Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தமிழக ஏரிகளை மீட்டெடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் சரவணன்!

பெங்களூருவில் மென்பொருள் பிரிவில் பணியாற்றும் சரவணன், நீர்நிலைகளை புதுப்பிக்க ’Wake Our Lake’ என்ற அமைப்பை நிறுவி, வார இறுதி நாட்களில் ஏரிகளை மீட்டெடுக்கும் பணிகளை தன்னார்வலர்களோடு மேற்கொண்டு தண்ணீர் தட்டுப்பாடுக்கு தீர்வு கண்டு வருகிறார்.

தமிழக ஏரிகளை மீட்டெடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் சரவணன்!

Monday July 01, 2019 , 2 min Read

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாமதமாகும் மழைப்பொழிவு, வறண்டுபோன ஏரிகள் என சென்னை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாகவே மாறிவருகிறது. எனினும் இந்த நிலை சென்னைக்கு மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.

தமிழகத்தின் கொல்லி மலையில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 36 வயது சரவணன் தியாகராஜன் தன்னுடைய கிராமத்தின் நிலையைக் கண்டதும் தண்ணீரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என தீர்மானித்தார். ஏரிகளை புதுப்பிக்க 2017-ம் ஆண்டு Wake Our Lake அமைப்பை நிறுவினார்.

இது நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் ஏரிகளையும் அதைச் சுற்றியுள்ள தாவரங்களையும் புதுப்பிக்கவும் வழிகாட்டுகிறது. இதன் வலைதளத்தில் இதற்கான வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
1

சரவணன் இதன் மூலம் மக்கள் தங்களது பகுதிகளில் தண்ணீரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட ஊக்குவிக்கிறார். உதாரணத்திற்கு தமிழகத்தின் தேனி பகுதியின் கிராமப்புற மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன், கழிவுநீரை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முற்பட்டுள்ளார். சரவணன் தனது முயற்சி குறித்து Edex Live உடனான உரையாடலில் கூறும்போது,

”இதற்காக கழிவு நீர் இயற்கையான முறையில் வடிகட்டப்படுகிறது. தமிழக கிராமப்புறங்கள் மற்றும் பெங்களூருவின் ஒரு சில பகுதிகளிலும் காடுகளை மீட்டெடுத்தல், ஏரிகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுகிறோம்,” என்றார்.

பெங்களூருவில் மென்பொருள் பிரிவில் பணியாற்றும் சரவணன் வார இறுதி நாட்களில் தனது கிராமத்திற்குச் செல்ல நேரம் ஒதுக்குகிறார். நரசிம்மன்காடு கிராமத்தில் ’தென்றல் ஏரி திட்டம்’ என்கிற பெயரில் ஏரிகளை மீட்டெடுப்பதற்கான இவரது முதல் திட்டம் 2017-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்த ஏரியில் தண்ணீர் வற்றிக்கொண்டிருந்தது. 800–1,000 அடி ஆழம் உள்ள போர்வெல் முழுமையாக வற்றிவிட்டதாக கணக்கெடுப்பு தெரிவித்தது. இது தாவரங்களையும் பாதித்துள்ளது. நீரின்றி பயிர்கள் மெல்ல அழிந்து போனது.

2

ஏரியை மீட்டெடுக்க சரவணன் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து இன்லெட் சானலை உருவாக்கத் துவங்கினார். ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

“நாங்கள் எங்கள் கைகளாலேயே ஒரு கிலோமீட்டர் நீள கால்வாயை தோண்ட ஆரம்பித்தோம். இந்த கால்வாய் அருகாமையில் உள்ள மலையில் இருந்து ஏரி வரை தோண்டப்பட்டது. விவசாயிகளுக்கு இந்த முயற்சியில் சந்தேகம் இருந்ததால் 10 முதல் 20 விவசாயிகள் மட்டுமே எங்களுக்கு ஆதரவளித்தனர். மழை பெய்தபோது ஏரி ஒரே இரவில் நிரம்பிவிட்டது. விவசாயிகளால் தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை,” என்றார்.

அதன் பிறகு இந்நிறுவனம் மற்றொரு திட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை களைச்செடிகள் அதிகளவில் இருந்ததால் வறண்டு போன பதஞ்சலி ஏரியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது. இது அருகாமையில் இருந்த தாவரங்கள் வளர்சிக்கு தடையாக இருந்தது.

கிராமத்தினரை ஈடுபடுத்தும் சரவணனின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிறுவனம் சிறப்பு இயந்திரம் கொண்டு களையை வேரோடு பிடுங்கி அவற்றை மறுபயன்பாட்டிற்கு உகந்த பயோமாஸாக மாற்றியது.

சரவணன் இத்தகைய பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தற்போதுள்ள நீர்நிலைகளை பாதுகாப்பதில் தனிநபர்கள் தீவிரமாக பங்களிக்கவேண்டும் என்று விரும்புகிறார். தமிழக கிராமங்கள் முழுவதும் பசுமை போர்வை அதிகரிக்க தரிசுநிலங்களில் விதைப்பந்துகளை நடுவதற்காக இவர் இந்திய அறிவியல் நிறுவனத்துடன் (ஐஐஎஸ்சி) இணைந்து செயல்படுகிறார்.

கட்டுரை: THINK CHANGE INDIA