கார்பன் அற்ற தண்ணீர் தீர்வுகளை வழங்கும் ஸ்டார்ட்-அப் Uravu, AWE Funds இடமிருந்து நிதியுதவி பெற்றது!
21-ஆம் நூற்றாண்டிற்கான நீர் உள்கட்டமைப்பை மறு உருவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தும் பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான Uravu வெளியிடப்படாத நிதியை பெற்றுள்ளது.
21-ஆம் நூற்றாண்டிற்கான நீர் உள்கட்டமைப்பை மறு உருவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தும் பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான Uravu, AWE ஃபண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெறவிருப்பதாக அறிவித்துள்ளது. AWE ஃபண்ட்ஸ் அளித்த நிதி முதலீடு எவ்வளவு என்பதை உறவு தெரிவிக்கவில்லை.
சுற்றுச்சூழல் மாசு நீக்கப்பட்ட நீடித்த நீர் ஆதாரத்தை மாற்றும் வகையில் இந்த நிதி பெறப்பட்டுள்ளது. Uravu அதன் புதுமையான திரவ உலர்த்தி அடிப்படையிலான தொழில்நுட்பத்தை உருவாக்க வளிமண்டல ஈரப்பதத்தை மாற்றும் வகையில் கார்பனற்ற மற்றும் கழிவு நீர் அற்றத் தீர்வுகளை தொழில்துறை மட்டத்தில் வழங்க உதவுகிறது.
Uravu நிறுவனத்தின் தொழில்நுட்பம் நிலத்தடி நீர் குறைபாட்டை நிவர்த்தி செய்வதிலும், ஹோட்டல் உள்ளிட்ட ஹாஸ்பிட்டாலிட்டி துறைக்கு சுற்றுச்சூழல் மாசு நீக்கம் செய்யப்பட்டப் பரவலாக்கப்பட்ட நீர் ஆதாரங்களை உருவாக்குவதிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்துகள், பசுமை ஹைட்ரஜன் போன்ற கூடுதல் துறைகளுக்கும் கார்பன் நீக்க கழிவுநீர் நீக்க நீராதாரத் திட்டம் விரிவடையவுள்ளது.
இந்த ஸ்டார்ட்-அப்பின் புதுமையான அணுகுமுறையானது, சூரிய சக்தி மற்றும் கழிவு வெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் உயர்தர நீரை உருவாக்க காற்றில் இருந்து ஈரப்பதத்தைப் பிரித்தெடுக்க ஒரு திரவ உலர்த்தி முறையைப் பயன்படுத்துகிறது.
இந்தப் புதிய நிதியுதவி ‘உறவு’ நிறுவனத்தின் முதன்மை குளிர்பான மாதிரியை அதிகரிக்க உதவும். தற்போது பெங்களூரில் உள்ள 55க்கும் மேற்பட்ட ஹாஸ்பிட்டாலிட்டி துறை வாடிக்கையாளர்களுக்கு தினசரி 4,000 லிட்டர் தண்ணீரை வழங்கி வருகிறது. இந்தப் பட்டியலில் Leela, Royal Orchid மற்றும் Hyatt Centric ஆகிய பிரபல பெயர்களும் அடங்கும்.
இந்த வாடிக்கையாளர்களுக்காக தன் தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்த டானிக் வாட்டர் மற்றும் இஞ்சி பியர் போன்ற சிறப்புப் பானங்களையும் தயாரித்து வருகிறது.
இது தொடர்பாக ‘உறவு’ நிறுவன சி.இ.ஓ. ஸ்வப்னில் ஸ்ரீவஸ்தவ் கூறும்போது,
“இந்த மூலதனம் மூலமும் ஏற்கெனவே வழங்கி வரும் ஆதரவின் மூலமும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மதிப்பு கூட்டி வரும் AWE ஃபண்டுகளின் நிதியுதவி ஆதரவைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதியுதவிச் சுற்று எங்களின் திறனை வளர்த்துக்கொள்ளவும், எங்களது பிரீமியம் பானங்கள் பிரிவில் முக்கிய மைல்கல்லை எட்டவும் உதவும், அதே நேரத்தில் எங்கள் வணிக மற்றும் தொழில்துறை சலுகைகளை மேம்படுத்தும் என்று நம்புகிறோம்,” என்றார்.
அதன் அடுத்த நடவடிக்கை, குடியிருப்புக் கட்டிடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் வளாகங்களில் காற்றில் இருந்து நீரைப் பிரித்தெருத்து தினமும் 2,000 லிட்டர் குடிநீரை வழங்குவதாகும்.
எதிர்காலத்தில் உறவு நிறுவனம் தினமும் 50,000 லிட்டர்களுக்கு மேல் தண்ணீர் தேவைப்படும் மருந்து உற்பத்தித் துறை, தரவு மையங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் நிறுவனங்கள் போன்ற தொழில்துறைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
'காற்றிலிருந்து தண்ணீர்’ - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் செயல்படும் ‘உறவு லேப்ஸ்’