Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

ரொக்கத்தைவிட டிஜிட்டல் பரிவர்த்தனையை நாடும் சிறு தொழில்கள்...

பெருந்தொற்றுக்கு நடுவே தங்கள் பிராண்டின் ஆன்லைன் இருப்பை மேம்படுத்த 23 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இ-காமர்ஸ் தளங்களில் பதிவு செய்து கொண்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ரொக்கத்தைவிட டிஜிட்டல் பரிவர்த்தனையை நாடும் சிறு தொழில்கள்...

Thursday July 15, 2021 , 2 min Read

வெப் ஹோஸ்டிங் நிறுவனமான புளுஹோஸ்ட் (Bluehost ) நடத்திய ஆய்வில், இந்தியாவுல் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) ரொக்கத்தை விட டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் நாடுவது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற 400 எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் 72 சதவீத நிறுவனங்கள் ரொக்கத்தை விட டிஜிட்டல் பரிவர்த்தனையை விரும்புவதாக தெரிவித்துள்ளன.


கொரோனா பாதிப்பை அடுத்து, வர்த்தக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியாது என உணர்ந்துள்ளன. இதன் காரணமாக, நிறுவனங்கள் மத்தியில் குறிப்பாக எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மத்தியில் இந்த மாற்றம் வேகமாக நிகழ்கிறது.

சிறு தொழில்

இந்தியாவில் உள்ள எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் 19 சதவீத நிறுவனங்கள் கொரோனாவுக்கு பிறகு இணையதளத்தை துவக்கியுள்ளன. தொழில்முறை தோற்றத்தை பெறுவது, பிராண்டை விளம்பரம் செய்வது மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.


பங்கேற்பாளர்களில் 66 சதவீதம் பேர் தாங்களே சொந்தமாக இணையதளம் உருவாக்கிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், 34 சதவீதம் பேர் வெளி வடிவமைப்பாளர்கள் உதவியை நாடியுள்ளன. 23 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் இருப்பை மேம்படுத்திக்கொள்ள இ-காமர்ஸ் தளங்களில் இணைந்துள்ளன.

சிறு தொழில்கள்

"பல சிறு தொழில் நிறுவனங்கள் கடந்த ஆண்டு டிஜிட்டல் மாற்றத்தை எதிர்கொண்டன மற்றும் அவர்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான பல கருவிகள் ஏற்பட்டுள்ளன. இணையதளங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை, இ-காமர்ஸ் போன்ற டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்துவது சிறு தொழில்கள் சமூக இடைவெளிச் சூழலில் வர்த்தகத்தை தொடர உதவியுள்ளது,” என்கிறார் புளுஹோஸ்ட் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் தலால்.

இந்திய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் நாட்டின் ஜிடிபியில் 30 சதவீதம் பங்களிக்கின்றன. ஏற்றுமதியில் 48 சதவீதம் பங்களிக்கின்றன. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான இந்தத் துறை கொரோனா சூழலில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


ரீடைல், கல்வி சேவைகள், தொழில்நுட்பச் சேவைகள், வலைப்பதிவாளர்கள், ஆலோசகர்கள், பயணம், நிதி ஆகிய துறைகளைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மத்தியில் 2021 ஜூன் மாதம் புளுஹோஸ்ட் இந்த ஆய்வை நடத்தியது.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்