HCL தலைவர் ஆன ரோஷ்னி நாடார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 2019-ம் ஆண்டில் 36,800 கோடி ரூபாய் மதிப்புடன் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ‘உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலில் 54வது இடத்தில் இருந்தார்.
ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்துள்ளார். இருப்பினும் அவர் நிர்வாக இயக்குநராகவும் நிறுவனத்தின் தலைமை மூலோபாய அதிகாரியாகவும் பொறுப்புகளைத் தொடர உள்ளார்.
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா குறித்த சில முக்கியத் தகவல்களை இங்கு பார்ப்போம்:
- ஷிவ் நாடாரின் ஒரே மகளான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராகவும் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் துணை தலைவராகவும் இருந்தார்.
- 2019-ம் ஆண்டில் 36,800 கோடி ரூபாய் மதிப்புடன் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 'உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலில் 54-வது இடத்தில் இருந்தார்.
- ரோஷ்னி டெல்லியில் வளர்ந்தவர். வசந்த் வேலி பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.
- பின்னர் அமெரிக்கா சென்று இல்லினாய் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் சார்ந்த தகவல் தொடர்பு துறையில் பட்டப்படிப்பு முடித்தார்.
- அதன் பிறகு Kellogg School of Management-ல் முதுநிலை வணிக நிர்வாகம் படித்தார். இதில் சமூக நிறுவன மேலாண்மை மற்றும் ஸ்ட்ராடெஜி முக்கியப் பாடமாகத் தேர்வு செய்திருந்தார்.
- இந்தியா திரும்பி வேறு சில நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் சேர்ந்தார்.
- ஓராண்டில் ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் ஆனார்.
- ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் ட்ரஸ்டி மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான VidyaGyan Leadership Academy தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
- ஹெச்.சி.எல் கார்ப்பரேஷனில் இணைந்து நான்காண்டுகளுக்குப் பின்னர் 2013-ம் ஆண்டு ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் கூடுதல் இயக்குநர் (Additional Director) ஆனார்.
- வனவிலங்குகளை பாதுகாப்பில் தொடர்ந்து பங்களித்து வரும் ரோஷ்னி நாடார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு The Habitats Trust என்கிற அறக்கட்டளையைத் தொடங்கினார்.
- 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்.
தகவல் உதவி: நியூஸ்பைட்ஸ்