'எங்கள் இந்த நல்ல போராட்டத்தை நிறுத்த மாட்டோம்’ - ட்ரான்ஸ் உரிமைகள் செயல்பாட்டாளர் கிரேஸ் பானு!
ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுக்கும் உச்சநீதிமன்றத்தின் அண்மை தீர்ப்பு பின்னணியில் தலித் மற்றும் திருநங்கை உரிமைகள் செயல்பாட்டாளரும், டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ் அமைப்பின் நிறுவனருமான கிரேஸ் பானு, தங்கள் போராட்டம் தொடரும் என சோஷியல் ஸ்டோரியிடம் பேசும் போது கூறுகிறார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில், 2018ம் ஆண்டு மே மாதம் திரு நம்பியான இஷான் (33), திருநங்கை சூரியாவை, சிறப்பு திருமணம் சட்டம் (SMA) கீழ் திருமணம் செய்தும் கொண்ட போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
நான்கு மாதங்களுக்கு பின் செப்டம்பர் 6ம் தேதி, உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் 377வது பிரிவை ரத்து செய்தது.
ஆனால், ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க மறுத்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் வெளிச்சத்தில், தலித் மற்றும் திருநங்கைகள் உரிமை ஆர்வலரும், ’டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ்’-இன் நிறுவனருமான கிரேஸ் பானு சோஷியல் ஸ்டோரியிடம் பேசினார். அதில், இதற்கான போராட்டம் இன்னும் தொடரும் என்றும் இதற்கான முடிவு வெகு தொலைவில் உள்ளது என்று கூறுகிறார்.
சமத்துவம், கருத்துரிமை, வாழ்க்கை மற்றும் தனியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறும் காலனிய காலத்து கொடிய சட்டம் இது என நீதிமன்றம் தெரிவித்தது. எங்களில் பலருக்கு LGBTQIA+ சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான முக்கிய முன்னேற்றமாக இது அமைந்தது. சமூகத்தில் கண்ணியத்துடன் இணைந்து வாழ்வதற்கான எங்கள் வரலாற்றுப் போராட்டத்தில் முக்கிய அம்சமாகவும் இது அமைந்தது.”
2019ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, அருண் குமார் மற்றும் திருநங்கை ஸ்ரீஜா இடையிலான திருமணத்தை இந்து திருமண சட்டம் கீழ் அங்கீகரித்தது. முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி,
“ஒருவருக்கு கண்களில் பார்வை இருந்தால் மட்டும் போதாது, இதயத்தில் காதலும் வேண்டும்,” எனக்கூறிய நீதிபதி சுவாமிநாதன், இந்த திருமணத்தை அங்கீகரித்தார்.
நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த தம்பதி இன்னமும் சட்டப்பூர்வமான திருமணத்திற்கான நடைமுறையை பதிவுத்துறை அதிகாரிகள் முடிப்பதற்கு காத்திருக்கின்றனர். இத்தகைய அமைப்பு ரீதியான விலக்கலை தான் ஒரு சமூகமாக நாங்கள் எப்போதுமே நெருக்கமாக அறிந்து, அதனுடன் வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் முன்னோடி முன்னெடுப்பு என வரும் போது, அண்மையில் ஏப்ரலில், மேலே குறிப்பிடப்பட்ட மற்ற நீதிபதிகளுடன், தலைமை நீதிபதி ஒரே பால் திருமணத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கான மனுவை விசாரிக்கும் போது, ஆண், பெண் எனும் கருத்து குறிகள் அடிப்படையிலானது அல்ல எனக் குறிப்பிட்டது ஆகும்.
"ஒரு சமூகமாக எங்களுக்கு இவை, பாலின சிறுபான்மையினரின் உரிமைகளைக் காப்பதில் தகுதி இருப்பதை உள்ளார்ந்து உணர்ந்த முற்போக்கான, உணர்வுள்ள நீதித்துறையின் பிரதிபலிப்பின் முக்கிய மைல்களாக அமைந்துள்ளன, “என்கிறார் க்ரேஸ்.
"நீதித்துறையின் வழிகாட்டுதலால் சாத்தியமான பெரிய மாற்றங்கள் எல்லாம், அக்டோபர் 17ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய, தீர்ப்பால் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தீர்ப்பில், நீதிமன்றம் ஒரே பால் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அடிப்படையை புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது,” என்கிறார் க்ரேஸ் பானு.
"நீதிபது சந்திரசூட், சஞ்ஜய் கிஷன் கவுல் தங்கள் தீர்ப்பில் சிவில் இணைவிற்கான உரிமையை அங்கீகரித்தனர். ஆனால், நீதிபதிகள் ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அரசியல் சாசனத்தில் திருமண, சட்டப்பூர்வமான உரிமையாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்து, அடிப்படை உரிமையாகக் கருத முடியாது எனத் தெரிவித்தனர்.
"எனினும், ஐந்து நீதிபதிகள் பெஞ்ச், இத்தகைய தம்பதிகள், வன்முறை, அச்சுறுத்தல், தலையீடு உள்ளிட்டவை இல்லாமல் சமூகத்துடன் இணைந்து வாழ வழி இருக்க வேண்டும் என தெரிவித்தது. இந்திய சமூகத்தில் LGBTQIA+ பிரிவினருக்கான சமமான சூழலை உருவாக்குவதற்கான வழிகள் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு சமூகமாக நாங்கள் ஆரம்ப கல்வி துவங்கி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு , சமூக பாதுகாப்பு, குறிப்பாக பாதுகாப்பு, சமூக ஏற்பு ஆகிய அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதை நிறுத்துவிடவில்லை என்பதை அங்கீகரிப்பது முக்கியம்.
"தங்கள் குடும்பத்தால் கைவிடப்பட்ட கீழ் தட்டு பிரிவைச்சேர்ந்த பால் புதுமையினர் பலருக்கு பள்ளிக்கல்வி தடைப்பட்டு, தனிப்பட்ட பாதுகாப்பு மீறல் உண்டாகி, நிதி சுதந்திரம் கேள்விக்குள்ளாகிறது. இவை எல்லாம், சமூகத்தில் பால் புதுமையினர் மீதான பாராமுகத்தை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் தங்களது சொந்த பாலினத்தை புரிந்து கொள்வது தொடர்பான மனபோராட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது,” என்கிறார் பானு.
அடிப்படை உரிமைகள் தொலைதூர கனவு எனும் நிலையில், கிராமப்புற அல்லது நகரப்புற சூழலில் பாதுகாப்பாக இணைந்து வாழ்வது என்பதும் பெரும் சிக்கலாக இருக்கிறது. இவை எல்லாம் LGBTQIA+ மக்கள் தங்களது முழு வாழ்வை வாழ முடியாத சூழலை உருவாக்குகின்றன.
"ஒருவரது பாலினத்தை தானே தீர்மானித்துக்கொள்வது, அரசியல் சாசனத்தின் 21வது ஷரத்தின் கீழ், கண்ணியம், சுதந்திரம், தனிப்பட்ட தன்னாட்சியுன் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளின் மையம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தாலும், ஆண் மற்றும் பெண் இடையிலான திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்கும் எஸ்.எம்.ஏவின் கட்டுப்பாடான தன்மை, தலைமை நீதிபதி குறிப்பிட்டபடி, தம்பதிகள் அனுபவிக்கும் பலவீதமான உரிமைகளை (தத்து, மருத்துவக் காப்பீடு, பென்ஷன், மாற்றுத்திறனாளி தன்மை, சமூக பாதுகாப்பு பலன் உள்ளிட்டவை) நாங்கள் பெற இயலாமல் போகிறது.
"சுய நிர்ணயம் என்பது, அரசு அதிகார செயல்முறைகளை எங்கள் சமூகத்திற்கு எளிதாக்குவது மட்டும் அல்ல: மாறாக, நாங்களே சுயமாக முடிவெடுக்க வழி செய்வதற்கு இன்றியமையாததாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்த உரிமையை செயலிழக்கச் செய்கிறது,” என்றார் பானு.
எஸ்.எம்.ஏவின் அரசியல் சாசனதன்மையை ரத்து செய்வது அல்லது அவற்றில் பொருள் கொள்வது தங்களது அமைப்பு சார்ந்த வரம்புகளால் சாத்தியமாகவில்லை என பெஞ்ச் தனது அண்மை தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பால் புதுமையினர் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான சட்டம் இயற்றும் பொறுப்பை நாடாளுமன்றத்திடம் கைகாட்டியுள்ள நிலையில், இது போன்ற சூழலில் கடந்த காலங்களில் நீதிமன்றம் சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2013ல் பணியிடத்தில் பெண்கள் பாலியல் சீண்டல் சட்டம் (தடுப்பது, தடை, நிவாரணம்), அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே விகாசா நெறிமுறைகளை வழங்கியதை இதற்கான மகத்தான உதாரணமாக குறிப்பிடலாம்.
"2018ல், சபரிமலை கோயிலில் மாதவிலக்கு வயது பெண்கள் நுழையக்கூடாது எனும் மாநில சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியல் சாசனத்தின் 25வது ஷரத்தின் கீழ் மத உரிமைக்கான அடிப்படை உரிமைக்கு எதிராக இது அமைகிறது எனும் அடிப்படையில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.”
நாட்டில் பாலின சிறுபான்மையினரின் நிலையை நன்கறிந்தும், ஒரே பாலின திருமணத்திலும் உச்ச நீதிமன்றம் இத்தகைய விதிவிலக்கை நாடாதது ஏன், என கேள்வி எழுப்பும் க்ரேஸ் பானு, என் இதயமும், என் போராட்டமும், பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்டதாக இருக்கும் சமூகத்தில் பிறந்த பாலின புதுமையினரின் ஒரு பிரிவினர் மற்றும் தங்கள் வீடு துவங்கி, கல்வி நிலையங்கள், பணியிடம், சமூகம் என எல்லா இடங்களிலும் மனிததன்மை நீக்கத்தை எதிர்கொள்ளச்செய்யும் வகையில் சமூக, கலாச்சார அடுக்களை எதிர்கொள்வதற்கான வலுவான கேடயமாக ஒரே பாலின திருமணம் அமைதிருக்ககூடியவர்களின் பக்கம் அமைகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான சமூகத்தினருக்கு இது இன்னும் உண்மையாக அமைகிறது,” என்கிறார்.
”எங்கள் நம்பிக்கைகள் தகர்ந்துள்ளன என்றாலும், நீதிமன்ற பாராமுகத்திற்காக ஈடு செய்யப்பட்ட, பல ஆண்டு போராட்டத்திற்கு பின் வெற்றி பெற்ற எந்த ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவினரைப் போலவும் எங்கள் நல்ல போராட்டத்தை தொடர்வதை நிறுத்த மாட்டோம்,” என உறுதியாக தெரிவித்தார் க்ரேஸ் பானு.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan