Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'உலகின் செல்வாக்குமிக்க இந்தியத் தலைவர்' பட்டியலில் சத்ய நாதெல்லா முதலிடம்!

உலகின் செல்வாக்குமிக்க நிறுவனங்களில் தலைமை பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் பட்டியலை எச்.எஸ்.பி.சி ஹுருன் குளோபல் இந்தியன்ஸ் 2024 வெளியிட்டது. அதில், மைக்ரோசாப்ட் தலைவர், சிஇஒ சத்ய நாதெல்லா முதலிடைத்தை பிடித்துள்ளார்.

'உலகின் செல்வாக்குமிக்க இந்தியத் தலைவர்' பட்டியலில் சத்ய நாதெல்லா முதலிடம்!

Wednesday January 22, 2025 , 2 min Read

உலகின் செல்வாக்குமிக்க நிறுவனங்களில் தலைமை பதவிகளில் இருக்கும் 226 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை பட்டியலிடும், எச்.எஸ்.பி.சி ஹுருன் குளோபல் இந்தியன்ஸ் 2024 (HSBC Hurun Global Indians List) பட்டியலில் மைக்ரோசாப்ட் தலைவர் மற்றும் சி.இ.ஓ சத்ய நாதெல்லா முதலிடத்தை பிடித்துள்ளார்.

கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் சி.இ.ஓ நீல் மோகன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

ceo

ஹுருன் முந்தைய அறிக்கைகளில் இடம்பெற்ற முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 400 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வர்த்தக தலைவர்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களின் மொத்த மதிப்பு பத்து லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாகும்.

இந்தப் பட்டியல் பொது நிறுவனங்கள் எனில் சந்தை மதிப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள் எனில் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. வர்த்தக தலைவர்களின் 57 சதவீதம் பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்றும் 41 சதவீதம் பேர் தொழில்முறை வல்லுனர்கள் என்றும், 2 சதவீதம் பேர் வாரிசுகள் என்றும் பட்டியல் உணர்த்துகிறது.

வொர்க்டேவிப் அனீல் பூஸ்ரி மற்றும் பேர்பேக்ஸ் ஹோல்டிங்சின் பிரேம் வாத்ஸா ஆகியோர் முதல் தலைமுறை தலைவர்களில் முக்கியமானவர்கள். இந்த பட்டியலில் உள்ள சுகாதார நல நிறுவனம் கம்ப்யூர் இணை நிறுவனர் தான்யா டாண்டன் (2&) மிகவும் இளம்வயது தலைவராக அமைகிறார்.

வெர்டக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் ரேஷ்மா கேவல்ரமணி, அரிஸ்டா நெட்வொர்க்ஸ் ஜெயஸ்ரீ உல்லாள், சேனனில் குளோபல் சி.இ.ஓ லீனா நாயர் ஆகிய 12 பெண்கள் பட்டியலில் உள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்த்தக தலைவர்களின் சர்வதேச செல்வாக்கை இந்த பட்டியல் உணர்த்துகிறது. இதில் உள்ளவர்களில் 79 சதவீதம் பேர் அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். யூகே (5%), ஐக்கிய அரபு குடியரை (4%). சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 37 சதவீத தலைவர்கள் உள்ளனர். இவர்களில் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவிலும் அதிகம் பேர் உள்ளனர்.

இந்திய தொழில்முறை நிர்வாகிகள் தொழில்நுட்பத் துறையில் வலுவான இருப்பு கொண்டுள்ளனர். மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் 87 ஆகும். நிதிச்சேவை (24) மற்றும் சுகாதார நலன் (21) அடுத்த இடங்களில் உள்ளன. நொவார்டிஸ் வசந்த் நரசிம்மன் மற்றும் அடோபியின் ஷாந்தனு நாரயண் இதில் முன்னிலை வகிக்கின்றனர்.

தொகுப்பு: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan