மண் இல்லாமல் வீட்டிலே காய்கறிகள் வளர்க்க உதவும் ‘இயந்திரம்’
மண்ணைப் பயன்படுத்தாமல் காய்கறிகளையும் பூக்களையும் வீட்டில் வளர்க்க உதவும் தொழில்நுட்பம்.
டெல்லியைச் சேர்ந்த புதிய நிறுவனம் ‘அக்ரோ20’ ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மண்ணைப் பயன்படுத்தாமல் காய்கறிகளையும் பூக்களையும் வீட்டில் வளர்க்க உதவிகரமாக இருக்கும் நுட்பம். இந்த தொழில் நுட்பத்தினால் நீர் வீணடிக்கப்படுவதில்லை.
இன்றைய காலகட்டத்தில், பிஸியான வாழ்க்கை முறை மற்றும் இடவசதி இல்லாததால், வீட்டில் கரிம (ஆர்கானிக்) காய்கறிகளை உற்பத்தி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும் மறுபுறம் சந்தையில் அதிக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய காய்கறிகளே கிடைப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது. அதே நேரத்தில் பொதுவான சந்தையில் கிடைக்கும் கரிம (ஆர்கானிக்) காய்கறிகளின் விலை நடுத்தர மக்கள் வாங்கமுடியாத அளவில் உள்ளது.
மண் இல்லாமல் இயந்திர விவசாயம்
இந்த பிரச்சினைக்கான தீர்வை டெல்லியை மையமாகக் கொண்ட அக்ரிடெக் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘அக்ரோ20’ ‘agri20' கொண்டு வந்துள்ளது. தொடக்க நிறுவனமான இது, ஒரு தனித்துவமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மண்ணற்ற தாவரங்களை வளர்க்கும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் Ai, இணையம் மற்றும் இயந்திரக் கற்றல் பற்றிய பேச்சு இருக்கும்போது, இந்த நேரத்தில், இந்த தொழில்நுட்பமும் மக்களிடையே தனக்கான இடத்தை உருவாக்க முழுமையாகத் தயாராக உள்ளது. இந்தத் தொடக்க நிறுவனம் இதை செயல்படுத்த ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது, இதன் உதவியுடன் மண்ணற்ற காய்கறிகளை வீட்டிலேயே மிக எளிதாக நாம் வளர்க்க முடியும்.
ET உடன் கலந்துரையாடிய நிறுவனத்தின் நிறுவனர் யஷ் வியாஸ் கூறியதாவது,
"ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களுக்கு மண் இல்லாத திறமையான தோட்டங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இதன் கீழ் அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் ரசாயனம் அல்லாத தாவரங்களை வளர்க்க முடியும்," என்றார்.
ஹைட்ரோபோனிக்ஸ் என்பது ஒரு நுட்பமாகும், இதன் மூலம் மண்ணற்ற விவசாயம் செய்யப்படுகிறது. இந்த விவசாயம் நீர் மற்றும் அத்தியாவசியத் தாதுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விவசாய தொழில்நுட்பங்களில் ஒன்றாகும்.
எளிதாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை மிக வேகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நுட்பத்தின் உதவியுடன், தண்ணீர் வீணடிக்கப்படுவதில்லை. இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும்.
300 முன்பதிவுகளைப் பெற்றுள்ளனர்
வன்பொருள் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான அமைப்புகளின் உதவியுடன், 'ஆக்ரோ 2O' செடி வளர்ப்பு செயல்முறையை முழுமையாக தானே செயல்படும்படி செய்தது. நிறுவனத்தின் நிறுவனர் யஷ் வியாஸ் கூறுவதாவது,
“இந்த இயந்திரத்தை வாங்க கடந்த மூன்று மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம்,” என்றார்.
நகரங்களில் குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வாழும் மக்களுக்கு, கரிம வேளாண்மையை விரும்பியும், ஆனால் பயிரிட்டு வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு, இந்த சாதனம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதை நிரூபிக்கும்.
தகவல் உதவி: ஹிந்தி யுவர்ஸ்டோரி