‘என்னை விமர்சிப்பவர்களும் ட்விட்டரில் இருப்பார்கள், அதுதான் கருத்து சுதந்திரம்’ - எலான் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கியுள்ளார், மேலும் ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவருமே ட்விட்டரில் இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கியுள்ளார், மேலும், ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவருமே ட்விட்டரில் இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என உலக அளவில் புகழ் பெற்ற இரு நிறுவனங்களில் தலைவரும், உலகப் பணக்காரர்களிலேயே 269.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருபவருமான எலான் மஸ்க்கின் பார்வை கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் மீது பதிந்திருந்தது.
ட்விட்டர் பயனர்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கவில்லை என்று கூறி இருந்த எலான் மஸ்க், ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை சுமார் 2.89 பில்லியன் கொடுத்து வாங்கினார். இந்த அதிரடி நடவடிக்கையால் எலான் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறினார்.
இதனையடுத்து, நிர்வாகக்குழுவில் சேருவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்காத மஸ்க் ட்விட்டரின் 100 சதவிகித பங்குகளையும் $43 பில்லியன் வாங்க விரும்புவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனை ட்விட்டர் நிர்வாக குழு விரும்பாத போதும், பங்குதாரர்களிடம் இருந்து அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.
ட்விட்டர் நிர்வாகமும் பங்குகளை முழுவதுமாக விற்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தத் தொடங்கியதாகத் தெரிகிறது. ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரிகள் எலான் மஸ்க்கின் சலுகையை மறுபரிசீலனை செய்து கடந்த ஒரு வாரமாக இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த வார தொடக்கத்தில் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்விட்டரில் மேலும் பல அம்சங்களை அதிகரிக்கவும், அல்காரிதங்களை ஓப்பன் சோர்ஸாக மாற்றவும், அனைத்து மனிதர்களையும் அங்கீகரிக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ட்விட்டர் நிறுவனம் தனது தயாரிப்பு அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த அனைத்து வேலைகளையும் நிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டரின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி, ட்விட்டர் தனியார் நிறுவனமாக மாறக்கூடாது என்றும், அதன் ஆரம்ப கால தொழில்நுட்பத்தை மாற்றக்கூடாது என்றும் தெரிவித்தார். அதே சமயம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்துவது அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கருத்து கூறியிருந்தார்.
5 மாதங்களுக்கு முன்பு சிஇஓ பதவியை விட்டு விலகும் போதும் டோர்சியால் பராக் அக்ரவால் புதிய சிஇஓவாக பரிந்துரைக்கப்பட்டார். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், ஊழியர்களுடன் ஆன்லைன் டவுன் ஹால் மீட்டிங்கில் பேசிய பராக், நிறுவனத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும், மஸ்க் ட்விட்டரை வாங்குவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதும் குறித்தும் தனக்கு தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"ஒப்பந்தம் முடிந்ததும், ட்விட்டர் எந்த திசையை நோக்கிப் பயணிக்கும் என்பது குறித்து எங்களுக்கு எவ்வித யோசனையும் கிடையாது,” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன நடந்தாலும், ட்விட்டரில் அக்ரவாலின் ஐந்து மாதங்கள் அவரது தொழில் வாழ்க்கையில் மிகவும் லாபகரமான ஐந்து மாதங்களாக இருக்கலாம். அக்ரவால் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால், அவரது முழு ஆண்டு சம்பளம் மற்றும் அவரது பங்கு விருப்பங்களை விரைவுபடுத்துவது உட்பட, $42 மில்லியன் வரை செலுத்த வேண்டியிருக்கும்.
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்காவின் அரசியல் ஆய்வாளர்கள், மஸ்க் ட்விட்டரை வாங்குவதன் மூலமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை மீண்டும் ட்விட்டருக்கு வரவேற்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 6ல் வெள்ளை மாளிகை முன்பு நடந்த கலவரத்தை ஆதரித்து கருத்து பதிவிட்டதால் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், ட்ரம்பை மீண்டும் ட்விட்டருக்குள் அனுமதிப்பது சுதந்திரமான பேச்சுக்கு வித்தாக அமையும் என எலான் மஸ்க் நினைப்பதாக கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் - தருத் மல்கோத்ரா | தமிழில் - கனிமொழி