ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக சேவை அறிமுகம் செய்தது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி!
கம்பெனிகள் பதிவு, விதிகளை பின்பற்றுவது, லாஜிஸ்டிக்ஸ், பணியாளர்கள் மற்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சேவையாக வழங்கும் வகையில் ஐசிஐசிஐ வங்கி பல்வேறு வெண்டர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மனதில் கொண்டு, ஐசிஐசிஐ வங்கி, iStartup 2.0 எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஐசிஐஐசி வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று விதமான நடப்பு கணக்கு வசதியை பெறுவார்கள். இவற்றின் கீழ், புரோமட்டர்களுக்கான பிரிமியம் சேமிப்புக் கணக்கு, ஊழியர்களுக்கான சம்பளக் கணக்கு, பிரத்யேகமான உறவுகள் மேலாளர் ஆகியவை வழங்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், கம்பெனிகள் பதிவு, விதிகளைப் பின்பற்றுவது, லாஜிஸ்டிக்ஸ், பணியாளர்கள் மற்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சேவையாக வழங்கும் வகையில் ஐசிஐசிஐ வங்கி பல்வேறு வெண்டர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி ஏற்கனவே நடப்பு கணக்கு உள்ளிட்ட வசதி கொண்ட சேவையை ஸ்டார்ட் அப்களுக்கு வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளும் ஸ்டார்ட் அப்களுக்கான பிரத்யேக சேவைகளை கொண்டுள்ளன.
இந்த வங்கிக் கணக்கிற்கான கட்டணம் பற்றி கேட்கப்பட்ட போது, சுய வேலைவாய்ப்பு பிரிவின் தலைவரான பங்கஜ் காட்கில், நடப்பு கணக்கிற்கு தேவையான காலாண்டு சராசரி கையிருப்பு ஓராண்டுக்கு ரத்து செயப்படும் என தெரிவித்தார்.
கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தில் ஜூலை மாதம் 20,000 ஸ்டார்ட் அப்’கள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆகஸ்ட்டில் இது அதிகரித்ததாகவும், இந்த மாதம் இந்த போக்கு தொடர்வதாகவும், இதன் காரணமாக வங்கி இந்த புதிய சேவையை துவக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வங்கி ஏற்கனவே தனது ஸ்டார்ட் அப் சேவை கீழ், எண்ணற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சேவை அளித்து வருகிறது. 2010க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட 8.5 லட்சம் ஸ்டார்ட் அப்’களுக்கு சேவை அளிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பங்குதாரர் நிறுவனங்கள், பொது நிறுவனன்கள், லிமிடெட் நிறுவனங்கள் உள்ளிட்ட புதிய நிறுவனங்கள் (10 ஆண்டுகள் ஆனவை), நடப்பு கணக்கு பெறலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
கடன் வசதியும் உள்ளிட்ட இந்த புதிய சேவை, முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கும் பிரிவில் ஸ்டார்ட் அப்’களையும் உள்ளடக்கிய அண்மை மாற்றம் காரணமாக உருவாக்கப்பட்டதா என்று கேட்கப்பட்ட போது, வங்கி நீண்ட காலமாக இது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி : பிடிஐ