Cowin ஆப்-ல் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய உதவும் RapiPay!
வாடிக்கையாளர்களின் நலன் காக்க புதிய முயற்சி!
இந்தியாவில் வளர்ந்து வரும் ஆன்லைன் உதவி கட்டணச் சேவை நிறுவனமான RapiPay, தற்போது நாடு எதிர்கொண்டு வரும் கொரோனா சூழலில் மக்களுக்கு குறிப்பாக அதன் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பூசி தேடல் மற்றும் பதிவுக்கு உதவும் வகையில் ராபிபே சேவையைத் தொடங்குகிறது. RapiPay தனது வலைத்தளத்திலும் ஆப் பயன்பாட்டிலும் ஒரு ஆப்ஷனை சேர்த்துள்ளது. இந்த ஆப்ஷன் மூலம், தடுப்பூசி முன்பதிவு வலைத்தளமான CoWin இணையத்தில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசி தரவை நேரடி அடிப்படையில் இணைக்கிறது.
மேலும், தங்கள் நிறுவனத்தின் ஏஜென்ட்கள், வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை முன்பதிவு செய்ய ராபிபே தனது வலைத்தளத்திலும் ஆப் பயன்பாட்டிலும் கோவின் இணையத்தின் லிங்கை இணைந்துள்ளது.
இதேபோல், RapiPay-யின் பி 2 பி ஆப் பயன்பாட்டை சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் என 5 லட்சம் பேர் install செய்துள்ளனர். மேலும், அதன் நாடு தழுவிய சில்லறை விற்பனையாளர்களின் நெட்வொர்க் (ராபிபே சாத்திஸ் என அழைக்கப்படுகிறது) இரண்டு லட்சம் பேர் வரை இன்ஸ்டால்களை கொண்டுள்ளது.
இதற்கிடையே, இந்த ராபிபே அம்சம் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள தொழில்நுட்பமற்ற பயனர்கள் CoWin பயன்பாட்டில் தடுப்பூசி பதிவு செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
”இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் நமது முயற்சியைச் செய்ய வேண்டும். இந்த முயற்சியின் மூலம், தடுப்பூசி பதிவு செய்வதை எங்கள் நேரடி வணிக விற்பனை நிலையங்கள் (டிபிஓக்கள்) மூலம் எளிதாக்க முடியும், அவர்கள் ராபிபேவை தங்கள் வணிகத்திற்காக தினமும் பயன்படுத்துகிறார்கள்," என்று இது தொடர்பாக ராபிபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யோகேந்திர காஷ்யப் என்பவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையை தடுக்க, தடுப்பூசி கட்டாயமாகிவிட்டது. இந்த மாத தொடக்கத்தில் 18+ வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை அரசாங்கம் திறந்தது. ஆனால் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுவதற்கான ஸ்லாட்கள் கிடைக்காதது மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஆகியவை சரியான நேரத்தில் தடுப்பூசி போடும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 8, 2021 நிலவரப்படி, இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 2.5 சதவிகிதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். அதே நேரத்தில் 9.8 சதவிகிதத்தினர் மட்டுமே குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர் என்று அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், நேற்று இந்தியா முழுவதும் 3.66 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது பாதிப்பின் மொத்த எண்ணிக்கையை 2.26 கோடியாக உயர்த்தியுள்ளது. தினசரி இறப்புகள் முந்தைய நிலைகளை மீறி 3,754 ஆக உயர்ந்துள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை தற்போது ஒரு நாளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய கொரோனா பாதிப்புகள் 73.9 சதவீதமாக உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, அதைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் உள்ளன.