Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆண்டிற்கு 50 லட்சம் சமோசாக்கள் விற்பனை: தரமான ஸ்னாக்குடன் பார்ட்டி செய்யலாம்!

பல வகையான சமோசாக்களை வழங்கும் பெங்களூருவைச் சேர்ந்த சமோசா பார்ட்டி ஸ்டார்ட் அப் சமோசாக்களின் உள்ளே என்ன வகையான மசாலா இருக்கிறது என்பதை அதில் பொறித்திருப்பது அதன் சிறப்பம்சம்.

ஆண்டிற்கு 50 லட்சம் சமோசாக்கள் விற்பனை: தரமான ஸ்னாக்குடன் பார்ட்டி செய்யலாம்!

Monday October 25, 2021 , 3 min Read

மக்கள் விரும்பு சாப்பிடும் ஸ்நாக்ஸ் சமோசா. எல்லாத் துறைகளிலும் புதுமையைப் புகுத்தும் தொழில்நுட்பத்தை சமோசாக்களிலும் புகுத்தியுள்ளார் தீக்‌ஷா பாண்டே. தீக்‌ஷா பாண்டே, அமீத் நன்வானி இருவரும் Samosa Party என்கிற ஸ்டார்ட் அப்பின் இணை நிறுவனர்கள். இந்த ஸ்டார்ட் அப் 14 வகையான சமோசாக்களை வழங்குகிறது.


ஓபராய் குழுமம், பிட்சா ஹட், சாய் பாயிண்ட் என உணவு மற்றும் பானங்கள் துறையில் 15 ஆண்டுகால அனுபவமிக்கவர் தீக்‌ஷா. துறைசார் அனுபவமிக்க இவர் எப்போதும் நுகர்வோரின் நடத்தையைப் புரிந்துகொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் உருவாகும் வாய்ப்புகளைக் கவனிக்கவும் இவர் தவறுவதில்லை.

1

தீக்‌ஷா பாண்டே மற்றும் அமீத் நன்வானி

உள்ளூர் ஸ்நாக்ஸ் வகைகளை பெரியளவில் கொண்டு சேர்க்கும் QSR பிராண்ட் இல்லை என்பதை கவனித்தார்.

“சிறு நகரங்களில்கூட எளிதாக பிராண்டட் பர்கர், பீட்சா போன்றவை கிடைக்கின்றன. ஆனால் உள்ளூர் ஸ்நாக்ஸ் வகைகள் அப்படிக் கிடைப்பதில்லை. அருகிலிருக்கும் கடைகளைத் தேடியே செல்ல வேண்டியுள்ளது,” என்கிறார்.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வசதிக்கும் சுகாதாரத்திற்கும் தரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதற்காகக் கூடுதலாக செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்கு 'சமோசா பார்ட்டி’ மூலம் ஒரு சிறந்த, மாறுபட்ட அனுபவத்தை வழங்கவேண்டும் என்பதே இணை நிறுவனர்களின் நோக்கம்.


‘சமோசா பார்ட்டி’ மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 30 நிமிடங்களில் டெலிவர் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே சூடான, சுவையான சமோசாக்களை சாப்பிடலாம் என்கின்றனர்.

டி2சி பிராண்ட் அனுபவம்

முதல் ஸ்டோர் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. எட்டு முதல் ஒன்பது வகையான சமோசாக்கள் விற்பனை செய்யப்பட்டன. இன்று 15 இடங்களில் செயல்படுகின்றன. உணவு டெலிவர் செய்யும் சந்தைப்பகுதிகள் மூலமாகவும் சொந்த வலைதளம் மூலமாகவும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகின்றன.


இந்த டி2சி பிராண்ட் ஒரு மாதத்திற்கு 50,000 ஆர்டர்கள் பெறுகின்றன. இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஓராண்டில் கிட்டத்தட்ட 50 லட்சம் சமோசாக்களை வாங்கியுள்ளனர்.

“80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்குகின்றனர்,” என்கிறார் தீக்‌ஷா.

லாபகரமாக வளர்ச்சியடைந்து வரும் இந்த ஸ்டார்ட் அப் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குருகிராமில் திறக்கப்பட்டுள்ளது.

குருகிராமைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அது மிகவும் வைரலானது. அதில் தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக் வகையில் இருந்து ஸ்டார்ட் அப்கள் தொழில்நுட்பத்தை சற்று விலக்கி வைத்திருப்பது நல்லது என்று குறிப்பிட்டிருந்தார். சமோசா பார்ட்டி சமோசாக்களில் கோட் பொறிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

சமோசாக்களில் குறியீடு

குருகிராம் வாடிக்கையாளரின் ட்வீட் பற்றி தீக்‌ஷா குறிப்பிடும்போது,

”அவரது சமோசாவில் C&C என பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது அது சிக்கன் & சீஸ் சமோசா. நாங்கள் 14 வகையான ஃபில்லிங்ஸ் கொடுப்பதால் எது எந்த வகை சமோசா என்பதைத் தெரிந்துகொள்வது கடினமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்,” என்றார்.
2

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக சமோசாக்களில் ஃபில்லிங் என்ன இருக்கிறது என்பதை சமோசாவிலேயே பொறிக்கின்றனர். இதைப் பார்த்ததும் தெரிந்துகொள்ளலாம்.


அதுமட்டுமின்றி எந்த பேட்ச் மூலம் தயாரிக்கப்பட்டது என்கிற குறியீடும் இடம்பெற்றிருக்கும். இதனால் பேட்ச் குறியீட்டைக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக விற்பனையை திட்டமிட முடிகிறது.

3


வாடிக்கையாளர் சந்தித்த பிரச்சனைக்கு தீர்வாக உருவான ஒரு ஐடியா பிராண்ட் இமேஜாக மாறியுள்ளது.

“சமோசாக்களில் இதுபோல் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் வாடிக்கையாளர்கள் சமோசா பார்ட்டி பிராண்ட் என்பதை அடையாளம் கண்டுவிடுகிறார்கள்,” என்கிறார்.

அனைவரும் பகிர்ந்து சாப்பிடும் வகையில் காக்டெயில் சமோசா பக்கெட் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மாறி வரும் வாடிக்கையாளர் விருப்பம்

வாடிக்கையாளர்களின் விருப்பம் தொடர்ந்து மாறி வருகிறது. இந்த மாற்றத்தைக் கவனிக்கும் பிராண்டுகள் அதற்கேற்ப தங்களது தயாரிப்பு அல்லது சேவையையும் மாற்றி வருகின்றன.

அந்த வகையில் Chai Point, Chaayos போன்ற இந்திய பிராண்டுகள் முதல் சமோசா பார்டியின் நேரடி போட்டியாளரான சமோசா சிங் வரை அனைத்து பிராண்டுமே நுகர்வோரின் மாற்றத்தால் பலனடைந்துள்ளன.


சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் தரமான ஃபாஸ்ட் ஃபுட் வகைகளை மக்கள் விரும்பி நாடுகின்றனர்.

”இந்த சந்தை மிகப்பெரிய. தொடர்ந்து நல்ல தயாரிப்பைக் கொடுத்தால் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். நாங்கள் விலையைக் காட்டிலும் தரத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். நாங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று சூழல் என்பதால் டெலிவரி மாடலில் கவனம் செலுத்துகிறோம். விரைவில் இந்த அனுபவத்தை மாற்றி நேரடியாக அனைத்து சானல்களிலும் விற்பனை செய்ய இருக்கிறோம்,” என்கிறார் தீக்‌ஷா.

ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி டி | தமிழில்: ஸ்ரீவித்யா