பிரபல ‘ரீல்ஸ்’ கிரியேட்டர்கள் ரசிகர்களுடன் சங்கமம் - Meta கிரியேட்டர் தின விழா கொண்டாட்டம்!
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களை சந்தித்து உரையாட வாய்ப்பை ஏற்படுத்தித் தர ‘மெட்டா’ சென்னையில் பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
Meta, வியாழன் அன்று சென்னையில் தனது ’படைப்பாளர் தினம்’ ’Creator Day' நிகழ்வை நடத்தியது. இதில், படைப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, உரையாடி, ஒன்றிணைந்து புதிய கற்றலை பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“இரண்டு வருடங்கள் ஜூம் அழைப்புகளில் இந்த கிரியேட்டர்கள் அனைவரையும் இணைத்து, அவர்கள் உருவாக்கும் நம்பமுடியாத உள்ளடக்கம் பற்றி தெரிந்து கொண்டோம். அவர்களை கொண்டாடுவதற்கும், ஒருங்கிணைக்கவும், இதுவே சரியான நேரம் என முடிவெடுத்தோம்,” என ஃபேஸ்புக் இந்தியாவின் (மெட்டா) பார்ட்னர்ஷிப்களின் இயக்குனரும் தலைவருமான மணீஷ் சோப்ரா யுவர்ஸ்டோரியிடம் கூறினார் .
இந்த கிரியேட்டர் சந்திப்பு நிகழ்வு மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் டெல்லி ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ரீல்ஸ் உருவாக்கும் கிரியேட்டர்களை, அவர்களின் ரசிகர்கள் சந்திக்கும் ஒரு நிகழ்வாகவும் இந்த விழா அமைகிறது. இதில்,
தங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் உரையாடவும் மெட்டா ஒரு வாய்ப்பை வழங்கியது இதுவே முதல் முறையாகும். இது அவர்களுக்குள் உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு தனித்துவமான சந்திப்பு. இந்த பணியின் மூலம், நாங்களும் அவர்களுடன் இணைய முடியும், மேலும் அவர்கள் ஒருவருக்கொருவரை இணைய ஒத்துழைக்கிறோம்," என்று மணீஷ் கூறினார்.
Reels - Metaவின் முக்கிய வருங்காலம்
ரீல்ஸ் (Reels) 2020ல் தொடங்கப்பட்டது மற்றும் அதன் பின்னர் மெட்டாவில் இது ஒரு பெரிய வளர்ச்சியைக் கண்டது.
“ரீல்ஸ் மெட்டாவுக்கான மிக முக்கியமான தளமாகும். ஃபேஸ்புக்கில் ரீல்ஸ், இன்ஸ்டாகிராமில் ரீல்கள் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றன, இது எங்களுக்கு ஒரு முக்கியமான தளமாகும், ”என்று மணீஷ் கூறினார்.
வீடியோ ஒரு வடிவமாக பயனர்கள் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக உள்ளது, என்று கூறிய அவர், 2022-ல் 200 மில்லியன் மக்கள் தினமும் 45 நிமிடங்கள் ஷார்ட் வீடியோக்கள் பார்ப்பதாக தரவுகள் தெரிவிக்கிறது என்றார் மணீஷ்.
சென்னையில் நடைப்பெற்ற ‘கிரியேட்டர் டே’ நிகழ்வில் பிரபல படைப்பாளர்கள் மதன் கௌரி, ஆதித்யா ஆர்கே, ரிதா தரனா, மாபு ஷெரிப், ஓய் கேமிங் மற்றும் சைதன்யா பிரகாஷ் உட்பட சுமார் 250 படைப்பாளிகள் கலந்து கொண்டனர். ஜோஹா சனோஃபர் மற்றும் கிஷேன் தாஸ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
நடிகர் தமன்னா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நடனமாடி கூட்டத்தை உற்சாகப்படுத்தினார். கிரியேட்டர்களிடம் பேசிய தமன்னா,
“இன்று கலாச்சாரத்தை படைப்பாளிகள் தங்கள் திறமை மூலம் வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் கடின உழைப்பு அவர்களின் ரீல்களில் தெரிகிறது. நான் அவர்களிடமிருந்து நிறைய உத்வேகத்தைப் பெறுகிறேன். நானும் விரைவில் என் ரீல்ஸ் மூலம் சுவாரஸ்யமான ஒன்றை விரைவில் கொண்டு வருவேன் என்று நம்புகிறேன்,” என்றார்.
இந்தியா முழுவதும் உள்ள படைப்பாளர்களை அங்கீகரித்ததற்காகவும், இங்கு உங்கள் அனைவரையும் சந்திக்க வாய்ப்பளித்ததற்காக மெட்டாவுக்கு நன்றி தெரிவித்தார் தமன்னா.
பாடகர், மற்றும் ரீல்ஸ் புகழ் ஆதித்யா ஆர்கே கூறினார் தனது கிரியேட்டர் பயணம் பற்றி பகிர்கையில், ”
”மெட்டாவின் தளங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபலமாக மாற அல்லது அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகின்றன. இது எல்லா தலைமுறையினருக்கும் கிடைக்காத வாய்ப்பு, நான் அதில் ஒரு பகுதியாக இருப்பது என் அதிர்ஷ்டம்,” என்றார்.
மலையாள நடனக் கலைஞர் மற்றும் ரீல்ஸ் புகழ் 19 வயதே ஆன சைதன்யா பிரகாஷ் இவ்விழா பற்றி பகிர்கையில்,
“நான் இவ்வளவு இளம் வயதில் எனது திறமையை பல லட்சம் மக்களுக்கு கொண்டு போக ரீல்ஸ் எனக்கு உதவியது. பெரிய திரையில் நடிகை ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவு தற்போது இதன் மூலம் நினைவாகி, எனது முதல் மலையாள திரைப்படம் வெளிவர இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,” என்றார்.
கரூரைச் சேர்ந்த கீத்தீஸ், கோவையில் பொறியியல் படிப்பை பாதியில் விட்டு, சென்னை வந்து தன் சினிமா கனவை துரத்திக்கொண்டிருந்தார். கேமிங்கில் ஆர்வம் இருந்ததால், ‘oigaming’ என்று இன்ஸ்டா மூலம் கேமிங் வீடியோ, ரீல்கள் என பதிவிட்டு கிரியேட்டராக பிரபலமானது பற்றி பகிர்ந்து கொண்டார்.
“நான் சென்னை வந்தபோது தெரு தெருவாக வேலையின்றி சுற்றினேன். டெலிவரி வேலை செய்தேன். பின்னர், ஒரு படைப்பாளியாகி ரீல்ஸ் போடத்தொடங்கினேன். தொடர்ந்து மனம் தளராமல் வீடியோ கிரியேட் செய்தால் உங்களை மக்கள் அடையாளம் காணுவார்கள். அப்படித்தான் நானும் இன்று மெட்டா-வின் கிரியேட்டர் தூதுவராக இங்கு நிற்கிறேன்,” என்று தன் வளர்ச்சியை பெருமையுடனு கூறினார்.
'அரபிக் குத்து' பாடலின் ரீல்ஸ் உலகம் முழுவதும் பிரபலமாகிய விதம், மதன் கவுரி போன்ற படைப்பாளிகள் எப்படி வளர்ந்து தனக்கான ரசிகர் சமூகங்களை உருவாக்கியுள்ளனர், ஜி.வி. பிரகாஷ் போன்ற கலைஞர்களின் இசை எப்படி ரீல்ஸில் ட்ரெண்ட் செய்கிறது என்பதை மெட்டா ஹைலைட் செய்தது.
அடுத்த படைப்பாளர் தினம் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்டா குழு தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, படைப்பாளர்களின் தேவைகளை பரிசோதித்து வருகிறது.
அதே சமயம், பயனர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுவதுடன், அவர்கள் செலவழிக்கும் நேரத்தையும் ஆற்றலையும் உறுதிசெய்து, ரீல்களை உட்கொள்வதை உறுதி செய்வதாக மனிஷ் கூறினார்.
‘நடிகர்களாக இருந்தாலும் யூட்யூப் தளத்தில் கிரியேட்டராக இருந்தால் தான் ஜெயிக்க முடியும்’ - மதன் கெளரி