Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ், நிப்டி சற்றே உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று செவ்வாய்கிழமையன்று (11-06-2024) தொடக்க நிலவரப்படி, சற்றே உயர்வுடன் காணப்பட்டன. பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 163 புள்ளிகள் அதிகரித்துக் காணப்பட்டது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று செவ்வாய்கிழமையன்று (11-06-2024) தொடக்க நிலவரப்படி, சற்றே உயர்வுடன் காணப்பட்டன. பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 163 புள்ளிகள் அதிகரித்துக் காணப்பட்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 163.88 புள்ளிகள் உயர்ந்து 76,653.96 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடும் 53.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 23313 புள்ளிகளாகவும் இருந்தன.
நிப்டி பேங்க் குறியீடு 77 புள்ளிகளும் நிப்டி ஐடி 54.35 புள்ளிகளும் பிஎஸ்.இ. ஸ்மால் கேப் 418.26 புள்ளிகளும் அதிகரித்துள்ளன. நிப்டி மிட் கேப் 371 புள்ளிகள் அதிகரித்தும் நிப்டி பார்மா 22 புள்ளிகள் அதிகரித்தும் காணப்பட்டன.
காரணங்கள்:
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் புதன் கிழமை கூடுவதால், வட்டி விகிதக் குறைப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் பாசிட்டிவ் ஆக இருப்பதால் பங்குச் சந்தையில் சற்றே முதலீடுகள் கூடியுள்ளன.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
என்.டி.பி.சி.
டாடா ஸ்டீல்
நெஸ்ட்லே இந்தியா
மகீந்திரா அண்ட் மகீந்திரா
லார்சன் அண்ட் டூப்ரோ
ஹெச்.சி.எல்
அதானி போர்ட்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஏஷியன் பெயிண்ட்ஸ்
பார்தி ஏர்டெல்
ஐசிஐசிஐ வங்கி
பஜாஜ் பைனான்ஸ்
டாக்டர் ரெட்டீஸ் லேப்
எஸ்பிஐ லைஃப்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமடையாமல் டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.49 ஆக உள்ளது.