இந்தியாவின் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க உதவும் யுவர்ஸ்டோரி-இன் TechSparks மீண்டும் வருகிறது!
யுவர்ஸ்டோரி டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சி தனது 14 வது பதிப்பில், முன் எப்போதையும் விட பெரிதாக அமைவதோடு, நாம் எதிர்கொள்ளும் பெரிய கேள்விகளை விவாதித்து, தீர்வுகள் வழங்க கூடியதாக இருக்கும்.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப, புதுமையாக்க, தலைமை பண்பு மாநாடான 'டெக்ஸ்பார்க்ஸ்' மீண்டும் நிகழ் உள்ளது என்பதையும், இந்த முறை பெங்களூருவில் நம்பர் 10ம் தேதி நேரில் துவங்குகிறது என்பதையும் யுவர்ஸ்டோரி பெருமையுடன் அறிவிக்கிறது.
2008 முதல் யுவர்ஸ்டோரியின் முதன்மை ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப, தலைமை பண்பு மாநாடு TechSparks, தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஒரே மேடையில் கொண்டு வந்து எண்ணங்களை பரிமாறிக்கொள்ள வைத்து, சமூகத்தில் நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்த வழி செய்கிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சியின் அளவும் தாக்கமும் பெரிதாக அமைய உள்ளன.
உலகம் பெருந்தொற்று பற்றி விவாதித்து, பொருளாதார தேக்கநிலையை எதிர்கொள்ளும் சூழலில், நம்முடைய சிறந்த சிந்தனையாளர்களை ஒன்றாக திரட்டி முக்கியக் கேள்விகள் குறித்து விவாதிப்பது அவசியமாகிறது.
இந்தியா தனது தொழில்நுட்ப ஆற்றலை பயன்படுத்திக்கொண்டு உலகிற்கு வழிகாட்டும் திறன் கொண்டிருப்பதாக யுவர்ஸ்டோரி நம்புகிறது. கோவிட் காலத்தில் நிகரில்லாத தடுப்பூசி திட்டம் மூலம் இந்தியா உலகிற்கு தனது ஆற்றலின் கீற்றை உணர்த்தியுள்ளது.
இதன் காரணமாகவே, டெக்ஸ்பார்க்ஸ் 14ம் பதிப்பு, 'இந்தியாவின் தொழில்நுட்ப நோக்கத்தை வளர்த்தெடுப்பது' (“Building on India’s tech agenda”) எனும் கருத்தாக்கத்தை கொண்டிருக்கும். இந்த கருத்தாக்கத்தில் இருந்து ஊக்கம் பெறுவதோடு, அரசின் தொழில்நுட்பம் மூலமான வளர்ச்சி எனும் நோக்கத்துடனும் இணைந்திருக்கும்.
நவம்பர் 10 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் மூன்று நாள் மாநாடு, 10 பிரதான பிரிவில் அமர்வுகள், 15க்கு மேற்பட்ட சிறப்பு கவனம் மற்றும் 100 மணிந்நேரத்திற்கும் மேலான நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும். கல்விநுட்பம், விண்வெளி நுட்பம், லாஜிஸ்டிக்ஸ், வெப்3, எதிர்கால பணி உள்ளிட்ட பிரிவுகளில் விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற உள்ளன.
வல்லுனர்கள், சிந்தனை தலைவர்கள், துறை வல்லுனர்கள், ஆகியோர் தங்கள் உள்ளொளிகளை, கற்றல்களை, விவாதங்கள், உரையாடல்கள், உரைகள் மூலமாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவீன நுட்பங்கள் முதல் அற்புதமான எண்ணங்கள் வரை, மாற்றத்திற்கான முயற்சிகள், ஆழமான உரையாடல்கள் என அனைத்திற்குமான இடமாக டெக்ஸ்பார்க்ஸ் 2022 விளங்கும்.
ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan