புதிய அமைச்சரவை விரிவாக்கம்: யார் யாருக்கு என்னென்ன துறை ஒதுக்கீடு: முழு விவரம்!
மாநிலங்கள் வாரியாக யாருக்கு அதிக பிரதிநிதித்துவம்?!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடந்தது. அதன்படி, புதிய அமைச்சர்களாக 43 பேர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் பதவியேற்றனர்.
இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். மத்திய பிரதேச பிரபலம் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமசந்திர பிரசாத் சிங், பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி, அஜய் பட், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி, அனுபமா தேவி, அஷ்வினி வைஷ்ணவ், சாந்தனு தாக்குர், பிஸ்வேஸ்வார் துடு, கவுசல் கிஷோர், ஏ.நாராயணசாமி, அன்னபூர்ணா தேவி, பி.எல். வர்மா போன்ற பலர் பதவியேற்றனர்.
புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்கள் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களுக்கும் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடிக்கு கூடுதல் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு விவரங்களை இங்கே காணலாம்!
பிரதமர் மோடி இனி பணியாளர், குறைதீர், ஓய்வூதியம்; அணுசக்தி, விண்வெளி, முக்கியக் கொள்கை விவகாரங்கள், பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளை கவனித்து கொள்வார். இதுபோக அமைச்சரவையில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளே ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் பல்வேறு பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்னவுக்கு ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம் & தொலைத்தொடர்பு ஆகிய இரண்டு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக ரயில்வே துறையை பியூஸ் கோயல் கவனித்து வந்தார். தற்போது பியூஸ் கோயலுக்கு வர்த்தகத்துறை உடன், நுகர்வோர் மற்றும் உணவுநலன் மற்றும் ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டு தான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வித்திட்ட ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் ரசாயணம் & உர அமைச்சகம் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் அமைச்சராக மூத்த தலைவர் மன்சுக் மாண்ட்வியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். பர்சோத்தம் ரூபாலாவுக்கு மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஆகியிருக்கும் எல். முருகனுக்கு மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை; தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட முழு விவரம்!
கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர்கள்!
* ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை
* அமித் ஷா - உள்துறை, கூட்டுறவுத் துறை
* நிதின் ஜெய்ராம் கட்கரி - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை
* நிர்மலா சீதாராமன் - நிதி, கார்பரேட் விவகாரங்கள்
* நரேந்திர சிங் தோமர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
* டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் - வெளியுறவு விவகாரங்கள்
* அர்ஜுன் முண்டா - பழங்குடியின விவகாரங்கள்
* ஸ்மிரிதி இரானி - பெண்கள், குழந்தைகள் நலத்துறை
* பியூஷ் கோயல் - வர்த்தகம், தொழிற்துறை; நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத்துறை; ஜவுளித்துறை
* தர்மேந்திர பிரதான் - கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை
* பிரஹ்லாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி, கனிம வளம்
* நாராயண் தாட்டு ராணே - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை
* சர்பானந்த சோனோவால் - துறைமுகங்கள், கப்பல், நீர்வழித்துறை, ஆயுஷ்
* முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் விவகாரங்கள்
* விரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
* கிரிராஜ் சிங் - கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
* ஜோதிராதித்ய சிந்தியா - சிவில் விமான போக்குவரத்து
* ராம்சந்திர பிரசாத் சிங் - எஃகு
* அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே; தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை
* பஷுபதி குமார் பராஸ் - உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள்
* கஜேந்திர சிங் ஷெகாவத் - ஜல சக்தி
* கிரெண் ரிஜிஜு - சட்டம் மற்றும் நீதி
* ராஜ் குமார் சிங் - மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை
* ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள்
* மன்சூக் மாண்டவியா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரத்துறை
* பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை
* மகேந்திர நாத் பாண்டே - கனரக தொழிற்சாலைகள் துறை
* பர்ஷோத்தம் ரூபாலா - மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை
* கிஷ்ண் ரெட்டி - கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு
* அனுராக் சிங் தாக்குர் - தகவல் ஒலிபரப்புத்துறை; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்கள்!
* ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம் (தனிப்பொறுப்பு); திட்டத்துறை (தனிப்பொறுப்பு); கார்பரேட் விவகாரங்கள்
* ஜிதேந்திர சிங் - அறிவியல் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; பணியாளர், மக்கள் குறை தீர், ஓய்வூதியம்; அணுசக்தி, விண்வெளி
மத்திய இணை அமைச்சர்கள்!
* ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் - துறைமுகங்கள், கப்பல், நீர்வழி; சுற்றுலா
* ஃபகன்சிங் குலஸ்தே - எஃகு; கிராமப்புற வளர்ச்சி
* பிரஹ்லாத் சிங் படேல் - ஜல சக்தி; உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள்
* அஷ்வினி குமார் செளபே - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்; சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்
* அர்ஜுன் ராம் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரங்கள்; கலாசாரத்துறை
* ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான போக்குவரத்து
* கிரிஷண் பால் - மின்சாரம் மற்றும் கனரக தொழிற்சாலைகள்
* தன்வே ராவ்சாஹேப் தாதாராவ் - ரயில்வே; நிலக்கரி, கனிம வளங்கள் துறை
* ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
* சாத்வி நிரஞ்சன் ஜோதி - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்; கிராமப்புற வளர்ச்சித்துறை
* சஞ்சீவ் குமார் பல்யான் - மீன் வளம், கால்நடை பராமரிப்புத்துறை
* நித்யானந்த் ராய் - உள்துறை விவகாரங்கள்
* பங்கஜ் செளத்ரி - நிதித்துறை
* அனுப்ரியா சிங் படேல் - வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை
* பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் - சட்டம் மற்றும் நீதித்துறை
* ராஜீவ் சந்திரசேகர் - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை
* ஷோபா கரண்ட்லஜே - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
* பானு பிரதாப் சிங் வெர்மா - குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை
* தர்ஷணா விக்ரம் ஜார்தோஷ் - ஜவுளித்துறை, ரயில்வே துறை
* வி. முரளிதரன் - வெளியுறவு விவகாரங்கள்: நாடாளுமன்ற விவகாரங்கள்
* மீனாக்ஷி லேகி - வெளியுறவு விவகாரங்கள், கலாசாரத்துறை
* சோம் பர்காஷ் - வர்த்தகம் மற்றும் தொழிற்துறை
* ரேணுகா சிங் சாருதா - பழங்குடியின விவகாரங்கள்
* ராமேர்வர் டேலி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
* கைலாஷ் செளத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
* அன்னபூர்ண தேவி - கல்வித்துறை
* ஏ. நாராயணசுவாமி - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
* கெளஷல் கிஷோர் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்
* அஜய் பட் - பாதுகாப்பு; சுற்றுலா துறை
* பி.எல். வெர்மா - வடகிழக்கு பிராந்திய மேம்பாடு; கூட்டுறவுத்துறை
* அஜய் குமார் - உள்துறை விவகாரங்கள்
* தேவ்சின்ஹ் செளஹான் - தொலைத்தொடர்புத்துறை
* பக்வந்த் குபா - புதிய மற்றும் புதிப்பிக்கவல்ல எரிசக்தி; ரசாயனம் மற்றும் உரத்துறை
* கபில் மோரேஸ்வர் பாட்டீல் - பஞ்சாயத்து ராஜ்
* பிரதிமா பூமிக் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
* சுபாஸ் சர்கார் - கல்வித்துறை
* பக்வத் கிஷண் ராவ் கரத் - நிதித்துறை
* ராஜ்குமார் ரஞ்சன் சிங் - வெளியுறவு விவகாரங்கள்; கல்வித்துறை
* பாரதி பிரவீண் பவார் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
* பிஷேஸ்வர் துடு - பழங்குடியின விவகாரங்கள்; ஜல சக்தி
* ஷாந்தனு தாக்குர் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை
* முஞ்சபாரா மஹேந்திரபாய் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை; ஆயுஷ்
* ஜான் பார்லா - சிறுபான்மையினர் விவகாரங்கள்
* எல். முருகன் - மீன் வளம், கால்நடை பராமரிப்பு,பால் பண்ணை; தகவல் ஒலிபரப்புத்துறை
* நிஷிஷ் ப்ராமனிக் - உள்துறை விவகாரங்கள்; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
இதற்கிடையே, நேற்றைய விரிவாக்கத்தில் மாநிலங்கள் வாரியாக யாருக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுளள்து என்றால், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 7 பேர், அடுத்ததாக குஜராத்தில் இருந்து 5 பேர், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து தலா 4 பேருக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனுபிரியா சிங் படேல், ஷோபா கரண்லாஜே, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாட்சி லேகி, அன்னபூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், பாரதி பிரவின் பவார் என்ற 7 பெண்களுக்கும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.