Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ட்விட்டரில் இருந்து பலர் Mastodon மாறக் காரணம் என்ன?

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் #Switchtomastodon #mastodon போன்ற ஹாஷ்டேக் போட்டு பல பதிவுகள் அது சம்பந்தமான விவாதத்தை நடத்தினார்கள். Mastodon என்றால் என்ன?

ட்விட்டரில் இருந்து பலர் Mastodon மாறக் காரணம் என்ன?

Wednesday November 13, 2019 , 3 min Read

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் #Switchtomastodon #mastodon போன்ற ஹாஷ்டேக் போட்டு பல பதிவுகள் அது சம்பந்தமான விவாதத்தை நடத்தினார்கள். இந்த விவாதத்துக்குக் காரணம் என்னவென்றால் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே சொன்ன கருத்து தான். 


கடந்த வாரம் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவின் ட்விட்டர் பதிவு  ஒன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது அதுமட்டுமின்றி இனிமேல் அவர் ட்விட்டர் அக்கவுன்ட்டை பயன்படுத்த முடியாது என்று அதிகாரப்பூர்வமாக அவருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பியது ட்விட்டர். இது சம்பந்தமாக அதிருப்தியடைந்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே,

’இது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நடக்கக்கூடியது இதை நான் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி   ட்விட்டருக்கு பதிலாக இனி நாம் Mastodon பயன்படுத்துவோம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.  

இவரின் இந்தக் கருத்தை மையப்படுத்தி தொடர்ச்சியாக பலர் மஸ்டொடோன்  சமூக வலைதளத்திற்கு மாறுவோம் என்று அடுக்கடுக்காக பல பதிவுகளை ட்விட்டர் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.


அப்படி என்னதான் உள்ளது மஸ்டொடோன் சமூக வலைதளத்தில்?


ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் தொடங்கப்பட்டது தான் ‘Mastodon'. இதுதொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது.  இந்த சமூக வலைதளம் ட்விட்டர் போன்றே இயங்கக்கூடியது ஆனால் இதற்கும் ட்விட்டருக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம்தான். அந்த வித்தியாசம் என்னவென்றால் மஸ்டொடோன் சமூக வலைதளம் ஓபன் சோர்ஸ் நெட்வொர்க் சாப்ட்வேர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஓபன் சோர்ஸ் என்றால் இந்த சமூக வலைதளத்தை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம், நிர்வகிக்கலாம்.


இதற்கான கட்டுப்பாடுகள் யாரிடமும் இல்லை என்பதுதான் பொருள். அதாவது சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு வரக்கூடிய எல்லாத் தகவல்களையும் ஜனநாயக பூர்வமாக விவாதிக்க முடியும் அந்த விவாதத்தை எதன் அடிப்படையிலும் யாரும் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது என்பதுதான்.

masto vs twitter

ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளபக்கங்கள் மிகப்பெரிய  கார்ப்பரேட் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியவை. அது அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட சர்வரில் மட்டுமே இயங்கும் இதன் மூலம் அந்த நிறுவனத்தின் லாபத்திற்காக அவர்கள் வைத்துள்ள சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் செய்திகளை, தகவல்களை அந்த நிறுவனம் சேகரிக்க முடியும். அதுமட்டுமின்றி சமூக வலை தளங்களை பயன்படுத்துவோரை முழுமையாகக் கண்காணிக்க முடியும். 


ஒருவரை கண்காணிப்பது என்பது. தனிநபர் தகவல் சம்பந்தப்பட்டது. இந்தியாவில் தற்போது இணையதளத்தில் தனிநபர் சம்பந்தப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப் படுவது சம்பந்தமாக பல அரசியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இந்தச் சூழலில் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப்படும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது மூலம் நாம் பாதுகாப்புடன் ஆன்லைனில் உலா வந்து பயன்படுத்த முடியும் என்று பலர் சொல்கின்றனர்.


இது சம்பந்தமாக ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் செயற்பாட்டாளர் பிரசன்னாவை சந்தித்துப் பேசினோம் அவர் கூறும்போது,

“ஓபன் சோர்ஸ் எனப்படும் சாப்ட்வேர் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை அனைவராலும் பார்க்க முடியும். சாப்ட்வேரை உருவாக்குவதற்கு பல கம்ப்யூட்டர் லாங்குவேஜ் பயன்படுத்துகின்றனர். அப்படி உருவாக்கத் தேவைப்படும் கம்ப்யூட்டர் லாங்குவேஜை அனைவரும் அறியும் வகையில் வெளிப்படையாக அதை வெளியிடுகின்றன, இதனால்தான் ஓபன் சோர்ஸ் என்று சொல்கின்றனர்.  அப்படி வெளியிடுவதன் மூலம் அவரவருக்குத் தேவையான அடிப்படையில் அந்த சாப்ட்வேரை மீண்டும் மாற்றி அமைத்து பயன்படுத்த முடியும்.

அதேபோல ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் பயன்படுத்துபவரின் தகவல்கள் முற்றிலும் பாதுகாக்கப்படும். இது பல நாடுகளில் தற்போது பெரிதாக வரவேற்கப் பட்டுள்ளது. ஓபன் சோர்ஸ் சாப்ட்வேரின் நோக்கம் அனைவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும், அது அவரவர் தேவைக்கேற்ப இருக்க வேண்டும் என்பதுதான், என விளக்கினார்.

பிரசன்னா

பிரசன்னா

அதுமட்டுமின்றி தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் புல்லியிங் சம்பந்தமாக புகாரை போலீஸிடம் அளித்தால், அவர்கள் நடவடிக்கை எடுக்க ஃபேஸ்புக் நிறுவனத்திடமோ ட்விட்டர் நிறுவனத்திடமோ இந்தப் புகார் சம்பந்தமாக விவரங்களைக் கேட்ட பின்னே தான் நடவடிக்கை எடுக்க முடியும். 


ஆனால் புகாரின் பேரில் இப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று சமூக வலைத்தளத்தில் பார்த்தால் மிகக் குறைவுதான். இதற்குக் காரணம் பல நேரங்களில் இதற்கான பொறுப்பை அந்தந்த சமூக வலைதள நிறுவனங்கள் ஏற்பதில்லை அப்படியே ஏற்றாலும் அந்த நிறுவனத்தின் சட்டத்திற்குட்பட்டு குறைவான தகவல்களை அளிக்கின்றனர்.

ஆனால்  ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் பயன்படுத்துவோருக்கு அப்படி ஏதாவது சைபர் புல்லியிங் ஏற்பட்டால், இந்த சாப்ட்வேரை யார் வைத்திருக்கிறார் என சம்மந்தப்பட்டவர்களை நேரடியாக தொடர்புகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இப்படி பல நல்ல பாதுகாப்பான அம்சங்களைக் கொண்டே ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அதனால்தான் சமூக வலைத்தள பயனீட்டாளர்கள் பலர் இந்த மஸ்டொடோன் சமூக வலைதளத்திற்கு மாற முன்வந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.