Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

காடு, மலை தாண்டி புலிகள் நடுவே 10கிமி திகில் பயணம்: கடமை தவறா ‘போஸ்ட் மாஸ்டர்’ பாத்திமா ராணி!

தினமும் வன விலங்குகள் வட்டமிடும் காட்டுப்பகுதி வழியாக சென்று வருவதே உங்களுடைய வேலையாக இருந்தால், அது எப்படிப்பட்ட திகில் நிறைந்த அனுபவமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்க முடிகிறதா?.

காடு, மலை தாண்டி புலிகள் நடுவே 10கிமி திகில் பயணம்: கடமை தவறா ‘போஸ்ட் மாஸ்டர்’ பாத்திமா ராணி!

Monday March 07, 2022 , 3 min Read

தினமும் வன விலங்குகள் வட்டமிடும் காட்டுப்பகுதி வழியாக சென்று வருவதே உங்களுடைய வேலையாக இருந்தால், அது எப்படிப்பட்ட திகில் நிறைந்த அனுபவமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்க முடிகிறதா?

ஆனால், அப்படிப்பட்ட ஆபத்தான பணியை மக்கள் சேவையாக நினைத்து செய்து வருகிறார் ‘போஸ்ட் மாஸ்டர்’ பாத்திமா ராணி. உலக மகளிர் தினத்தை போற்றும் இவ்வேளையில், பாத்திமா ராணி பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ...

யார் இந்த பார்த்திமா ராணி?

திருநெல்வேலி மாவட்டம் கோதையார் மேல்தாங்கல் கிளை அஞ்சலகத்தில் பணியாற்றி வருகிறார் 58 வயதான போஸ்ட் மாஸ்டர் பாத்திமா ராணி.

கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரம் தாண்டி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை கடந்து அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அஞ்சல்களை வழங்குவதற்காக பயணித்து வருகிறார்.

நாலுமுக்கு தேயிலை தோட்டத்தில் வசிக்கும் பாத்திமா ராணி, நான்கு வருடங்கள் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்ததோடு, தேயிலை கொழுந்து பறிக்கும் வேலையும் செய்து வந்துள்ளார். பல தடைகளை கடந்து போஸ்ட் வுமன் ஆக பணிக்குச் சேர்ந்த பாத்திமா ராணி, 1997ம் ஆண்டு, தனது 33 வயதில் ​​கிளையின் போஸ்ட் மாஸ்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post master

வனப்பகுதிக்குள் பாத்திமா ராணியின் திகில் பயணம்:

பாத்திமாவின் நடைபயணம் ஒன்றும் பூங்காவில் நடப்பது போன்றது அல்ல, செங்குத்தான மலைப்பாதைகள், சரிவுகள், குறுகலான சாலைகள், பனியால் மூடப்பட்ட அடர் வனப்பகுதிகள் என அனைத்தையும் கடந்து, வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக தற்காத்துக்கொண்டு புடவை உடுத்திய புயலாக தினமும் தனது பணியை தவறாமல் செய்து வருகிறார்.

தனது திகில் பயணம் குறித்து பாத்திமா நாளிதழ் பேட்டியில் கூறுகையில்,

"இங்கு அடிக்கடி மழை பொழியும் மற்றும் எப்போதும் வனப்பகுதி மூடுபனியால் மூடப்பட்டிருக்கும். இதனால், காடுகளில் காட்டு விலங்குகளைப் பார்ப்பது கடினம். சிறுத்தைகள், காட்டெருமைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் உள்ள பாதையை கடந்து செல்ல வேண்டியிருக்கும். சில சமயங்களில் அவற்றிடம் இருந்து தப்பிக்க புடவை உடுத்தியே இருந்தாலும், வேகமாக ஓட வேண்டிருக்கும்” என்கிறார்.

பாத்திமாவிற்கு முகாமில் வசிக்கும் மின்சார வாரிய ஊழியர்களும், வனத்துறை அதிகாரிகளும், யானை இப்பகுதியில் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து அடிக்கடி ஆலோசனை வழங்குகின்றனர்.

மலைப் பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால், செங்குத்தான மலையாக உள்ளதால் காட்டுக்குள் இடது வலமாக ஓட முடியாது. எனவே, பெரும்பாலான நேரங்களில், விலங்குகள் கடந்து செல்லும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் அல்லது அமைதியாக அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்கிறார்.

ஒருமுறை பாத்திமா வேலைக்குச் செல்லும் போது மலைப்பாதையில் ஒரு பாம்பு எப்படி அமைதியாக படுத்துக்கொண்டிருந்தது என்பது பற்றியும், மலைச்சரிவில் தன்னைப் பார்த்து புலிக்குட்டி ஒன்று சீறியதையும் முகத்தில் புன்னகை மாறாமல் பகிர்ந்துகொள்கிறார்.

புலிகள் காப்பகத்தில் கோதையாறு அணைக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1,200 மீட்டர் உயரத்தில் உள்ளது.

kalakkad

கடந்த 25 ஆண்டுகளாக, பாத்திமா மழை மற்றும் காற்று என எதையும் பொருட்படுத்தாமல் நடந்து, புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் மற்றும் பாம்புகள் போன்றவற்றை கடந்து செல்வதில் கை தேர்ந்தவராகிவிட்டார். அணைக்கு அருகில் வசிக்கும் வனத்துறை அதிகாரிகள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட எட்டு குடும்பங்களுக்கு வெளி உலக தொடர்பிற்கான வெளிச்சமாக பாத்திமா செயல்பட்டு வருகிறார்.

பாத்திமா பணியாற்றும் கோதையார் மேல்தாங்கல் கிளை அஞ்சலகத்தில் இணைய வசதி கிடையாது. எனவே, தனது பணிகுறித்த பதிவுகளை அப்டேட் செய்ய அஞ்சல் துறை வழங்கிய கிராமிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தினமும் 5 கிலோ மீட்டர் நடந்து கிளை அலுவலகம் சென்று வருகிறார்.

“25 ஆண்டுகளுக்கு முன்பு எனது முதல் நாள் பயணத்தின் போது நான் மிகவும் கூச்ச சுபவத்துடனும், பயத்துடனும் இருந்தேன். எனவே எனது ஆரம்ப கட்ட காட்டுப்பகுதி பயணங்களின் போது எனது கணவர் துணைக்கு வருவார். ஆனால், பிறகு நான் தைரியமாக இருக்கவும் தனியாகச் செல்லவும் கற்றுக்கொண்டேன்.”

தினமும் பாத்திமா ராணி நடந்தே தான் தனது டெலிவரிகளையும், கிளை அலுவலக பணிகளையும் மேற்கொள்கிறார். என்றாவது நாலுமுக்கு பகுதிக்கு செல்லும் வனத்துறை அல்லது மின்சாரத்துறை ஊழியர்கள் அவருக்கு உதவுகின்றனர். அப்படி வாகன வசதிகள் கிடைக்காத நாட்களில் தனி ஆளாக பாத்திமா ராணி நடந்தே சென்றுவிடுவார் என்பதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பாராட்டுகின்றனர்.


தகவல் மற்றும் பண உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்