மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரர் ஆன அம்பானி: சரிந்த ஜாங்!
ஷான்ஷன்-க்கு கடந்த வாரம் மட்டும் 22 பில்லியன் டாலர் இழப்பு!
"2020ம் ஆண்டு ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பு 70.9 பில்லியன் டாலரில் இருந்து 77.8 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்தது. அவரது சொத்து மதிப்பு உயர்ந்ததன் மூலம், ஜாங் ஷான்ஷன் உலகின் 11 ஆவது பணக்காரராக உயர்ந்தார்."
இந்தியாவின் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரர் ஆகி இருக்கிறார். அம்பானி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆசியாவின் பணக்காரர்களின் தரவரிசையில் முன்னிலை வகித்தார்.
அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரராவதற்கு முன்பு, அவருக்கு போட்டியாக இருந்தவர் ஜாக் மா. அவரது சொத்த மதிப்பு 61.7 பில்லியன் டாலரில் இருந்து 51.2 பில்லியன் டாலர் ஆக குறைந்தது. ஆனால்,
அம்பானியின் சொத்து மதிப்பு 18.3 பில்லியன் டாலரில் இருந்து 76.9 பில்லியன் டாலராக உயர்ந்ததால் அவர் ஆசியாவின் பணக்காரர் ஆகி இருந்தார். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் யாரும் எதிர்பாராதவிதமாக சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
2020ம் ஆண்டு ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பு 70.9 பில்லியன் டாலரில் இருந்து 77.8 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்தது. அவரது சொத்து மதிப்பு உயர்ந்ததன் மூலம், ஜாங் ஷான்ஷன் உலகின் 11 ஆவது பணக்காரராக உயர்ந்தார்.
பல்வேறு தொழில்கள் மூலம் முன்னேறி வந்தாலும், ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் அம்பானி.
ஆனால் கிட்டத்தட்ட இரண்டே மாதங்களில் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சுமார் 80 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், அம்பானி மீண்டும் ஜாங் ஷான்ஷனை விட பணக்காரர் ஆகியிருக்கிறார்.
அதற்குக் காரணம் ஜாங் ஷான்ஷன் கடந்த வாரம் மட்டும் 22 பில்லியன் டாலரை இழக்க நேரிட்டதுதான். இந்த வாரம் உலகின் மிகப்பெரிய சரிவுகளில் ஹாங்காங் மற்றும் சீன பங்குச் சந்தைகள் இருந்ததால் ஜாங் ஷான்ஷன் கடந்த வாரம் மட்டும் 22 பில்லியன் டாலர் இழந்தார்.
மேலும், அம்பானி தனது சாம்ராஜ்யத்தை தொழில்நுட்பம் மற்றும் மின் வணிகம் ஆகியவற்றில் செலுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு, கூகிள் மற்றும் ஃபேஸ்புக் இன்க் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு 27 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் சில்லறை பிரிவுகளில் பங்குகளை விற்று, தனது செல்வத்தை 18 பில்லியன் டாலர்களாக உயர்த்தினார்.
தகவல் உதவி- bloomberg | தொகுப்பு: மலையரசு