‘சர்வைவர் தொடர்’ - ஜவுளி தொழிலாளி வனஜாவின் வாழ்வில் போராட்டக் குணத்தை விதைத்த ‘ஸ்வஸ்தி’
இந்த வாரம் சர்வைவர் தொடரில், ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வனஜாவின் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறோம்...
இந்த வாரம் சர்வைவர் தொடரில், ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வனஜாவின் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறோம்...
நான் வனஜா, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியார் கிராமத்தைச் சேர்ந்தவள். அங்கு நான் ஒரு முன்னணி ஜவுளித் தொழிற்சாலையில் ஆடைகளை பேக்கிங் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.
தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, லாப நோக்கமற்ற 'ஸ்வஸ்தி அறக்கட்டளை' வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன்.
2006 ஆம் ஆண்டு முதல், ஸ்வஸ்தி, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதற்காக, தொழிற்சாலைகளுடன் கூட்டு சேர்ந்து, கொள்கைகளில் கவனம் செலுத்தி, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.
2016ல், நான் ஒரு ToT (பயிற்சியாளர்களின் பயிற்சியாளர்) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயிற்சி அமர்வுகளின் போது, நான் தகவல் தொடர்பு திறன்களை பெற்றிருந்தேன். மேலும், எனது பலத்தை அடையாளம் கண்டு தலைமைத்துவ திறன்களை உருவாக்க முடிந்தது.
பயிற்சிக்குப் பிறகு, விடுமுறையில் சென்ற மற்றொரு சூப்பர்வைரசரின் வேலையையும் பார்த்துக்கொள்ளும் படி தொழிற்சாலை நிர்வாகம் என்னிடம் கேட்டுக்கொண்டது. இந்த நேரத்தில், புரோடக்ஷன் லைனை சூப்பர்வைஸ் செய்து கொண்டிருந்தேன்.
20 தொழிலாளர்களை மேற்பார்வையிட்டு வந்தேன். தொழிலாளர்களுக்கும் எனக்கும் இடையே முறையாக தகவல் தொடர்பை திட்டமிட்டிருந்ததால், வார இறுதியில் திட்டமிட்டதை விட அதிக உற்பத்தியை அடைய முடிந்தது. இதனால் நிர்வாகத்திடம் இருந்து பாராட்டு கிடைத்தது. இப்போது பல பொறுப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
மேலும், தனிப்பட்ட மற்றும் மாதவிடாய் சுகாதாரம் உட்பட பல்வேறு சுகாதார தலைப்புகளில் எனது சக பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன், இதனால் எனது நம்பிக்கையின் அளவை பெரிதும் மேம்படுத்தியுள்ளது.
தற்போது அக்குபஞ்சர் மருத்துவம் கற்று வருகிறேன். எனது அக்குபஞ்சர் சிகிச்சை மையத்தை விரைவில் தொடங்க விரும்புகிறேன். ஸ்வஸ்தி அளித்த மேம்பாட்டு பயிற்சியால் எனது நம்பிக்கையும், தைரியமும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அக்குபஞ்சர் மருத்துவ வசதியை தொடங்க திட்டமிட்டுள்ளேன். குடும்ப வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகp போராட வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை செய்ய விரும்புகிறேன். நான் முற்றிலும் மாறிவிட்டேன், நான் வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். இதற்குக் காரணம் தொழிற்சாலை, வால்மார்ட் மற்றும் ஸ்வஸ்தி ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மை மூலம் நான் பெற்ற பயிற்சிகள் தான்.
ஆங்கிலத்தில் வனஜா; தமிழில் - கனிமொழி