2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை!

பத்து எண்ணிக்கை வரையிலான இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை என பாரத ஸ்டேட் பேங்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை!

Monday May 22, 2023,

2 min Read

பத்து எண்ணிக்கை வரையிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை என பாரத ஸ்டேட் பேங்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரூ.2000 நோட்டுகள் வாபஸ்:

கடந்த 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும்.

இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை எனக் கருதப்படுகிறது. எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா முடிவெடுத்துள்ளது.

SBI

மே மாதம் 23ம் தேதி முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கருத்துப்படி, இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது சிறு வணிகர்களின் வர்த்தகத்தை பாதிக்காது, ஆனால், 2,000 ரூபாய் நோட்டுகளை பெரிய அளவில் சேமித்து வைத்திருக்கும் பெரிய மற்றும் வசதியானவர்களை இது நிச்சயமாக பாதிக்கும். இந்த நடவடிக்கையால் வர்த்தக நடவடிக்கைகளில் எந்த இடையூறும் ஏற்படாது என எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.

2,000 ரூபாய் மாற்ற ஆவணங்கள் தேவையா?

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ டிரைவிங் லைசன்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகள் தேவை என்ற தகவல்கள் பரவி வந்தன.

இதுதொடர்பாக அனைத்து தலைமை அலுவலகங்களில் உள்ள பொது மேலாளர்களுக்கும் பாரத ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில்,

“ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக்கொள்ள எந்த விதமான ஆவணமோ, படிவமோ தேவையில்லை,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, பத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற எந்தவிதமான அடையாள அட்டையோ அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவமோ தேவையில்லை என உறுதிபடுத்தியுள்ளது.

மேலும், எவ்வித சிரமமும் இன்றி மக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் எஸ்பிஐ வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.