25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் லாபம் தரக்கூடிய 8 ஆன்லைன் தொழில்கள்!
நல்ல ஐடியா இருந்தால் ஆன்லைன் சந்தையில் தொழில் துவங்குவது ஒன்றும் கடினமல்ல. 25 ஆயிரம் ரூபாய முதலீட்டில் துவக்க கூடிய ஆன்லைன் தொழில்களை பார்க்கலாம்.
வர்த்தகத்தைத் துவக்குவது மலைப்பாக இருக்கலாம். சரக்கு நிர்வாகம், லாஜிஸ்டிக்ஸ், மார்க்கெட்டிங் போன்ற விஷயங்களை நினைத்து தயங்கலாம். இது கடினமான நீண்ட பயணம் என்றாலும், சரியாக திட்டமிட்டால், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் நல்ல முறையில் பலன் பெறலாம்.
இன்று ஆன்லைனில் சிறிய முதலீட்டில் தொழில் துவங்குவது எளிதானது. 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கக் கூடிய ஆன்லைன் தொழில்கள் பற்றி பார்க்கலாம்:
செயற்கை நகைகள்
நகைகளுக்கு என்றுமே தேவை இருக்கும். கொரோனா முடக்கத்தின் போது பல துறைகள் பாதிக்கப்பட்டாலும், எளிமையான செயற்கை நகைகளுக்கு நல்ல தேவை இருந்தது. மிகவும் குறைந்த முதலீட்டில் செயற்கை நகை வர்த்தகத்தைத் துவக்கலாம்.
பெங்களூருவைச்சேர்ந்த நகை பிராண்டான ரூபன்ஸ் நிறுவனர் சின்னு கலா, செயற்கை நகை வர்த்தகத்தை துவக்குவது நல்ல ஐடியா என்கிறார். 15,000 முதல் 20,000 ரூபாய்க்கு மொத்தமாக நகைகள் வாங்கி விற்கலாம் என்கிறார்.
“டிரேட் இந்தியா (TradeIndia) போன்ற இணையதளங்களில் நல்ல தயாரிப்பாளர்களிடம் இருந்து நகைகள் வாங்கி ஆன்லைன் கடை அமைக்கலாம்,” என்கிறார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆரம்ப வாடிக்கையாளர்களாக அமையலாம் என்கிறார்.
பேக்கரி
வீட்டிலேயே பேக்கரி அமைப்பதற்கு பெரிய முதலீடு தேவையில்லை. அடுப்பு மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தால் போதுமானது. பேக்கர்ஸ் டிரீட் (Baker’s Treat) நிறுவனரான மங்களுரின் மரியம் மொகைதீன், ஆர்வம் காரணமாக சிறிய பேக்கரியை துவக்கினார். பேக்கரி ஒரு கலை என்பவர், இத்துறையில் வர்த்தகமாக செயல்பட வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்கிறார்.
“சிறிய அளவில் துவக்கும் போது பிராண்டிங் தேவையில்லை. தரம் மற்றும் சுவையில் கவனம் செலுத்தினால் போதும் என்கிறார்.
ரூ 15,000 முதல் ரூ.25,000 முதலீட்டில் துவக்கலாம்.
மெழுகுவர்த்திகள்
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மெழுகுவர்த்தியை குறிப்பாக வாசனை மெழுகுவர்த்தியை அதிகம் வாங்குகின்றனர். உள் அலங்காரம் மற்றும் பரிசளிக்க இதை பயன்படுத்துகின்றனர்.
குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே மெழுகுவர்த்தி தயாரிக்கலாம் அல்லது வேறு இடத்தில் இருந்து வாங்கலாம். மொழுகு, விக், மோல்ட், நூல், ஆயில் ஆகிய மூலப்பொருட்கள் தேவை.
இவைத்தவிர மெழுகுவர்த்தை செய்வதற்கான உபகரணங்களும் இருக்க வேண்டும். புதிதாக தொழில் துவங்குபவர்கள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் இணையதளமான
Itsy Bitsy-ல் தங்கள் பொருட்களை பட்டியலிடலாம். தில்லி, ஷிமோகா, சென்னை உள்ளிட்ட இடங்களில் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.
படுக்கை விரிப்புகள்
படுக்கை விரிப்புகளை விற்பனை செய்யத்துவங்குவது எளிதானது. மொத்தமாக இவற்றை வாங்கி விற்கலாம். இந்தியாமார்ட் தளம் மூலம், கொல்கத்தா, சூரத், தில்லி, பாணிபட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள உற்பத்தியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
தில்லிய்ன் சாதர் பஜாரில் இருந்து படுக்கை விரிப்புகளை வாங்கி விற்பனை செய்வதாகக் கூறுகிறார் ஜபல்பூரைச்சேர்ந்த ரேகா சபர்வால். வாட்ஸ் அப் வழியே விற்பனையை துவங்கியவர் இன்று வெற்றிகரமாக வர்த்தகம் செய்து வருகிறார்.
அப்பளம்
குறைந்த முதலீடு தேவை என்பதால் அப்பளம் தொழில் லாபகரமாக இருக்கும். வீட்டிலேயே தயாரித்து விற்கலாம் அல்லது, அப்பளம் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம்.
அரிசி அப்பளம், உளுந்து அப்பளம், கார அப்பளம் என பலவகையான அப்பளங்கள் உள்ளன.
25,000 முதலீடு இருந்தால் அப்பளம் தயாரித்து, சமூக ஊடகங்கள் வழியே ஆன்லைனில் விற்கலாம்.
டிஸ்போசபில் கட்லரி
பிளாஸ்டிக், மூங்கில் தட்டுகள் என எப்போதுமே பல வகையான ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களுக்குத் தேவை உள்ளது. குறைந்த முதலீட்டில் இதை துவக்கலாம். நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வாசனைப் பொருட்கள்
இந்தியாவில் வாசனைப் பொருட்களுக்கான தேவை அதிகம் உள்ளது. வீட்டிலேயே இவற்றை தயார் செய்வது வழக்கம் என்றாலும், கரம் மசாலா, ஜீரா மசாலா போன்றவற்றுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது.
மும்பையச்சேர்ந்தர் ஊர்மிளா மற்றும் ஆர்த்தி சமந்த், மசாலா டோக்ரி எனும் பெயரில் மசாலா பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டு ஒரு கோடி வருவாய் இலக்கை கொண்டுள்ளனர்.
பட்டன்கள்
ஆடை ரகங்களில் பட்டன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிளாஸ்டிக் முதல் ஸ்டீல் பட்டன் வரை பல வகை இருக்கின்றன. சமூக ஊடகங்களில் உள்ளூரில் ஒரு விற்பனைக் குழு தொடங்கி விற்கலாம். சிறுதொழில் முனைவோர், MyEasyStore இணையதளத்தில் ஆன்லைன் கடையும் துவக்கலாம்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்