கனவுலகில் காலடி வைத்து கோடிகளை அள்ளும் கணக்காளர்!

வீட்டில் திரையரங்கு திரைச்சீலைகளை தயாரித்த யூசுப், தற்பொழுது பிவிஆர், சத்யம் மற்றும் ஐரோப்பா, கிழக்கு ஆசியா என பல இடங்களுக்கு திரைச்சீலைகளை ஏற்றுமதி செய்கிறார்.

21st Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

வீட்டில் திரையரங்கு திரைச்சீலைகளை தயாரித்த யூசுப், தற்பொழுது  பிவிஆர், சத்யம் மற்றும் ஐரோப்பா, கிழக்கு ஆசியா என பல இடங்களுக்கு திரைச் சீலைகளை  ஏற்றுமதி செய்து வருகிறார். இன்றைக்கு ’காலா லைட்’Galalite’ ஒரு வருடத்தில் 17 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்துள்ளார் .


"மனதிற்கு பிடித்த வேலையை நமது நோக்கமாகக் கொண்டால், அந்த நோக்கமே நமது வாழ்க்கையாக மாறும்..." 


1950களில் யூசுப் ஏ காலாபாய்வாலா பகுதிநேரக் கணக்காளராக வேலைபார்த்து வந்தார். ஆனால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் கனவுலகம், அவரையும் விட்டு வைக்கவில்லை. திரையரங்குகளில் தனது நேரத்தை செலவிட்டு வந்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது,  திரைச்சீலைகள் தயாரிப்பும் அவருக்கு வியப்பைத் தந்துள்ளது.   


மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரும் யூசுப் ஏ  காலாபாய்வாலாவின் பேரனுமான யூசுப் எஸ் காலாபாய்வாலா யுவர்ஸ்டோரிக்கு ஒரு சிறப்புப் பேட்டி தந்துள்ளார்.

"எனது தாத்தாவிற்கு திரைச் சீலைகளும், அவற்றின் பகுதிகள் மீதும் அலாதி பிரியம். அவற்றில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், எனது தாத்தாவைத்தான் அவற்றை சரி செய்ய அழைப்பார்கள்."

மும்பையில் வெஸ்டிரெக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தில், யூசுப் எஸின்  நண்பர் சென்குப்தா வேலைபார்த்து வந்துள்ளார். அந்த நிறுவனம் திரைச்சீலைகளைத் தயாரித்து வந்துள்ளனர்.

Yusuf S

ஒரு நாள் தனது நண்பர் சென் குப்தாவை சந்திக்க சென்ற யூசுப் ஏ விடம் அவரிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். "திரைச்சீலைகள் தயாரிப்பாயா? என்று, ஒரு நொடிகூட தாமதிக்காது யூசுபின் பதில் "செய்கிறேன்" என வந்துள்ளது. அங்கிருந்து தான் காலாலைட் துவங்கியுள்ளது. 

கணக்காளர் கனவுலகில் வந்த கதை : 

1959ல்சென்குப்தா, யூசுப்விற்கு திரைச்சீலைகள் தயாரிக்கும் வேலை தந்த பொழுது, அவரால் அதனை மறுக்க இயலவில்லை, காரணம் அவரது விருப்பம் அதுவாக இருந்தது. ஆனால் அதற்கு ஏற்ற படிப்போ அல்லது அதைப் பற்றிய அறிவோ அவருக்கு இருக்கவில்லை. மேலும் அதற்குத் தேவையான மாதிரிகளை பெறுவதும் சுலபமாக இல்லை 


சென்குப்தா, யூசுப்விற்கு வெஸ்டிரெக்ஸ்  மாதிரிகள் கிடைக்க உதவினார். அது போன்ற துணியை வாங்க மும்பை வீதிகளில் தனது தாத்தா அலைந்து திரிந்தாகக் கூறுகிறார்.

"அந்த காலத்தில் திரைச்சீலைகள், பருத்தியில் செய்யப்பட்டன. ஆனால் அவை அரிதாக இருந்தன. லேமிங்டன் சாலை மற்றும் மும்பையின் பல நூல் ஆலைகளுக்கு அலைந்து அது போன்ற துணியை வாங்கினார் எனது தாத்தா. அவருக்குத் தேவையானது கிடைத்தாலும், ஒரு சவாலும் காத்திருந்தது. மொத்தமாக வாங்க வேண்டும் என்பதே அது. விதி மீது நம்பிக்கை வைத்து கடன் வாங்கி, துணியை மொத்தமாக வாங்கியுள்ளார்." 

யூசுப்’ன் வீடுதான் அவரது முதல் தொழிற்சாலையாக அமைந்தது. அவரது மனைவி சகோதரர்கள் மற்றும் இரண்டு வேலையாட்கள் துணையோடு வேலையை துவங்கியுள்ளார். 


பல நாட்கள் அனைவரும் இணைந்து  கடுமையாக உழைத்ததன் பலனாக, வெற்றி கிட்டியுள்ளது. அந்த திரைச்சீலையை எடுத்துக்கொண்டு வெஸ்டிரெக்ஸ் அலுவலகம் சென்றுள்ளார், அவர்களிடம் காண்பித்து, மேலும் தயாரிக்க ஆர்டர் பெற. அந்த அமெரிக்க நிறுவனத்திற்கும் இவரது உழைப்பு, ஆர்வம், மற்றும் இவர் தயாரித்த திரைச்சீலை ஆகியவை பிடித்துப் போக, காலாலைட் தயாரித்த முதல் திரைச்சீலையை அன்றைய மெட்ரோ சினிமாஸ்-ல் (இன்று ஐ நாக்ஸ்) நிறுவியுள்ளனர்.  


அன்றில் இருந்து யூசுப்விற்கு  காலாபாய்வாலா என்ற செல்லப்பெயரும் கிடைத்துள்ளது .

அந்த திரைச்சீலையை நிறுவிய பிறகு அந்தத் தொழிலில் முழுவதுமாக இறங்கினர் யூசுப். ஒரு சிறிய இடத்தை தயாரிப்பு தேவைகளுக்காக வாடைக்கு எடுத்துள்ளார். காலங்கள் மாற, காலத்திற்கு ஏற்ப தனது பொருளிலும் மாற்றங்கள் செய்துள்ளார்.


யூசுப் எஸ்  கூறுவது, 1959ல் இருந்து 10 வருடங்களில், திரைச்சீலைகளுக்கு பின்புறம் ஒலி பெருக்கிகளை பொருத்துவதற்கு மனிதர்களுக்கு உதவும் வகையில் ஒரு இயந்திரம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். 1979 ஆண்டிற்குள், இந்தியா முழுவதிலும் 3500 திரையரங்குகளில் இவர்கள் திரைச்சீலைகளை நிறுவியுள்ளனர். 

1984 ஆம் ஆண்டில், முப்பரிமாண தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமான பொழுது, அந்த மாற்றத்தில் காலாலைட்டிற்கும்  முக்கியப் பங்கிருந்தது. 1989 ஆம் ஆண்டில் மனிதர்கள் உதவியின்றி ஒலிப்பெருக்கிகளை பொறுத்த துளையிடும் கருவியினை நிறுவியுள்ளனர்.


தற்பொழுது, லோனாவாலா மற்றும் போலந்தில், 25,000 சதுரடியில் உற்பத்தித் தொழிற்சாலை இவர்களுக்கு உள்ளது. ஒரு சதுர அடியினை 120 முதல் 1200 ரூபாய்க்கு விற்கின்றனர்.


இந்திய சந்தையில் 60 சதவீதம் : 

Screens

மாட்டே வெள்ளை திரைச்சீலைகளில் துவங்கி, பிறகு டிஜிலைட், முப்பரிமாண படங்களுக்காக ப்ரிசம் 3D, மிராஜ் சீரிஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர், பின்னர் RGB லேசர் கருவிக்கு ஏற்ப வெள்ளித்திரையான மிராஜ் XDL 1.2 ஐ அறிமுகம் செய்தனர்.

பிவிஆர், சத்யம், மிராஜ், மற்றும் சென்னை மும்பை ஆகிய நகரங்களில் பல திரையரங்குகளில் தங்களது திரைச்சீலைகளை நிறுவி இந்திய அளவில் 65% சந்தையை தங்கள்வசம் வைத்துள்ளது காலாலைட். மேலும் மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பா, ஆகியவற்றுக்கும்  ஏற்றுமதி செய்கின்றனர்.

இன்றைய நிலையில் ஒரு வருடத்தில் 17 கோடி வணிகம் செய்கிறது.


பார்வையாளருக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்தல்:


பார்வையாளர் கண்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில் திரைச்சீலைகள் தயாரிக்கப்படுவதாக யூசுப் கூறுகிறார். இந்த திரையில் பூசப்படும் பூச்சு நச்சுத்தன்மை அற்றதாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்காத வகையிலும் அமைந்துள்ளது. மேலும் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டிற்கு ஏற்பவும் திரைச்சீலைகள் அமைந்துள்ளது. காரணம் திரையரங்கில் மாபெரும் வணிகப்பொருள் என்றால் அது திரைச்சீலையே.


இந்தத் துறையில் உள்ள போட்டியை பற்றி பேசுகையில், யூசுப் கூறுவது

"இந்தியாவில் 1000-12000 திரையரங்குகள் உள்ளன. ஒரு திரைச்சீலையின் ஆயுள் 10 வருடம். தோராயமாக 1000 முதல் 1200 திரைச்சீலைகள் ஒரு வருடத்தில் மாற்றப்படுகின்றன. அதில் 700-750 திரைச்சீலைகளை  காலாலைட் மாற்றுகின்றது. தொடர்ந்து மாற்றங்களுக்கு ஏற்ப மாறுவதே எங்களை போட்டியாளர்களிடமிருந்து தனித்துக் காட்டுகின்றது,"  என்கிறார் அவர்.

இந்தத் துறையில் வேறு பல போட்டியாளர்கள் இருந்தாலும், அவர்களிடமிருந்து தங்களுக்கு போட்டி இல்லை என்று யூசுப் கூறுகிறார். ஆனால் உலக அளவில் ஹார்க்நெஸ் என்ற ஒரு நிறுவனம் தங்களுக்குக் கடுமையான போட்டி அளிப்பதாகவும் கூறுகிறார். 

நிறுவனத்தின் எதிர்காலம் : 

தற்போதைய நிலையில், ஐரோப்பா, சி ஐ எஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற இடங்களில் சந்தையினை பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது காலாலைட். அதே வேளை சினிமாத் துறையில் தனது புதிய தொழில்நுட்பங்கள் மூலம் எவ்வளவு புதுமைகளை புகுத்த இயலும், எவ்வளவு தூரம் நிறுவனத்தை வளர்க்க முடியும் என்ற சோதனையிலும் இறங்கியுள்ளது.


ஆங்கிலத்தில் : பலக் அகர்வால் | தமிழில்  : கெளதம் தவமணி 
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India