சிக்னல் நேரத்தையும் வீணாக்காமல் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் ஜோமாட்டோ டெலிவரி ஊழியர்!
சொமாட்டோ உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் மத்திய அரசு வேலைகளுக்கான கடினமான யுபிஎஸ்சி தேர்வுக்கு போக்குவரத்து சிக்னலில் கூட கிடைத்த நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று தயாரான வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
ஜோமாட்டோ உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் மத்திய அரசு வேலைகளுக்கான கடினமான யுபிஎஸ்சி தேர்வுக்கு போக்குவரத்து சிக்னலில் கூட கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் படிதக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்தியாவில் நடத்தப்படும் பொது தேர்தல்களில் யுபிஎஸ்சி தேர்வுகள் கடினமானவை. தேர்வுக்குத் தயாராக மத்திய அரசு வேலை விரும்புபவர்கள் கடினமாக உழைத்துத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்கின்றனர். ஏனெனில், பணித்தேர்வு முறையும் பெரிய நிகழ்முறைகளைக் கொண்டது.
கடுமையான தேர்வு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், ஐ.சி.டபிள்யூ.ஏ, ஏசிஎஸ் போன்ற பெரிய படிப்புகளைத் தேர்வு செய்பவர்கள் எப்படி கடினமான உழைப்பைப் போட வேண்டுமோ அத்தகைய உழைப்பு யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும் தேவை.
இதை உணர்ந்த ஜோமாட்டோ டெலிவரி இளைஞர் தினசரி சம்பாத்தியத்தையும் பார்த்தாக வேண்டும், தேர்வுக்கும் தயாராக வேண்டும். இத்தகைய சூழலில்தான் கிடைத்த நேரத்தைக் கூட வீணடிக்காமல் இந்த இளைஞர் சாலை போக்குவரத்து நெரிசலின்போது கிடைத்த சில நிமிட இடைவெளியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயரானார். இந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஜோமாட்டோ உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்களில் பணியாற்றுவோர் தங்கள் மொபைல் போனை வண்டியின் முன்பக்கத்தில் பொருத்தி வைக்கும் பழக்கம் கொண்டவர்கள். தன்னுடைய வாகனத்தின் முன்பகுதியில் மொபைல் போனை அந்த டெலிவரி இளைஞர் பொருத்தி இருந்தார். சிக்னல் காரணமாக வாகனங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. இந்த இடைவெளியில், யுபிஎஸ்இ தேர்வுக்கான வகுப்புகளை தன் மொபைல் மூலம் அந்த இளைஞர் படிக்கத் தொடங்கினார்.
இந்த வீடியோவை X (முன்பு ட்விட்டர்) தளத்தில் ஆயுஷ் சாங்கி என்பவர் பகிர்ந்தார். இந்தப் பதிவின் தலைப்பாக ஆய்ஷ் சங்கி,
“கடினமாக படிப்பதற்கும் உழைப்பதற்கும் இதைவிட சிறந்த ஊக்கம் ஒருவருக்கு இருக்க முடியாது, இந்த வீடியோவைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான்...” என்று கேப்ஷன் போட்டிருந்தார்.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ஜோமாட்டோ இளைஞரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். வீடியோவைப் பகிர்ந்த ஆயுஷ் சாங்கி என்பவரும் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி வழங்குனர் என்பது கூடுதல் விசேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Zomato Pure Veg Fleet - இணையத்தில் தீயாய் பரவிய சைவ உணவு டெலிவரி சர்ச்சை; ஜோமாட்டோ எடுத்த அதிரடி முடிவு!