TVS Motors: அடுத்த ஆண்டுக்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் பல மாடல்களை அறிமுகப்படுத்த திட்டம்!
டிவிஎஸ் மோட்டார் அடுத்த 1 வருடத்தில் மின்சார இரு சக்கர வாகனப் பிரிவில் பல மாடல்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் அடுத்த 1 வருடத்தில் மின்சார இரு சக்கர வாகன மாடல்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனத் துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அபரிவிதமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இ-ஸ்கூட்டர்கள் மற்றும் பைக் மீதான மக்களின் வாங்கும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு நிறுவனங்கள் வரை எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் களமிறங்கி வருகின்றன.
அந்த வகையில், பராம்பரியம் மிக்க வாகனத் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அடுத்தக்கட்டத்திற்கு விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான டிவிஎஸ் மோட்டார், ஏற்கனவே இரண்டு இ-ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது. தற்போது அதன் மின்சார வாகன விற்பனை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, அடுத்த ஆண்டுக்குள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதோடு, மூன்று சக்கர மின்சார வாகனத்தையும் தீவிரமாக உருவாக்கி வருகிறது.
TVS மோட்டார் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே என் ராதாகிருஷ்ணன்,
“அடுத்த ஆண்டில் 5 முதல் 25 கிலோவாட் வரம்பில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தொடர்ச்சியான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
சந்தையில் வலுவான தேவையுடன், நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் iQube இன் உற்பத்தி திறனை மாதத்திற்கு 25,000 யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
டிவிஎஸ் தனது புதிய மின்சார ஸ்கூட்டரான ’டிவிஎஸ் எக்ஸ்’ விற்பனையை நடப்பு காலாண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

டிவிஎஸ்; இ-ஸ்கூட்டர்களுக்கான 400 டச் பாயின்ட்களைக் கொண்டுள்ளது, மேலும் நிறுவனம் அதைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"டிவிஎஸ்-லிருந்து திட்டமிடப்பட்ட தயாரிப்பு வரிசை மற்றும் உள்கட்டமைப்பின் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றுடன், EV பிரிவில் நாங்கள் தொடர்ந்து வலுவான நிறுவனமாக இருப்போம் என நம்புகிறோம்," எனக்குறிப்பிட்டார்.
இந்திய சந்தையைத் தொடர்ந்து iQube ஐ ஐரோப்பாவிற்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இதற்கான தெளிவான திட்டம், யுக்தி மற்றும் தெளிவான நெட்வொர்க்கை உருவாக்கி வருவதாகவும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் தடம் பதிக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் - எமில் ஃப்ரே குழுவுடன் கைகோர்க்கிறது!