Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

பெண்களின் முடி உதிர்வுக்கு தீர்வு: அழகான ஹேர் எக்ஸ்டென்ஷன் வழங்கும் சகோதரிகளின் தொழில் முயற்சி!

சகோதரிகளான ரிச்சா குரோவர் பட்ரூகா, ரைனா குரோவர் தொடங்கிய 1 Hair Stop மேட் இன் இந்தியா பிராண்ட் ஹேர் எக்ஸ்டென்ஷன், டாப்பர்ஸ், கிளிப்-ஆன்ஸ் போன்றவற்றை வழங்குகிறது.

பெண்களின் முடி உதிர்வுக்கு தீர்வு: அழகான ஹேர் எக்ஸ்டென்ஷன் வழங்கும் சகோதரிகளின் தொழில் முயற்சி!

Friday April 01, 2022 , 3 min Read

கூந்தலை அழகுப்படுத்த ஏராளமான ஸ்டைலிங் பொருட்கள் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கின்றன. ஹேர் எக்ஸ்டென்ஷன், சில்க் டாப்பர்ஸ், ஸ்ட்ரீக்ஸ், வால்யூமைசர்ஸ் போன்றவை இதில் அடங்கும்.

உலகளவில் கூந்தலை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இருப்பினும், ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவைப் பொருத்தவரை உள்நாட்டு சந்தையில் தேவை அதிகமிருப்பதில்லை.

லலித் குரோவர் 2008ம் ஆண்டு தொடங்கிய நிறுவனம் ஹைதராபாத்தைச் சேர்ந்த Hritik Exim. இந்நிறுவனம் அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஹேர் எக்ஸ்டென்ஷன் ஏற்றுமதி செய்கிறது.

ரிச்சா குரோவர் பட்ரூகா, ரைனா குரோவர் இருவரும் லலித் குரோவரின் மகள்கள். பட்டப்படிப்பு முடித்து அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் யாரும் ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்த முன்வருவதில்லை என்பதை இவர்கள் கவனித்தனர்.

1

ரிச்சா குரோவர் பட்ரூகா, ரைனா குரோவர் - இணை நிறுவனர்கள், 1 Hair Stop

”நான் அப்பாவின் வணிகத்தில் சேர்ந்துகொண்டேன். ரைனா டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி வேலைக்கு சென்றார். நான் சர்வதேச விற்பனைக்கு பொறுப்பேற்றிருந்தேன். ஹேர் எக்ஸ்டென்ஷன் ஏற்றுமதி சிறப்பாக இருந்தது. ஆனால், இந்தியாவில் தேவை மிகவும் குறைவாகவே இருந்தது,” என்கிறார் ரிச்சா.

கோவிட்-19, கர்ப்ப காலம், தைராய்டு, ரத்த சோகை, பிசிஓஎஸ், சொரியாசிஸ் மாதிரியான சருமப் பிரச்சனைகள் என பல்வேறு காரணங்களால் பல பெண்கள் முடி கொட்டும் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஹேர் எக்ஸ்டென்ஷன் தயாரிப்புகளுக்கான தேவை இருப்பதை உணர்ந்த ரிச்சா ஹேர் எக்ஸ்டென்ஷன் பிராண்ட் தொடங்குவது பற்றி தன் சகோதரியுடன் கலந்து பேசினார். ரைனாவும் வேலையை விட்டு விலகி முழு நேரமாக வணிகத்தில் இணைந்துகொண்டார்.

2019-ம் ஆண்டு சகோதரிகள் இருவரும் 1 Hair Stop தொடங்கினார்கள். இந்நிறுவனம் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஆடம்பர ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ், டாப்பர்ஸ், கிளிப்-ஆன்ஸ் போன்றவற்றை வழங்குகிறது.

இந்திய சந்தையில் கடந்த மூன்றாண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டர்ன்ஓவர் பற்றிய விவரங்களை ரிச்சா பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சேவையளித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

சமூக தடைகள்

இன்றைய நவீன யுகத்திலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழுந்தால் கண்டுகொள்ளாத இந்தச் சமூகம் பெண்களின் முடிஉதிர்வு பிரச்சனையை மட்டும் ஏன் வேறு கோணத்தில் பார்க்கிறது என கேள்வியெழுப்புகிறார் ரிச்சா.

“இந்த கண்ணோட்டத்தை நாங்கள் மாற்ற விரும்பினோம். பெரும்பாலான பெண்கள் எங்கள் தயாரிப்புகளை விக் என தவறாகப் புரிந்து கொள்கின்றனர்,” என்கிறார்.

இதுபற்றி அவர் விவரிக்கும்போது,

“கூந்தலுக்கு அடர்த்தியைக் கொடுக்கும் வால்யூமைசர், கிளிப்-ஆன் பேங்க்ஸ், ஹாலோ எக்ஸ்டென்ஷன்ஸ், போனிடெயில் எக்ஸ்டென்ஷன்ஸ் என தலைமுடி பிரச்சனைக்கு ஏற்ப பல வகையான தயாரிப்புகள் எங்களிடம் இருக்கின்றன,” என்கிறார்.

1 Hair Stop ஹேர்பீசஸ் மற்றும் ஆக்சசரீஸ் 1,200 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களின் பிரத்யேக தேவைக்கேற்ப இவை கிடைக்கின்றன.

ஆரம்பத்தில் தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சவாலாக இருந்தது என்கிறார் ரிச்சா.

ரைனாவிற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் இருந்த அனுபவம் இந்த சமயத்தில் கைகொடுத்துள்ளது.

“டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களில் ரைனா உதவினார். இதில் நாங்கள் மாடல்களைக் கொண்டு வீடியோக்கள் எடுக்கவில்லை. மாறாக முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்ட பெண்களைக் கொண்டு வீடியோக்கள் எடுத்தோம். இது சிறப்பாக பலனளித்தது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் எங்கள் தயாரிப்புகள் விற்பனை ஆகத் தொடங்கின,” என்கிறார்.

ஆரம்பத்தில் 1 Hair Stop மாதத்திற்கு 50 முதல் 100 ஆர்டர்களை பூர்த்தி செய்து வந்தது. இன்று இந்த பிராண்ட் பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. தினமும் சராசரியாக 150 ஆர்டர்கள் பெறுகின்றன.

2
“சரியான வாடிக்கையாளர்களைச் சென்றடைவது சவாலாக உள்ளது,” என்கிறார் ரிச்சா.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹேர் எக்ஸ்டென்ஷன் தயாரிப்புகள் துறையில் இந்த சகோதரிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களது முயற்சிக்கு எதுவும் தடையாக இருக்கவில்லை.

முறையாக வாங்கப்படும் அசல் தலைமுடி

1 Hair Stop பயன்படுத்தும் தலைமுடி அனைத்துமே மனிதர்களின் அசல் தலைமுடி. தென்னிந்திய கோவில்களில் இருந்து ஏலத்தில் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக திருப்பதி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை இந்நிறுவனம் வாங்குகிறது.

ரிச்சாவின் அப்பாவிற்கு சொந்தமான தொழிற்சாலையிலேயே தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“சொந்தமாக தொழிற்சாலை இயங்குவதால் மூன்றாம் தரப்பினரை சார்ந்திருக்கவேண்டிய நிலை இல்லை. இதுவே எங்கள் மிகப்பெரிய பலம். இதனால் தொடர்ந்து புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் முடிகிறது,” என்கிறார்.

மனிதர்களின் அசல் தலைமுடியைக் கொண்டு எக்ஸ்டென்ஷன் தயாரிக்கப்படுவதால் தலைமுடி ஒரே சீராகவும் மென்மையாகவும் இருக்கும். 1 Hair Stop தயாரிப்புகளை முறையாகப் பராமரித்துப் பயன்படுத்தினால் பத்தாண்டுகள் வரை நீடிக்கும் என்கிறார் ரிச்சா.

சந்தையில் Hair Original, Beaux போன்ற நிறுவனங்களுடன் 1 Hair Stop போட்டியிடுகிறது.

வருங்காலத் திட்டங்கள்

1 Hair Stop இந்தியர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிராண்ட் என்கிறார் ரிச்சா. சந்தையில் முதல் முறையாக செமி பர்மனெண்ட் எக்ஸ்டென்ஷன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

முதியவர்களுக்காக கருப்பு வெள்ளையில் ஹேர் எக்ஸ்டென்ஷன் வழங்கவும் இந்த சகோதரிகள் திட்டமிட்டிருக்கின்றனர்.

தயாரிப்புகள் இந்தியா முழுவதும் சென்றடைய மெட்ரோ நகரங்களில் உள்ள முக்கிய சலூன்களில் பி2பி விற்பனையை முடுக்கிவிடவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

“பல்வேறு தயாரிப்புகளையும் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் ஒரு முக்கிய ஸ்டோர் திறக்கவேண்டும் என்பதே எங்கள் கனவு,” என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா