பேடிஎம், பைஜூஸை பின்னுக்குத் தள்ளி ஸ்டார்ட்அப் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகிய Zomato!

இதுவரை ஸ்டார்ட்அப் அமைப்பில் மதிப்புமிக்க நிறுவனங்களாக கருதப்பட்டு வந்த, பேடிஎம் (Paytm) மற்றும் பைஜூஸ் (BYJU'S)-ஐ விட 15.29 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் ஜோமோட்டோ (Zomato) முந்தியுள்ளது.

பேடிஎம், பைஜூஸை பின்னுக்குத் தள்ளி ஸ்டார்ட்அப் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகிய Zomato!

Monday February 12, 2024,

2 min Read

இதுவரை ஸ்டார்ட்அப் அமைப்பில் மதிப்புமிக்க நிறுவனங்களாக கருதப்பட்டு வந்த, பேடிஎம் (Paytm) மற்றும் பைஜூஸ் (BYJU'S)-ஐ விட 15.29 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் ஜோமாட்டோ (Zomato) முந்தியுள்ளது.

உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமான ஜோமாட்டோ, 5.29 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

பங்குச்சந்தையில் ஜோமாட்டோ பங்குகளின் விலை 5 சதவீதம் உயர்ந்தது. குறிப்பாக 2021ல் அதன் பட்டியலிடப்பட்ட விலையான 78 ரூபாயை விட இருமடங்காக அதிகரித்து 145 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையானது.

zomato

ஜோமாட்டோ நிறுவனம் FY24 இன் மூன்றாவது காலாண்டில் ரூ.138 கோடி நிகர லாபத்தைப் பதிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.347 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால், இதன் போட்டியாளரான ஸ்விக்கி நிறுவனம் சுமார் 8 பில்லியன் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக இந்தியா ஸ்டார்ட்அப் துறையில் முன்னணி ஃபின்டெக் நிறுவனமாக இருந்த பேடிஎம் மற்றும் முன்னணி எட்டெக் நிறுவனமான பைஜூஸையும் பின்னுக்குத்தள்ளியுள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கியின் அதிரடி கட்டுப்பாடுகளில் விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான பேடிஎம் பெரும் பின்னடைவை சந்தித்துவருகிறது. இதனால் பங்குச்சந்தையில் மதிப்பை இழந்துள்ளதோடு, . நவம்பர் 2021 இல் IPO க்கு முன், Paytm $ 19 பில்லியனாக இருந்தது, அதன் பின்னர் $3.52 பில்லியனாக குறைந்துள்ளது.

அதேபோல், கடன், செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட சிக்கல்களில் சிக்கியுள்ள பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பும் 99 சதவீதம் குறைந்து $22 பில்லியனில் இருந்து $225 மில்லியனாக குறைந்துள்ளது.

BYJU'S

பைஜு ரவீந்திரன் தலைமையிலான நிறுவனம், அதன் செயல்பாடுகளை நடத்த பணப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, அதன் முதலீட்டாளர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், உரிமைப் பிரச்சினையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையில், ஸ்விக்கி மற்றும் ரேஸர்பே ஆகியவை Zomatoவுக்குப் பிறகு மிகவும் மதிப்புமிக்க யூனிகார்ன்களாக உள்ளன. கடந்த மாதம், அமெரிக்க சொத்து மேலாண்மை நிறுவனமான இன்வெஸ்கோ, உணவு தொழில்நுட்ப நிறுவனமான ஸ்விக்கியின் மதிப்பை 8.3 பில்லியன் டாலராக உயர்த்தியது. Fintech ஸ்டார்ட்அப் Razorpay 2021 டிசம்பரில் அதன் $375-மில்லியன் நிதி திரட்டலுக்குப் பிறகு $7.5 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது.

இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு 112 யூனிகார்ன்களைக் கொண்டுள்ளது, இருப்பினும், பெரும்பான்மையானவர்களின் மதிப்பு $5 பில்லியனுக்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Montage of TechSparks Mumbai Sponsors