மனைவி சாக்ஷி எழுதிய கதையில் தமிழ் படம் தயாரிக்கும் ‘தல’ தோனி!
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தமிழ் பட தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தமிழ் படத் தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி தோனி, அடுத்த ஆண்டே கூட டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகலாம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் தோனி திரையுலகம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சச்சினுக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படும் தோனிக்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் சென்னைக்கு அவருக்குமான தொடர்பு ஆழமானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகும் கூட அவர் மீதான அன்பும், பாசமும் சென்னை ரசிகர்களுக்கு துளியும் குறையவில்லை. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதைப் பற்றியும், தமிழ்நாட்டு மக்கள் தன் மீது வைத்துள்ள பாசம் குறித்தும் தோனியும் பல்வேறு இடங்களில் பேசியுள்ளார்.
விளையாட்டு உலகில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவரான தோனி, சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து திரையுலகிற்கு கால் பதித்தார். எம்.எஸ்.தோனி தனது “தோனி என்டர்டெயின்மென்ட்” நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமாக தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. வுமன்ஸ் டே அவுட் என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.
இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைப்பது குறித்து ’தோனி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம் நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் வணிகப்பிரிவு தலைவரான விகாஸ் ஹசிஜா பேசுகையில்,
தமிழ், தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னட படங்கள், வட மாநிலங்களிலும் சமமாக கொண்டாடப்படுவதால் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தன்னை மொழி சார்ந்த தயாரிப்பு நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள இந்திய பார்வையாளர்களை அர்த்தமுள்ள கதைகளின் மூலம் சென்றடைவதே எங்களின் முன்னுரிமை எங்களின் முதல் படம் தமிழில் தான் உருவாகும் என்றாலும், பல மொழிகளில் வெளியாகும்," என்றார்.
தமிழ் திரையுலகில் தோனி:
'தோனி என்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கதை சாக்ஷி தோனி எழுதியது என்றும், பேமிலி டிராமாவாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தோனி என்டர்டெய்ன்மெண்ட்'டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும் இந்த திரைப்படத்தை ’அதர்வா- தி ஆர்ஜின்' எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
“இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல் மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில்,
“சாக்ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன் இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்,” என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.
மேலும், இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது, எனத் தெரிவித்துள்ளார்.
'இதுதான் சரியான டைம், மிஸ் பண்ணிடாதீங்க' - மாணவர்களுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்!