'Meta Threads' என்றால் என்ன? அதனைப் பயன்படுத்துவது எப்படி?
ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் புதிய ஆப் ஒன்றை கொண்டு வந்துள்ளது. 'த்ரெட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் அறிமுகத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அள்ளியுள்ளது. இப்போது இந்த செயலியை எவ்வாறு பதிவிறக்குவது, பயன்படுத்துவது என விரிவாக பார்க்கலாம்...
ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் புதிய ஆப் ஒன்றை கொண்டு வந்துள்ளது. 'த்ரெட்ஸ்' (Threads) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் அறிமுகத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அள்ளியுள்ளது.
இப்போது இந்த செயலியை எவ்வாறு பதிவிறக்குவது, பயன்படுத்துவது என விரிவாக பார்க்கலாம்...
Threads பயன்படுத்துவது எப்படி?
எலான் மஸ்க்கின் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டருக்குப் போட்டியாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'த்ரெட்ஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த புதிய ஆப் இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயலியை அறிமுகப்படுத்திய முதல் இரண்டு மணி நேரத்திற்குள் 20 லட்சம் பேர் இதில் கணக்கு துவங்கியுள்ளனர். அதன்பிறகு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் 30 லட்சம் பேர் கணக்குகளைத் திறந்தனர், மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது. மேலும், 7 மணி நேரத்தில் 10 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டன என்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.
தற்போது, 'த்ரெட்ஸ்' என்ற ஆப்ஸ் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது
த்ரெட்ஸ் பதிவிறக்குவது எப்படி?
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் குழுவால் உருவாக்கப்பட்ட, ‘மெட்டா த்ரெட்ஸ்' எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். Apple App Store அல்லது Google Play Store-யில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டாகிராம் கணக்கை கொண்டு லாகின் செய்ய வேண்டும். உங்களிடம் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருந்தால் அதனை லாகின் செய்தாலே போதுமானது.
ட்விட்டரில் ஒரு பதிவில் 280 எழுத்துக்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், த்ரெட்ஸில் 500 எழுத்துக்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 நிமிடங்கள் வரையிலான இணைப்புகள், படங்கள் அல்லது வீடியோக்களை பகிரலாம். த்ரெட்ஸில் பதிவிடும் கன்டென்ட்டை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அல்லது பிற சோசியல் மீடியாக்களுக்கு எளிதாக பகிர முடியும்.
'த்ரெட்ஸ்' செயல்பாடுகள் என்ன?
மெட்டா இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு அல்லது மல்டி மீடியா தளமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மக்கள் கருத்துக்களை பகிருவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
- த்ரெட்ஸில் பதிவுகளை பதிவிடுவது மட்டுமின்றி, உங்கள் பதிவிற்கு யாரெல்லாம் கமெண்ட் செய்யலாம் என்பதையும் பயனர்களே கட்டுப்படுத்த முடியும்.
- த்ரெட்ஸ் பதிவிற்கு மேல் புறம் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தினால், புரோபலை பின்தொடருவது, தடுப்பது, புகார் அளிப்பது போன்ற விருப்பங்கள் தோன்றும்.
- ட்விட்டரைப் போலவே த்ரெட்ஸில் பதிவிடப்படும் கருத்துக்களும், கமெண்ட், ஷேர், லைக், ரீபோஸ்ட் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ப்ளூ டிக் பெற்ற பயனர்கள் தினமும் 10,000 பதிவுகளையும், ப்ளூ டிக் இல்லாத பயனர்கள் 1000 பதிவுகளையும் பகிரலாம் என்ற எலான் மஸ்கின் பாகுபாடான அறிப்புகள், ட்விட்டரில் சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள் வெளியேறக் காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், மெட்டா த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது வர்த்தக ரீதியாக அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய 'Meta Threads' - அப்படி என்ன இருக்கு இதுல?