி-சர்ட் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் உங்கள் ஆர்டரைப் பெற்றுக்கொண்டு டெலிவர் செய்யும் திறன் கொண்டுள்ளது Tee Labs. சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், பெங்களூரு என பல்வேறு நகரங்களில் எங்கள் விநியோக சங்கிலி அமைந்துள்ளது,” என்றார் ராஜேஷ்.

Tee Labs பல்வேறு அளவு மற்றும் ஸ்டைல்களில் டி-ஷர்ட் தயாரித்து வழங்குகிறது. பள்ளி நண்பர்கள் அடங்கிய குழுவிற்கு ஃபேர்வெல் பார்ட்டிக்காக ஐந்து டி-சர்ட் ஆர்டரை முதலில் பெற்றது இந்த ஸ்டார்ட் அப். Tee Labs இன்றளவும் ஸ்டார்ட் அப்கள், கல்லூரிகள், பள்ளிகள், 25 நபர்களுக்கும் குறைவான குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குழு, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் போன்றோரை இலக்காகக் கொண்டு இந்த ஸ்டார்ட் அப் செயல்படுகிறது.


டி-சர்ட் தேவைப்படுவோர் Tee Labs வலைதளம் மூலம் தகவல்களைக் கேட்டறியலாம். வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் எக்சிக்யூடிவ் ஒருவர் டிசைன் மற்றும் விலையைத் தெரிவிப்பார். வணிக மேம்பாட்டு குழு, தகவல் கேட்டவர்களிடம் சாம்பிளை காட்டி ஆர்டரை உறுதிப்படுத்துவார்கள். பிரிண்ட் டிசைன் மற்றும் ஆர்டர் அளவின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும்.

“சிறியளவிலான ஆர்டர் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் பிரீமியம் கட்டணங்களையே வசூலிக்கிறோம். தனித்தேவைக்கேற்ற டி-சர்ட் பெறுவதற்காக சற்று கூடுதல் தொகையை செலவிடவும் எங்கள் வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர். சிறியளவிலான ஆர்டர்களுக்கு சற்று கூடுதல் தொகையையும் மொத்தமாக வாங்கப்படும் ஆர்டர்களுக்கு சந்தை விலையையும் நிர்ணயிக்கிறோம். 30-40 சதவீதம் லாபம் கிடைக்கும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம்,” என்றார்.
1

Tee Labs 30 பேர் அடங்கிய குழு சராசரியாக 30-40 ஆர்டர்களுடன் நாள் ஒன்றிற்கு 600 டி-சர்ட் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 50,000 வெவ்வேறு ஆர்டர்களுடன் வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ற சுமார் 7.5 லட்சம் டி-சர்ட் தயாரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.


சென்னை என்சிஆர் கார்ப்பரேஷன், K7 கம்ப்யூடிங், ஃபோர்ட் மோட்டார்ஸ், ஷெல், ஹெச்சிஎல், அமேசான் போன்ற நிறுவனங்களும் என்ஐடி, விஐடி, எஸ்ஆர்எம், ஐஎஃப்எம்ஆர் போன்ற கல்வி நிறுவனங்களும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியலில் உள்ளன.

சந்தை மற்றும் எதிர்காலம்

இந்தியாவில் தனித்தேவைக்கேற்ற ஆடைகளுக்கான சந்தை வளர்ந்து வருகிறது. சிறு நகரங்களில் இந்தத் துறை வாய்ப்புகள் இன்னமும் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை என்பதே ராஜேஷின் கருத்தாக உள்ளது.

உலகளவில் தனித்தேவைக்கேற்ற டி-ஷர்ட் பிரிண்டிங் சந்தை அளவு 2019-ம் ஆண்டில் 3.4 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டதாகவும் 2027-ம் ஆண்டில் 9.6 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“தற்போது ஒவ்வொரு இந்திய நகரங்களிலும் தனித்தேவைக்கேற்ற ஆடை வகைகளைத் தயாரிக்கக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று தயாரிப்பாளர்கள் உள்ளனர். மும்பை iLogo, பெங்களூரு Alma Master Store, Vistaprint India போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டியாளர்களாக உள்ள நிலையில் எங்கள் பிராண்டிங் நுட்பங்களும் குறைந்தபட்ச ஆர்டர் அளவு திணிக்கப்படாத செயல்பாடுகளும் எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது,” என்கிறார் ராஜேஷ்.

3

மேலும் இந்நிறுவனத்தின் போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள டி-சர்ட் நிறம் மற்றும் அளவுகளில் மட்டுமே பிரிண்டிங் செய்கின்றனர். இதற்கான ஆர்டர்களை மட்டுமே இவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்று ராஜேஷ் குறிப்பிடுகிறார்.


“நாங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அளவு மற்றும் நிறங்களில் உயர்தர ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் எம்பிராயிடரி செய்கிறோம். ஒரே ஒரு டி-சர்டிற்குகூட ஸ்கிரீன் பிரிண்ட் செய்து தருகிறோம்,” என்றார்.

“பிரத்யேக தேவைக்கேற்ற டி-ஷர்ட் நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்துவதைக் காட்டிலும் மும்பையிலோ டெல்லியிலோ நடத்துவது எளிது. ஏனெனில் தமிழ்நாட்டில் திருப்பூரில் டி-ஷர்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் போட்டியை சந்திக்க நேரிடும்,” என்கிறார் ராஜேஷ்.

வரும் நாட்களில் Tee Labs குழு தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஆஃப்லைன் ஸ்டோர் திறக்க திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இங்கு நேரடியாக வருகை தந்து தங்களது தனித்தேவைக்கேற்ப ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.


“இதுதவிர தயாரிப்புகளை இருப்பு வைத்துக்கொள்ளாமல் மூன்றாம் நபர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் டிராப் ஷிப்பிங் மாதிரியை நடைமுறைப் படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்,” என்றார் ராஜேஷ்.


ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா