ரூ.1500 கோடி முதலீட்டில் பணப்பாக்கத்தில் தைவான் காலணி உற்பத்தி ஆலை தொடக்கம்!
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.1500 கோடி முதலீட்டில் அமைந்துள்ள தைவான் நாட்டின் ஹாங் ஃபூ தொழில் குழுமத்தின் காலணி உற்பத்தி ஆலை திட்டத்தை மெய்நிகர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.1500 கோடி முதலீட்டில் அமைந்துள்ள தைவான் நாட்டின் 'ஹாங் ஃபூ' தொழில் குழுமத்தின் காலணி உற்பத்தி ஆலை திட்டத்தை மெய்நிகர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
உலகின் இரண்டாவது பெரிய தோல் அல்லாத காலணி உற்பத்தி நிறுவனமான ஹாங் ஃபூ குழுமம் ஆண்டுக்கு 200 மில்லியன் ஜோடி காலணிகளை உற்பத்தி செய்து 3 பில்லியன் டாலர் வருவாய் பெறுகிறது.
நைக்கி, கான்வர்ஸ், பூமா, அடிடாஸ், ரீபோக் உள்ளிட்ட சர்வதேச பிராண்ட்களின் நம்பகமான பங்குதாரர் நிறுவனமான தமிழ்நாட்டில் அடியெடுத்து வைப்பது மாநில தொழில் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகும்.
இந்த உற்பத்தி ஆலை, 25,000 ஊழியர்களைக் கொண்டிருக்கும். இவர்களில் 85 சதவீதம் பெண் ஊழியர்கள் என்பது தமிழ்நாட்டின் உள்ளடக்கிய கொள்கைக்கு ஏற்ப அமைகிறது. அடுத்த அண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆலை செயல்படத்துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஹாங்காங், தைவான், வியட்னாம், இந்தோனேசியா, மியான்மர் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகள் கொண்டுள்ள நிலையில் இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தாக்கம், இந்த முதலீட்டை இயல்பானதாக மாற்றுக்கிறது,” என இந்த ஆலை அமைப்பது பற்றி ஹாங் ஃபூ குழும தலைவர் டிஒய் சாங் தெரிவித்தார்.
அவரது மகனும் நிறுவன இயக்குனருமான ஜேக்கி சாங், இந்த ஆலை அமைக்க மாநில மற்று இந்திய அரசின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
கூட்டு முயற்சி பங்குதாரர் மற்றும் இந்த திட்டத்தின் பங்குதாரரான அகீல் பனரூனா முயற்சியால் இந்த குழுமம் தமிழகத்தை நுழைகிறது.
“இந்த ஆலை உலகத்தரம் வாய்ந்த காலணி உற்பத்தி வசதியாக அமைவதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். மாநில முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்,“ கூறினார்.
தைவான் குழுமம், தமிழ்நாடு அரசுடன் இரண்டு கட்டமாக ரூ.1.500 கோடி முதஒலீட்டிற்கான புரிந்துண்ரவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பணப்பாக்கம் ஆலை நாட்டின் காலணி உற்பத்தி சூழலுக்கு சிறந்த வருகை, என தோல் ஏற்றுமதி குழு செயல் இயக்குனர் ஆர்.செல்வம் கூறினார்.
Edited by Induja Raghunathan