வங்கித் தேர்வு பயிற்சியில் வலுவான நிலை பெற PHIRE நிறுவனத்துடன் கைகோர்த்தது 'Veranda Race'
வெராண்டா லேர்னிங் நிறுவனத்தின் துணை நிறுவனமான வெராண்டா ரேஸ், தனியார் வங்கி பயிற்சி மற்றும் வேலை பிரிவில் ஆழமாக வேரூன்றுவதற்காக PHIRE நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
வெராண்டா லேர்னிங் நிறுவனத்தின் துணை நிறுவனமான
Race, தனியார் வங்கி பயிற்சி மற்றும் வேலை பிரிவில் ஆழமாக வேரூன்றுவதற்காக PHIRE நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.தனியார் வங்கி மற்றும் பி.எப்.எஸ்.ஐ துறைகளில் பணி நியமனம் தொடர்பான பயிற்சி அளிப்பதில் நிபுணத்துவம் மிக்க வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி நிறுச்வனமாக PHIRE விளங்குகிறது.
அரசு வங்கித்தேர்வுகளுக்கு தயாராவதில் பயிற்சி அளிப்பதில் சென்னையைச் சேர்ந்த ‘வெராண்டா ரேஸ்’ சிறந்து விளங்குகிறது. இதுவரை நிறுவனம், பொதுத்துறை வங்கிகளில் 30,000 பேர்களை வேலைவாய்ப்பு பெற வைத்துள்ளது. தற்போது PHIRE கூட்டு மூலம் தனியார் வங்கி பிரிவிலும் சிறந்த விளங்க திட்டமிட்டுள்ளது.
“தனியார் வங்கித்துறை பயிற்சி பிரிவில் PHIRE நன்கறியப்பட்ட பெயராக உள்ளது. ஆண்டுதோறும் 99 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்," என்று வெராண்டா ரேஸ் சி.இ.ஓ சந்தோஷ் குமார் கூறியுள்ளார்.
நிறுவனங்கள் இணைந்து செயல்படும் வாய்ப்பு சரியான நேரத்தில் உண்டாகியுள்ளது என இந்த கூட்டு தொடர்பாக PHIRE இணை நிறுவனர், முதன்மை மக்கள் அதிகாரி ஜோத்ஸ்னா வாசுதேவன் கூறியுள்ளார்.
“இளம் பட்டதாரிகள் நிதித்துறை தொழில் வாழ்க்கைக்குத் தயாராகும் வகையில் திறன் மேம்பாட்டிற்கு உதவும் எங்கள் நிறுவன இலக்குடன் வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் நோக்கம் பொருத்தமாக அமைகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“நிதித்துறையில் இளம் திறமையாளர்களைக் கண்டறிவதற்கான அதிகம் நாடப்படும் நிறுவனமாக விளங்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் புதிய பகுதிகளில் நுழைய PHIRE திட்டமிட்டுள்ளது,” என நிறுவன சி.இ.ஓ எச்.டி.ஷெரிப் கூறியுள்ளார்.
வெராண்டா லேரினிங் செயல் இயக்குனர் மற்றும் தலைவர் சுரேஷ் கல்பாதி, இந்த கூட்டு மூலம் PHIRE நிறுவன வளர்ச்சி ஊக்கம் பெறும் என்று தெரிவித்தார்.
“PHIRE நிறுவனர்கள் இத்துறையில் அனுபவம் மிக்கவர்கள். நிறுவனத்தால் பயிற்சி பெற்ற மாணவர்கள் தனியர் வங்கிகளில் பணியாற்றுகின்றனர். தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் சிறிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யும் நிலையில் எங்கள் கூட்டு மூலம் PHIRE இந்த சந்தைகளை இலக்காகக் கொண்டு செயல்படலாம். இது PHIRE லேர்னிங் சொல்யூஷன்சுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan