‘பால் கலப்படத்தை 30 விநாடிகளில் கண்டுபிடிக்கும் கருவி வந்தாச்சு’ - ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!
பாலில் நடக்கும் கலப்படத்தை எளிமையாக கண்டறியும் விதமாக 3டி காகித அடிப்படையிலான கருவி கண்டறியப்பட்டுள்ளது.
பாலில் நடக்கும் கலப்படத்தை எளிமையாகக் கண்டறியும் விதமாக 3டி காகித அடிப்படையிலான கருவி கண்டறியப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IITM) தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், 9,500 மாணவர்களுடன் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்., பிஎச்.டி., போன்ற பட்டப்படிப்புகளோடு, மக்களுக்கு பயன்படக்கூடிய கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் புதுமைக் கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசையில் (ARIIA) ' சிறந்த புத்தாக்க கல்வி நிறுவனமாக 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி:
உணவுப்பொருட்களில் செய்யக்கூடிய கலப்படமானது மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக பாலில் மேற்கொள்ளப்படும் கலப்படம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரது உடலுக்கும் பெரும் தீங்குவிளைவிக்கிறது.
பாலில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டறிய லேக்டோ மீட்டர் பயன்படுகிறது. பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம். ஆனால், பாலில் ரசாயனம், சோப்புத்தூள் போன்றவற்றை கலக்கப்படுவதை கண்டறிவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
எனவே தான், பாலில் யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதை கண்டறியும் விதமாக ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் எளிமையான மற்றும் புதுமையான கருவி ஒன்றினைக் கண்டறிந்துள்ளனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பால் மிக முக்கிய உணவுகளில் ஒன்றாகும். ஆனால், அதுதான் உலகிலேயே அதிக கலப்பட உணவுப் பொருளாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கலப்படப் பாலை அருந்துவதால் சிறுநீரகப் பிரச்சனைகள், சிசுக்கள் உயிரிழப்பு, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற மருத்துவப் பிரச்சனைகள் மட்டுமின்றி புற்றுநோய் பாதிப்பும்
பால் கலப்படம் பற்றி கவலையில்லை:
பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும்.
பாலின் தூய்மையைக் கண்டறியும் வழக்கமான ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைக்கு கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு உள்ள இந்தக்கருவியின் மூலம் குடிநீர், பழச்சாறு, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலப்படம் ஏதேனும் உள்ளதா எனப் பரிசோதனை செய்ய முடியும்.
எந்தவொரு திரவத்திலும் கலப்படத்தை சோதிக்க ஒரேயொரு மில்லி லிட்டர் மாதிரியே போதுமானது.
ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரான டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா கூறுகையில்,
“3டி காகித அடிப்படையிலான இந்த நுண்திரவக் கருவி (microfluidic device) மேல் மற்றும் கீழ் உறைகளையும், சாண்ட்விச் அமைப்பிலான நடுத்தர அடுக்கையும் கொண்டதாகும். அடர்த்தியான திரவத்தையும் சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியை 3டி வடிவமைப்பு சரியாகச் செய்கிறது. காகிதம் ரீஏஜெண்ட்களுடன் வினைபுரிந்து உலர வைக்கிறது. இரு காகித அடுக்குகளும் உலர்ந்தபின் இரு பக்கங்களிலும் ஒட்டிக் கொள்வதுடன், உறைகளும் இருபக்க டேப்புடன் ஒட்டிக் கொள்கின்றன. இந்த வடிவமைப்பில் நான்காம் கிரேடு வாட்மேன் ஃபில்டர் பேப்பர் பயன்படுத்தப்படுவதால், திரவ ஓட்டத்திற்கு உதவுவதுடன், ரீஏஜெண்ட்களை அதிகளவில் சேமித்துக் கொள்ள வைக்கிறது," எனக் குறிப்பிட்டார்.
கருவி எவ்வாறு செயல்படுகிறது?
3டி காகிதமானது ரீஏஜெண்ட்களும் காய்ச்சி வடிகட்டிய நீர் (distilled water) அல்லது எத்தனாலுடன் அதனதன் கரையும் தன்மைக்கேற்ப கரைந்துவிடுகின்றன.
நிறமானிக்கண்டறிதல் நுட்பங்களைப் பயன்படுத்தி, கலப்படப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு திரவ மாதிரிகளால் கண்டறியப்படுகின்றன.
குறிப்பிட்ட கலப்படத்துடன் மட்டுமே வினைபுரியும் ரீஏஜெண்ட், எந்த பால் மூலப் பொருளுடனும் வினைபுரிவதில்லை என்பதை நம்மால் அனுமானிக்க முடியும். ஆகையால், திரவ உணவின் பாதுகாப்பையும் இந்தப் பகுப்பாய்வுக் கருவியால் கண்காணிக்கலாம்.
‘20 ஆண்டுகளில் கட்டிடங்களால் அதிக கார்பன் வெளிப்பாடு ஏற்படும்’ - ஐஐடி மெட்ராஸ் ஆய்வில் தகவல்!