திறமைகளை வெளிப்படுத்தி சினிமா, மீடியாவில் வாய்ப்பு கிடைக்க உதவும் ஆப் உருவாக்கிய சுனில் ஷெட்டி குழு!

By YS TEAM TAMIL|16th Oct 2020
திறமையுடன் வாய்ப்பு தேடுவோரையும் வாய்ப்புகள் இருந்தும் சரியான திறமைசாலிகளை தேடுவோரையும் ஒன்றிணைக்கும் FTC Talent செயலி சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

நடிகர் சுனில் ஷெட்டி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். துறைசார்ந்த சரியான நபர்களை அணுகுவதே இவர் சந்தித்த மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹாலிவுட், கனவுகளின் உலகம் என்று சொல்லபட்டாலும் பலர் வாய்ப்புகளைத் தேடுவதிலேயே தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் செலவிடவேண்டியுள்ளது.


வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படும் திறமைசாலிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக சுனில், செயலி ஒன்றை உருவாக்கத் தீர்மானித்தார். இந்த நோக்கத்திற்காக உருவானதுதான் FTC Talent செயலி.


பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் துறையினரின் ஒட்டுமொத்த தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே தளமாக இது செயல்படுகிறது. இந்தச் செயலி திறமையானவர்களை ஒருங்கிணைத்து பயிற்சியளித்து தயாரிப்பாளர்களுடன் இணைக்கிறது.

“திரைப்படங்கள், தொலைக்காட்சி, தியேட்டர், நிகழ்வுகள், போட்டிகள், டிஜிட்டல், ஓடிடி உள்ளடக்கம் என ஒவ்வொருவரும் திறமைமிக்க நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், எடிட்டர்கள் போன்றோரையே விரும்புகின்றனர். FTC Talent செயலியில் நாங்கள் உலகளாவிய திறமைகளை வழங்குகிறோம். ஏனெனில் எங்கள் செயல்பாடுகள் அனைத்தும் செயலி மற்றும் வலைதளம் மூலமாகவே நடைபெறுகிறது,” என்கிறார் FTC Talent சிஎஃப்ஓ பிரியா ஷெட்டி.

ஆத்ம நிர்பர் போட்டியில் வெற்றி

பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி போட்டியின் வெற்றியாளர்களில் FTC Talent செயலியும் அடங்கும். யுவர்ஸ்டோர் உடனான உரையாடலில் சுனில் ஷெட்டி கூறும்போது,

“இந்தப் போட்டியில் வெற்றிபெற குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கடின உழைப்பிற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தப் போட்டிக்கான அறிவிப்பு வெளியானதும் குழுவினர் இரவு பகலாக உழைத்து, எல்லோரும் எல்லா நேரத்திலும் எளிதாக அணுகக்கூடிய வகையில் ஆப் உருவாக்கியுள்ளனர்,” என்றார்.
2
“எங்கள் துறையின் நலனில் பங்களிக்க இந்த முயற்சி உதகிறது. கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதை இது உறுதிசெய்யும். மக்கள் தங்களது வீடியோக்களை செயலியில் பதிவு செய்து அனுப்பலாம். பல முறை அவர்கள் பதிவு செய்து இறுதியான பதிவை அனுப்பலாம். அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் முயற்சியின் நோக்கம்,” என்றார்.

வாய்ப்பு தேடுவோர் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். Ftctalent.com அல்லது FTC Talent செயலியில் பதிவு செய்தால் போதும். இவ்வாறு பதிவு செய்ததுமே பணி வாய்ப்புத் தேடத் தயாராகிவிடுகிறார்கள். மற்றொருபுறம் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையினர் பிராஜெக்ட்ஸ் குறித்தும் வேலை குறித்தும் பதிவிடலாம்.


ஆடிஷனுக்கான கோரிக்கையை முன்வைத்து பல்வேறு ஆடிஷன் சுற்றுகளை மதிப்பிடலாம். சரியான நபர்களை பணியமர்த்தி செயலி மற்றும் போர்டல் மூலம் ஆன்லைனில் பணத்தை செலுத்திவிடலாம்.

3

சந்தை நிலவரம்

தற்சமயம் இந்தத் துறையில் திறமையானவர்களைக் கண்டறியும் முறை ஒழுங்கமைக்கப் படாமல் உள்ளது என்கிறார் பிரியா. ஆடிஷன் செயல்முறை முறையாக நடத்தப்படுவதில்லை என்கிறார்.


இதுபோன்ற தரகர்களின் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் என்பதே ஆரம்பகட்ட திட்டமாக இருந்தது என்கிறார் பிரியா. எனினும் திறமைகளை வெளிக்கொணரும் செயல்முறைகளை ஆன்லைனில் மேற்கொள்வதற்கு மக்களை இணைத்துக்கொள்வது கடினமாக இருந்துள்ளது. மேலும் சொந்த திறன் கொண்டு ஆர்கானிக்காக வளர்ச்சியடைவதும் சவாலாக இருந்துள்ளது.

“மக்கள் பரிந்துரைக்கத் தொடங்கினார்கள். சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவத் தொடங்கியது. நாங்கள் அமெரிக்கா, கனடா, யூகே, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளில் வேகமாக வளர்ச்சியடைந்தோம். 3,00,000 பேர் கொண்ட குடும்பமாக வலுவாக வளர்ச்சியடைந்துள்ளோம். தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்,” என்றார் பிரியா.

இக்குழுவினர் 2016ம் ஆண்டில் மும்பை மேற்கு அந்தேரியில் உள்ள ஆரம் நகரில் கண்டெண்ட் புரொடெக்‌ஷன் அலுவலகத்தைத் தொடங்கியுள்ளனர். 2018-ம் ஆண்டு ஆன்லைன் FTC Talent தளத்தைத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆண்ட்ராய்ட் மொபைல் செயலியையும் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் iOS செயலியையும் அறிமுகப்படுத்தினர்.

குழு மற்றும் சந்தை

“எங்கள் அபிரிமிதமான வளர்ச்சி சொந்த திறன் மூலமாகவே சாத்தியமாகியுள்ளது. தற்போது எங்கள் செயலி சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி போட்டியில் வென்றுள்ளது. பிரதமரிடம் பாராட்டைப் பெற்றுள்ளது,” என்கிறார் பிரியா.

சுனில் ஷெட்டி, இணை நிறுவனர் சுஜாதா ஷெட்டி ஹெக்டே ஆகியோர் இளம் பங்குதாரர்களுடன் இணைந்து இந்த செயலிக்கான திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தற்சமயம் ஆலோசகர்கள் உட்பட 40 பேர் கொண்ட குழுவாக செயல்படுகின்றனர்.


2024-ம் ஆண்டில் சந்தை மதிப்பு 3.1 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. UpCast, TableRead, WeAudition, BackStage Casting போன்ற பல்வேறு சர்வதேச கேஸ்டிங் செயலிகள் உள்ளன. எனினும் FTC Talent இந்திய சந்தை மற்றும் துறையை சரியாக புரிந்துகொண்டு செயல்படுகிறது.

இந்திய சந்தை தேவைகளுக்கு முக்கியத்துவம்

மக்கள் விரிவான ப்ரொஃபைல் உருவாக்கலாம்; புரொடக்‌ஷன் ஹவுஸ், இயக்குநர்கள், நிகழ்வு மேலாளர்கள், கேஸ்டிங் இயக்குநர்கள் போன்றோர் வெளியிடும் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான முழுமையான ஆன்லைன் தீர்வாக FTC Talent உள்ளது என பிரியா விவரிக்கிறார்.


ஒவ்வொரு ப்ரொஃபைலிலும் திறன், ஆளுமை, புறத்தோற்றம், ஆர்வம், ஃபோட்டோ/ஆடியோ/டிஜிட்டல் போர்ட்ஃபோலியோ, முந்தைய பிராஜெக்டுகளின் அனுபவம் போன்றவை வெளிப்படுத்தப்படும்.

1

இதில் வெளியிடப்படும் ஒவ்வொரு பணி வாய்ப்புக்கும் சரியான திறனை இந்தத் தளத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தானாகவே பொருத்திவிடும். திறமை இருந்து வாய்ப்பு தேடுவோர்களுக்கும் திறமையானவர்களுக்கு வாய்ப்பளிப்பவர்களுக்கும் இது பலனளிக்கும்.


ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பணியமர்த்துவோர் ஆன்லைனில் மதிப்பிடலாம். அதேபோல் பணியமர்த்துவோர் ஆன்லைனில் பல சுற்றுகளாக ஆடிஷன் நடத்தி ஆன்லைனிலேயே திறமையானவர்களைத் தேர்வு செய்யும் வசதி உள்ளது. திறமையானவர்களைத் தேடும் ஒவ்வொரு பிராஜெக்டும் தளத்தில் வெளியிடப்படுவதற்கு முன்பு சரிபார்க்கப்படுகிறது.

வருவாய் மற்றும் வருங்காலத் திட்டம்

இந்தச் ஆப் தற்போது மதிப்பு கூட்டப்பட்ட கட்டணங்களுடன் சந்தா மாதிரியை பின்பற்றுகிறது. விளம்பரங்கள் மற்றும் விற்பனை மூலம் வருவாய் ஈட்டவும் ஃப்ரான்சைஸ் முறையில் பார்ட்னர்ஷ்ப்பில் இணையவும் இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்


FTC Talent எதிர்கால பிராடக்ட் டெவலப்மெண்ட்களுக்கும் தளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

“அடுத்த சில ஆண்டுகளில் திறன்மிக்கவர்கள் அடங்கிய 10 மில்லியனுக்கும் அதிகமான ஆன்லைன் டேட்டாபேஸ் உருவாக்கவும் 1,00,000 என்கிற எண்ணிக்கையில் பணி வாய்ப்பு வழங்குவோரை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் பிரியா.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Register now! #TechSparksFromHome