Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

பேடிஎம், பைஜூஸ் சிக்கல் குறித்த ஆய்வு - ICAI தலைவர் கூறுவது என்ன?

Paytm Payments Bank Ltd நெருக்கடிக்கு மத்தியில், அதன் நிதி அறிக்கை மறுஆய்வு வாரியம் (FRRB) fintech நிறுவனத்தின் பிரச்சினைகள் குறித்து விரைவில் விவாதிக்கலாம் என்று இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பேடிஎம், பைஜூஸ் சிக்கல் குறித்த ஆய்வு - ICAI தலைவர் கூறுவது என்ன?

Monday February 26, 2024 , 2 min Read

Paytm Payments Bank Ltd நெருக்கடிக்கு மத்தியில், அதன் நிதி அறிக்கை மறுஆய்வு வாரியம் (FRRB) fintech நிறுவனத்தின் பிரச்சினைகள் குறித்து விரைவில் விவாதிக்கலாம் என்று இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட்அப் உலகை கலக்கடிக்கும் வகையில் ஃபின்டெக் துறையில் மைல்கல் சாதனைகளை படைத்த பேடிஎம் மற்றும் எட்டெக் துறையில் கொடிகட்டிப் பறந்த பைஜூஸ் இரண்டும் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. நிதி நெருக்கடியில் பைஜூஸும், நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் பேடிஎம்மும் தடைகள், விசாரணைகள் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

Paytm Payments Bank

பேடிஎம், பைஜூஸ் - பின்னடைவு

இந்நிலையில், பேடிஎம் பேமெண்ட் பேங்க் லிமிடெட் (Paytm Payments Bank Ltd) நிறுவனத்தின் பிரச்சனைகள் குறித்து நிதி அறிக்கை மறுஆய்வு வாரியம் (FRRB) எதிர்காலத்தில் விவாதிக்கலாம் என இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார். தற்போது நிதி அறிக்கை மறுஆய்வு வாரியம் பைஜூஸ் கணக்குகளை மறு ஆய்வு செய்து வருவதாகவும் ரஞ்சித் குமார் கூறினார்.

இதற்கான கூட்டங்களை இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் கீழ் இயங்கும் நிதி அறிக்கை மறுஆய்வு வாரியத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மார்ச் மாதத்தில் நடத்தும் எனத் தெரிகிறது.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எடுத்துள்ள ஒழுங்குமுறை குறைபாடுகள் மற்றும் பேமென்ட் வங்கியின் கணக்கியலில் அவற்றின் தாக்கம் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியமா? என நிதி அறிக்கை மறுஆய்வு வாரியம் தீர்மானிக்கும் எனக்கூறினார்.

இதுகுறித்து இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் கூறுகையில்,

"யாரை மதிப்பாய்வு செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது வாரியத்தின் விருப்பமாகும். இது ஒரு வலுவான அமைப்பைக் கொண்டுள்ளது," என்கிறார்.

Paytm தொடர்பான புகாருக்காக ICAI காத்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

"இந்த நிறுவனம் தானாக முன்வந்தும் புகார்கள் மூலமாகவும் விசாரணையை மேற்கொள்ளலாம். BYJU'S வழக்கில், அது தானாக முன்வந்து எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பைஜூஸ் குறித்து பேசிய அவர், "வாரியத்தின் ஆய்வில் நல்ல முன்னேற்றம் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அறிக்கை எதிர்பார்க்கப்படும்," என்றார்.

Byjus

FRRB கட்டமைப்பு என்ன?

நிதி அறிக்கை மறுஆய்வு வாரியம் (FRRB) என்பது தொழில்நுட்பம், குழு மற்றும் மதிப்பாய்வு குழு என மூன்று அடுக்குகளைக் கொண்ட அமைப்பாகும்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை மதிப்பாய்வு செய்ய FRRB-க்கு அதிகாரம் உள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால்,

"மோசமான வழக்குகளில், நாங்கள் மேலும் விசாரணையைத் தொடர்கிறோம். சிறிய சிக்கல்கள் இருந்தால், நாங்கள் ஆலோசனை வழிகாட்டுதலை வழங்குகிறோம்,” என்றார்.

ஜூலை 2002 இல் நிறுவப்பட்ட இது ICAI இன் முக்கியமான பிரிவாகும், இது நிதி அறிக்கையிடல் நடைமுறைகளில் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது மற்றும் அதன் மூலம் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது.