Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அன்று வெறும் ஃபேஸ்புக் பக்கம்; இன்று ‘ஊடக தல’ - இது ‘இன்ஷார்ட்ஸ்’ கதை!

ஓர் எளிய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து தொடங்கி இன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட மீடியா நிறுவனமாக ‘இன்ஷார்ட்ஸ்’ (Inshorts)-ஐ மாற்றியதில் அசார் இக்பாலின் பங்கும் பயணமும் மிக முக்கியமானது.

அன்று வெறும் ஃபேஸ்புக் பக்கம்; இன்று ‘ஊடக தல’ - இது ‘இன்ஷார்ட்ஸ்’ கதை!

Thursday April 04, 2024 , 3 min Read

ஓர் எளிய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து தொடங்கி இன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட மீடியா நிறுவனமாக ‘இன்ஷார்ட்ஸ்’ (Inshorts)-ஐ மாற்றியதில் அசார் இக்பாலின் பங்கும் பயணமும் மிக முக்கியமானது.

இன்றைய அவசர உலகில் நேரம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும்போது தகவல் சுமையும் பெரிய சவாலாக மாறிக்கொண்டிருக்கும் போது அசார் இக்பால் புதுமை புகுத்தலின் கலங்கரை விளக்கமாக உதித்தெழுந்தார். நீண்ட செய்தியை எல்லாம் எங்கு வாசிப்பது? ஏது நேரம் என்று பும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக சுருக்கமான செய்திகள் டூ மினிட்ஸ் நூடுல்ஸ் போல் செய்திகளை சுருக்கமாக வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்தினார் இக்பால்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தை இந்தியாவின் மிகவும் பிரியமான செய்தித் தளமாக மாற்றிய இந்த தொழில்முனைவோரின் பயணம் ஆச்சரியமானது.

இன்ஷார்ட்ஸ் உருவான கதை

டிஜிட்டல் தொழில்முனைவோர் துறையில் புகழ்பெற்ற அசார் இக்பால், ஐஐடி டெல்லியில் தனது பாதையைத் தொடங்கினார். 2013-இல், அவரது தொலைநோக்கு சகாக்களான அனுனய் அருணாவ் மற்றும் தீபித் புர்கயாஸ்தா ஆகியோருடன் சேர்ந்து, ‘இன்ஷார்ட்ஸ்’ என்ற ஒரு தளம் மலர்வதற்கான விதைகளை விதைத்தார்.

ஆரம்பத்தில் ‘நியூஸ் இன் ஷார்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டு தொடங்கிய அவர்களது இன்ஷார்ட்ஸ் தளம், நேரம் இல்லாத வாசகர்களுக்கும் விரிவான செய்திக் கட்டுரைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முயன்றது.

60 வார்த்தை துணுக்குகளாகச் செய்திகளை சுருக்கிச் சேர்க்கும் இந்த மூவரின் எளிமையானதும், அற்புதமானதுமான யோசனை, சுருக்கமான செய்திகளின் புதிய பதிப்புகளுக்காக எதிர்பார்ப்பு மிகுந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இன்ஷார்ட்ஸ் இன்று...

2024-ஆம் ஆண்டில் பார்த்தோமானால் வேகமாக முன்னேறி, கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் இன்ஷார்ட்ஸ் உயர்ந்து தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

எண்ணற்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட சுருக்கமான செய்தித் துண்டுகளை வழங்குவதில் அதன் கவர்ச்சி உள்ளது. அசார் இக்பால் பொருத்தமாகச் சொல்வது போல், “இன்ஷார்ட்ஸின் யோசனை, இக்காலத் தலைமுறையை செய்தி வாசிக்கும் பழக்கத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும்” என்ற நோக்கமே பிரதானமாகத் தெரிகிறது.

பயணத்தில் இருக்கும் மக்களுக்கு இன்ஷார்ட்ஸ் ஒரு புகலிடமாக இருப்பது உண்மையே. தெளிவான செய்தித் துணுக்குப் புதுப்பிப்புகளை வழங்குகிறது. அதன் நேர்த்தியான இடைமுகம் மற்றும் வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் போன்றவற்றால் தினசரி 1.2 கோடி இந்தியர்களுக்குச் செல்லக்கூடிய தளமாக மாறியுள்ளது. இது ஊடக அதிகார மையமாக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அசார் இக்பாலின் அயராத உழைப்பும் சிந்தனையும் இன்ஷார்ட்சின் வெற்றியுடன் மட்டும் நின்று விடவில்லை. 2019-ஆம் ஆண்டில், அவரவர் இருப்பிட அடிப்படையிலான சமூக வலைப்பின்னல் மற்றும் செய்தி தளமான ’பப்ளிக்’ என்பதை அறிமுகம் செய்தார். 100 மில்லியன்களுக்கும் மேலான பதிவிறக்கங்களுடன் ‘பப்ளிக்’ ஊடகம் கருத்துருவாக்கங்களை உள்ளடக்கங்களை உருவாக்குநர்களை பெரிய அளவில் ஊக்குவித்தது.

அதாவது, இந்தியாவிலேயே அவரவர் இருப்பிடம் சார்ந்த சமூக வலைப்பின்னலாக பப்ளிக் தன் அடையாளத்தை நிறுவிக் கொண்டது. அவரது பயணத்தைப் பற்றி அசார் இக்பால் கூறியது:

“பத்தாண்டுகளுக்குப் பிறகு, நான் எனது 30-களில் அடியெடுத்து வைக்கும்போது, ​​இன்று நாங்கள் இந்தத் துறையில் மிகப் பெரிய இடத்தை உருவாக்கியிருக்கிறோம்.”

புதுமை மற்றும் பயனர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான இந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அசாரின் தொழில் முனைவோர் நெறிமுறைகளை எடுத்துக்காட்டுகிறது.

Inshorts

மலைக்கத்தக்க வளர்ச்சி

ஸ்டேடிஸ்டாவின் கணிப்புகளின்படி, இந்தியாவின் டிஜிட்டல் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகள் ஊடகச் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்நோக்குகிறது. இதன் வருவாய் 2024-க்குள் ரூ.107.9 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2028-ஆம் ஆண்டு வரை 3.77% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) கணிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீடியா என்னும் பிராந்தியம் இன்ஷார்ட்ஸ் போன்ற சுருக்கச் செய்தி தளம் மற்றும் சமூக வலைப்பின்னல் தளத்திற்கு அவர்களின் தடத்தை விரிவுபடுத்துவதற்கும், வளர்ந்து வரும் பார்வையாளர்களை கவருவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.

இன்ஷார்ட்ஸ் அதன் மொழியியல் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு பிராந்திய பேச்சு வழக்குகளை வழங்கும் எதிர்காலத்தை அசார் இக்பால் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கிறார். இந்த நடவடிக்கை பயனர் ஈடுபாட்டை அதிகரிப்பது மட்டுமல்லாமல் விளம்பர வருவாய்க்கான புதிய வழிகளையும் திறக்கும் என்று நம்புகிறார்.

இன்ஷார்ட்ஸ் எந்தவொரு முயற்சியிலும் பொதுவான தடைகளை எதிர்கொண்டது. வெர்ட்டிக்கல் வீடியோ வடிவங்களின் வளர்ந்து வரும் ஒரு சூழலில் நேவிகேஷன் முதல் வளர்ச்சி மற்றும் நுகர்வோர் கோரிக்கைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவது வரை, பயணம் பெரும் சவால்களை எதிர்கொண்டதாகவே இருந்தது என்கிறார் இக்பால்.

இருப்பினும், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு படிக்கல்லாக உருமாறி, இன்ஷார்ட்ஸை அதிக உயரங்களை நோக்கி இட்டுச் சென்றது. அதன் டிஎன்ஏவிலேயே மீண்டெழும் தன்மை மற்றும் தகவமைப்புத் தன்மை அதன் பரிணாம வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஊக்கங்களை அளித்து வந்தது.

சாதாரண ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து மீடியா தல வரை அசார் இக்பாலின் பயணம் சுருக்கமான, பொருத்தமான தினசரி செய்திகளுக்கான ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.