50 கோடி ஃபாலோயர்ஸ்: இன்ஸ்டாவில் இமாலய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

By Kani Mozhi
November 23, 2022, Updated on : Wed Nov 23 2022 04:01:31 GMT+0000
50 கோடி ஃபாலோயர்ஸ்: இன்ஸ்டாவில் இமாலய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவன் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 50 கோடி பின் தொடர்பவர்களைக் கொண்ட முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவன் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 50 கோடி பின் தொடர்பவர்களைக் கொண்ட முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவான FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டி நேற்று தொடங்கப்பட்டது. கத்தாரில் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டியை கால்பந்து ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த போட்டியில் உலக கால்பந்து ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி H குரூப்பில் விளையாட உள்ளது.


சமீபத்தில் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக க்ளப் அணிக்காக 700 கோல்களை அடித்து புதிய மைல் கல்லை எட்டியிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது சோசியல் மீடியாவில் யாருமே எளிதில் படைக்க முடியாத இமாலய சாதனையை படைத்துள்ளார்.

Cristiano Ronaldo

சர்ச்சையில் சிக்கிய ரொனால்டோ:

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரொனால்டோ, அதில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளரான எரிக் டென் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.


எரிக் டென் தன்னைப் பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து வருவதாகவும், அவர் விளையாட்டு கெரியர் முடிந்த பிறகும் நான் இன்னும் விளையாடிக் கொண்டிருப்பதால் அவர் அப்படி பேசுகிறார் என்றும் பேசியது சர்ச்சையை உருவாக்கியது.


இதனால் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளான ரொனால்டோவை பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். ஆனால், எதற்கும் அசாராத ரொனால்டோ,

“எனது வாழ்க்கையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. எனக்கு எப்போது தேவையோ அப்போது பேசுவேன். எனது அணியினருக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும்,” என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இமாலய சாதனை:

கால்பந்து விளையாட்டு வீரரும், போர்ச்சுக்கல் அணியின் சூப்பர் ஸ்டாருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்று இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் பின்தொடர்பவர்களை அடைந்த முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Cristiano Ronaldo
இன்ஸ்டாகிராம் தவிர, மற்ற சோசியல் மீடியாக்களிலும் ரொனால்டோ அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலமான நபராக வலம் வருகிறார். ட்விட்டரில் 105 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும் (10.5 கோடி) ஃபேஸ்புக்கில் 154 மில்லியனுக்கும் (15.4 கோடி) அதிகமான பின்தொடர்பவர்களையும் உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ரொனால்டோவும் உள்ளார். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் 2.3 மில்லியன் டாலர் பெறுகிறார்.


இன்ஸ்டாகிராமில் 37.6 கோடி பின்தொடர்பவர்களுடன் லியோனல் மெஸ்சி இரண்டாவது இடத்தில் உள்ளார். விளையாட்டு பிரபலங்களில் 3வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, ஒரு பதிவிற்கு 1.7 மில்லியன் டாலர் வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.


தொகுப்பு - கனிமொழி

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற